search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Equality"

    • தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
    • இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.

    தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.

    ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:

    யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.

    யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.

    அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)

    மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.

    இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.

    இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

    இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.

    ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).

    இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.

    அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.

    • தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்துள்ளது, இன்போசிஸ்
    • வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்றார் என்ஆர்என்

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, இன்போசிஸ் (Infosys).

    1981ல், தனது 6 நண்பர்களுடன் இந்நிறுவனத்தை தொடங்கியவர் என்ஆர் நாராயண மூர்த்தி (78).

    தற்போது ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனமாக வளர்ந்து உலகெங்கும் பிரபலமடைந்துள்ள இன்போசிசின் நிறுவனரும், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர், எளிமையான வாழ்க்கை முறையை வலியுறுத்தி வருபவர்கள்.

    நாராயண மூர்த்தி தனது வீட்டு கழிவறையை தானே தினமும் சுத்தம் செய்கிறார்.

    பொதுவாக, பெரும் பணக்கார குடும்பங்களில் இது கவுரவம் குறைந்த செயலாக பார்க்கப்பட்டு இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது:

    நமது சமூகத்தில் தங்கள் வீட்டு கழிவறையை தானே சுத்தம் செய்பவர்களை கீழ்த்தரமாக பார்ப்பவர்களும் உண்டு.

    இந்த எண்ணம் இதற்கு முன் பல பணக்கார குடும்பங்கள் உருவாக்கியிருந்த ஆதிக்க மனப்பான்மையின் விளைவு. இது போன்ற எண்ணங்களால்தான் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரிவுகள் தோன்றுகின்றன.

    என் குழந்தைகள் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள். எதையும் கேட்டு தெரிந்து கொள்வதில் விருப்பமுடையவர்கள். எனவே என் குழந்தைகளுக்கு நான் இதன் மூலம், "நம்மை விட தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை" என்பதை அடிக்கடி உணர்த்த முடிகிறது.

    பிறரை மதிப்பதற்கான பல சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று என எனது குழந்தைகளுக்கு அன்புடனும் அரவணைப்புடனும் நான் கூறுவேன்.

    சமுதாயத்தில் நாம் அடக்கமாக இருக்க வேண்டும். சில நேரம் நமக்கு சமுதாயத்தில் கிடைக்கும் சற்று அதிக பயன்களை நீடித்த சலுகையாக நினைக்க கூடாது.

    வாழ்க்கையில் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி தெரிவித்தார்.

    தனது எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டதற்கு பேரக்குழந்தைகளுடன் நேரம் கழிக்கவும், புத்தகங்கள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் நேரத்தை செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


    • போலீஸ் நிலையம் அருகே உள்ள சுவரில் ஆண், பெண் சமத்துவம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளது.
    • சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழே இருப்பதாக கருதும் நிலை மாற வேண்டும்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சரகத்திற்குட் பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் அம்பையில் உள்ளது. இங்கு அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் தொடர்பான பிரச்சினை களுக்கு புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

    இங்கு உள்ள சுற்றுச் சுவர்களில் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் முயற்சியால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

    குறிப்பாக போலீஸ் நிலையம் அருகே உள்ள சுமார் 10 அடி உயர சுவரில் ஆண், அதற்கு ஈடாக பெண் நடனமாடுவது, அதில் ஆண், பெண் சமத்துவம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கருத்துக்கள் எழுதப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்த ஓவியங்கள் நடராஜர் வடிவத்தில் வரையப்பட்டிருந்தாலும் இதன் மூலம் சாதி, மதம் போன்ற பேதங்களை கடந்து உள்ளதாக காவல்துறையும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழே இருப்பதாக கருதும் நிலை மாற வேண்டும். மது ஒழிப்பு, போக்சோ குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். இங்கு பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சில நேரங்களில் வரும்போது இந்த ஓவியங்கள் மூலம் நிச்சயமாக அவர்கள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • சேத்தூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது
    • சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்,

    சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா பேரூராட்சி பகுதிகளில் புகையில்லா பொங்கல் விழா நடத்திட வழிமுறைகளை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் அறிவுரைகளின்படி சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இதில பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றும், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நகர்ப்புற தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலகம் முதல் பஸ் நிலையம் மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பேரூராட்சி மன்றத்தலைவர் பாலசுப்பிரமணியன் செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் காளீஸ்வரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், காவலூர் ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் என்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் ராபியா முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் செல்வபாரதிகண்ணன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பொங்கல்விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், ஊராட்சி பணியாளர்கள் புதுப்பானை வைத்து பச்சரிசி பொங்கலிட்டு சாமிக்கு படைத்தனர். பின்னர் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கிராம வருவாய் அலுவலர் தேவி, பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், ஊராட்சி செயலர் அபிஷா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் செங்கரும்பு வழங்கினார்.

    • உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    உதயமார்தாண்டபுரம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளரக கலந்து கொண்டார்.

    ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தூய்மை ஊழியர்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற துைண தலைவர் புவனேஸ்வரி விஜயபாஸ்கர், 1-வது வார்டு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், 4-வது வார்டு உறுப்பினர் கவிதா தெய்வராஜன், 5-வது வார்டு உறுப்பினர் செல்லப்பா என்கிற தாஜுதீன், 6-வது வார்டு உறுப்பினர் அஜிரன் அலிமா காதர், 7-வது வார்டு உறுப்பினர் வாசுகிஅண்ணாதுரை, 8-வது வார்டு உறுப்பினர் ராயல்காதர், ஊராட்சியின் திட்ட ஒருங்கினைப்பாளர் உஷா பணி மற்றும் அனைத்து பணிதள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஊராட்சியின் அனைத்து பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    முடிவில் ஊராட்சி செயலர் பிரவீனா நன்றி கூறினார்.

    ×