என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அருப்புக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி வாசல், ஜமாத்தார்களால் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜமாத் தலைவர் முகமது சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

    நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளி வாசல் செயலாளர் சேக் உதுமான் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்- வக்புவாரிய தலைவர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டார். பள்ளிவாசல் கல்வெட்டை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் திறந்து வைத்து பேசினர்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அரசு ஹாஜி நவாஸ் கான்மஹ்லரி, துணை இமாம் அபூசவூது, தலைமை இமாம் நஸீர் அகமதுஆலிம்பைஜி, பொருளாளர் முகமது சிக்கந்தர், கட்டிடகமிட்டி சாகுல்ஹமீது, செய்யது மசூது, அப்துல்காதர், நிர்வாகிகள் சிக்கந்தர்பாட்ஷா, முகமது உசேன், துணைதலைவர் காதர் மைதீன், முன்னாள் ஒன்றியசேர்மன் சுப்பாராஜ், தி.மு.க. தலைமை செயற் குழு உறுப்பினர் சாகுல் ஹமீது. நகர்மன்ற துணைதலை வர் பழனிசாமி, நகர தி.மு.க. செயலாளர் ஏ.கே.மணி, ஒன்றிய சேர்மன் சசிகலா பொன் ராஜ், ஒன்றிய செயலா ளர்கள் பால கணேசன், பொன் ராஜ், மாவட்ட இளைஞ ரணிதுணை அமைப்பாளர்கள் பாபுஜி, பால சந்தர், மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், கவுன்சிலர்கள் அப்துல்ரஹ்மான், அகமது யாசீர், ஜோதிராமலிங்கம், இளங்கோ உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில ஜமத்துல் உலமா சபை தலைவர் காஜாமுயினுத்தின் ஆலிம் பாகவி பேசினார்.அல்அமீன் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளி தாளாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி, உள் புகார்கள் குழு, மாணவர்கள் ஆலோசனைக் குழு மற்றும் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தியது. விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ரூபாதேவி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கை அடைவதற்கு தடைகளாக இருப்பவை அதிகம். ஆனால் எதுவுமே தடைகள் இல்லை என்பதை உணர வேண்டும். எண்ணம் இருந்தால் சாதிக்கலாம். இலக்கை கைவிடக்கூடாது. தயக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயம் என்பதே இருக்கக் கூடாது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
    • அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தேதிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், கிருஷ்ணன் கோவில் தனியார் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம் உதவியுடன் ராமச்சந்திர ராஜா, சுப்பிரமணியராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள

    ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் முகாம் நடந்தது. ஜானகிராம் மில்ஸ் இயக்குநர் என்.எஸ். சஞ்சய்குமார் ராஜா தொடங்கி வைத்தார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொருளாளர் பிரபாகரன், விருதுநகர் மாவட்ட தலைவர் கண்ணன், வட்டார பொருளாளர் கிருஷ்ணன்குட்டி, ஜானகிராம் மில்ஸ்

    ஐ.என்.டி.யு.சி தலைவர் சுகுமாரன், இணை செயலாளர் கணபதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ மனை மருத்துவர் விக்னேசுவரி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 45 பேர் கிருஷ்ணன்கோவில் தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.

    • கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இதுகுறித்து ரவிக்குமார் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது37). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணி(40) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அதன்பின்னர் இருவரும் நண்பர்களாக இருந்து ள்ளனர். இந்தநிலையில் தென்காசி கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரவிக்குமாரிடம் சுப்பிரமணி கூறியுள்ளார். அதற்கு ரூ.3 லட்சம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பிய ரவிக்குமார் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தென்காசி கோர்ட்டில் சுப்பிரமணியிடம் ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    மீண்டும் ஒரு மாதம் கழித்து சேத்தூர் பஸ் நிலையத்தில் வைத்து ரூ.1 ½ லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி ரவிக்குமாருக்கு, கோர்ட்டில் சுப்பிரமணி வேலை வாங்கித்தரவில்லை. இதனால் அவரிடம் ரவிக்குமார், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள் ளார்.

    ஆனால் சுப்பிரமணி பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சேத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். ஒன்றின் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்த ரவிக்குமார் அவரிடம் சென்று தனக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, ரவிக்குமாரை கீழே தள்ளி உதைத்தார். மேலும் பணத்தை திரும்ப கேட்கக்கூடாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து ரவிக்குமார் சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி கொலைமிரட்டல் விடுத்த சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் சூலக்கரையில் பகுதி நேர நியாயவிலை கடைைய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேசன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார்.

    பின்பு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும் 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.

    விருதுநகர் மாவட்டத்தில் 6 லட்சத்து 10 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 லட்சத்து 248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் சூலக்கரை பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கடையின் மூலம் 310 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, அருப்புக்கோட்டை யூனியன் தலைவர் சசிகலா, வட்டாட்சியர் அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரம், ஜெய் நகர் வேட்டை பெருமாள் கோயில் தெருவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த தெருவில் உள்ள பிச்சைக்கனி என்பவருக்கு சொந்தமான வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகந்தி (வயது 45) என்பவர் தனியாக வீடு எடுத்து அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும்,அவருக்கு உதவியாக ராஜபாளை யத்தைச் சேர்ந்த முத்துக்கு மார் (36), கரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் (46), கொல்லத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அங்கிருந்த ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பிச்சைக்க னியும் கைது செய்யப்பட்டார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கார் பராமரிப்பு நிறுவனத்திற்கான நேர்காணல் நடந்தது.
    • 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் பணி அமர்வு மையத்தின் சார்பில் கோவை 5கே கார் கேர் நிறுவனத்துடன் இணைந்து நேர்காணல் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கார் பராமரிப்பு நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தினேஷ் தமது நிறுவனத்தில் உள்ள பணி வாய்ப்புகள் மற்றும் பணி வாய்ப்பு பெற்ற நபர்களின் பின்னூட்ட கருத்துக்களை காணொலி காட்சியின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

    இதில் கார் பராமரிப்பு நிறுவனத்தின் முதன்மை மனிதவள மேலாளர் மணிகண்டன், பயிற்றுநர்-மனிதவள மேலாளர் ஜெயவிஜயன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்களிடம் குழு உரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நேர்காணல் நடத்தினர்.

