search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம்-கலெக்டர்
    X

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம்-கலெக்டர்

    • குழந்தைகளுக்கான தேவைகள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.

    விருதுநகர்

    குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான குற்றங்களை தடுத்து குழந்தைகள் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவதற்கும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசால் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆணையம் மூலம் நாடு முழுவதும் 727 மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகள், குறைகளுக்கு 3 மாதங்களுக்குள் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஆணையத்தின் முதல் கட்ட அமர்வு விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் குழந்தைகள் உரிமை மீறல் பிரச்சினை மற்றும் குறைகளை கேட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த அமர்வில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பு, ஊட்டச்சத்து, வளர்ச்சி, கல்வி, மருத்துவம், மன மற்றும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள், குழந்தை தொழிலாளர், குழந்தைத்திருமணம் மற்றும் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் சார்ந்த பிரச்சினைகள், குழந்தைகளின் இதர உரிமை மீறல் தொடர்பான பிரச்சி னைகள், குறைபாடுகள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள் குறித்த மனுவினை பாதிக்கப்பட்ட குழந்தைகள், பள்ளி குழந்தைகள், குழந்தை கள் இல்லங்கள், விடுதிக ளில் தங்கியுள்ள குழந்தை கள், பெற்றோர், பாதுகாவ லர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் மாவட்டத்தில் பிப்ரவரி 24-ந் தேதி நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு கூட்டத்தில் நேரடியாக மனுவினை வழங்கலாம்.

    இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×