search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பை மகளிர் போலீஸ் நிலையத்தில்  ஆண், பெண் சமத்துவ ஓவியங்கள்
    X

    போலீஸ் நிலைய சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.

    அம்பை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆண், பெண் சமத்துவ ஓவியங்கள்

    • போலீஸ் நிலையம் அருகே உள்ள சுவரில் ஆண், பெண் சமத்துவம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளது.
    • சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழே இருப்பதாக கருதும் நிலை மாற வேண்டும்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சரகத்திற்குட் பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் அம்பையில் உள்ளது. இங்கு அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் தொடர்பான பிரச்சினை களுக்கு புகார்கள் பெறப்பட்டு வருகிறது.

    இங்கு உள்ள சுற்றுச் சுவர்களில் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் முயற்சியால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

    குறிப்பாக போலீஸ் நிலையம் அருகே உள்ள சுமார் 10 அடி உயர சுவரில் ஆண், அதற்கு ஈடாக பெண் நடனமாடுவது, அதில் ஆண், பெண் சமத்துவம் உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய கருத்துக்கள் எழுதப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்த ஓவியங்கள் நடராஜர் வடிவத்தில் வரையப்பட்டிருந்தாலும் இதன் மூலம் சாதி, மதம் போன்ற பேதங்களை கடந்து உள்ளதாக காவல்துறையும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு கீழே இருப்பதாக கருதும் நிலை மாற வேண்டும். மது ஒழிப்பு, போக்சோ குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். இங்கு பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் சில நேரங்களில் வரும்போது இந்த ஓவியங்கள் மூலம் நிச்சயமாக அவர்கள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றனர்.

    Next Story
    ×