என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா
- சேத்தூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது
- சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்,
சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா பேரூராட்சி பகுதிகளில் புகையில்லா பொங்கல் விழா நடத்திட வழிமுறைகளை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் அறிவுரைகளின்படி சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றும், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நகர்ப்புற தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முதல் பஸ் நிலையம் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பேரூராட்சி மன்றத்தலைவர் பாலசுப்பிரமணியன் செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் காளீஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.