    இதில் கல்லூரியின் பல்வேறு துறை சேர்ந்த மாணவர்கள் 560 பேர் பங்கேற்றனர். 253 மாணவர்கள் பணி நியமன ஆணையை பெற்றனர். பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் குமாரபாலாஜி நன்றி கூறினார்.

    • சாத்தூர் யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.3.58 லட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாசலபுரம் மற்றும் சடையம்பட்டி ஊராட்சி களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெங்கடாசலபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.5.61 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் தள பணிகளையும், கே.கே.நகர் பகுதியில் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார். சடையம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மூலம் ரூ.3.58 லட்சம் மதிப்பில் சுற்று கம்பி வேலி அமைத்தல் மற்றும் நீர் ஆதாரம் அமைத்தல் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இளம்பெண்-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.புளியங்குளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 29). இவரது கணவர் போதுராஜா. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    மகாலட்சுமி உடல்நிலை பாதிப்பால் அவதிபட்டு வந்தார். பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமா கவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று திருச்சுழி பஸ் நிலையத்திற்கு வந்த மகாலட்சுமி விஷம் குடித்தார். பின்னர் கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக வந்து மனைவியை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகாலட்சு மியின் தாய் அய்யம்மாள் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (31). திருமணம் ஆகவில்லை. தனியாக ஆடிட்டிங் தொழில் பார்த்து வந்தார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடன் வாங்கினார். இந்த நிலையில் கடன் கொடுத்த 0வர்கள் நெருக்கடி கொடுத்ததால் சகோதரர் மாரியப்பனுடன் சேர்ந்து பூர்வீக சொத்தை விற்று கடனை அடைத்தார்.

    இதனால் அவர் மனவேத னையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலை யில் சகோதர னுக்கு சொந்த மான நிலத்திற்கு சென்று விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிவகாசி அருகே இரை தேடி ஊருக்குள் வந்த அரிய வகை மரநாய் இறந்தது.
    • காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள வைப்பாற்று கரையில் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் மான்கள், காட்டு பன்றிகள், மிளா, வரையாடு, செந்நாய், உள்பட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. இவை உணவுக்காக அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வருவது வழக்கம்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் பகுதியில் நேற்று நாய்கள் விரட்டியதில் தப்பிய விலங்கை அந்த பகுதி வாலிபர்கள் மீட்டனர். பெயர் தெரியாத அரிய விலங்கு பிடிபட்டதாக வெம்பக்கோட்டை கால்நடைத்துறைக்கும், வனத்துறையினருக்கும் சமூக ஆர்வலர் கண்ணன் தகவல் தெரிவித்தார்.

    காயமடைந்த அந்த விலங்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காததால் சிறிது நேரத்தில் இறந்தது. பின்னர் வந்த வனச்சரக அலுவலர் பழனிக்குமார், கால்நடை மருத்துவர் திலகவதி ஆகியோர் அந்த விலங்கை பரிசோதித்த போது அழிந்து வரும் இனத்தை சேர்ந்த மரநாய் என்பது தெரியவந்தது.

    மேலும் இந்த வகை விலங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இறந்த மரநாய்க்கு 3 வயது என்பதும், பெண் இனத்தை சேர்ந்ததும் தெரிந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மரநாய் அருகிலேயே புதைக்கப்பட்டது.

    இந்த பகுதியில் ஏராளமான அரிய வகை உயிரினங்கள் வசிப்பதால் அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்தார்.

    • ராஜபாளையம் மில்லில் தொழிலாளி திடீர் இறந்தார்.
    • இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 45). இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து ஓய்வறையில் சென்று தூங்கியுள்ளார்.

    காலையில் வெகுநேரமாகியும் பூமிநாதன் எழாமல் இருந்ததால் சக ஊழியர்கள் எழுப்பிப்பார்த்துள்ளனர். ஆனால் அவர் எழாததால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பூமிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் பயணிகள் நிழற்குடையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை அருகில் பொதுமக்களின் நலன்கருதி ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    அதேபோல் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி பஸ் பராமரிப்பு மைதா னத்திற்கு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழா நடந்தது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடை யையும், பேவர் பிளாக் தளத்தையும் திறந்து வைத்தார்.

    அப்போது எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை மூலம் பெண்களுக்கு கட்டண மில்லா பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து சிறப்பான சேவை செய்துள்ளார். இந்த சேவையை பெண்கள் போற்றி வருகின்றனர். அதுபோல் ராஜபா ளையம் தொகுதியில் அரசின் வழிகாட்டுதலின்படி 2 டிப்போ மேலாளர்களும் பஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்' என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை மருத்துவர் மாரியப்பன், பொது மேலாளர் சிவலிங்கம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், துறை மேலாளார் மாரி முத்து, ஜீவா, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கமல கண்ணன், தவம், கவுன்சிலர் ஜான்கென்னடி, வார்டு செயலாளர் குருசாமி, முனியராஜ், நாகேசுவரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×