விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
விபசாரத்தில் ஈடுபட்ட கும்பல்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரம், ஜெய் நகர் வேட்டை பெருமாள் கோயில் தெருவில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, ராம்குமார், முத்துராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த தெருவில் உள்ள பிச்சைக்கனி என்பவருக்கு சொந்தமான வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகந்தி (வயது 45) என்பவர் தனியாக வீடு எடுத்து அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும்,அவருக்கு உதவியாக ராஜபாளை யத்தைச் சேர்ந்த முத்துக்கு மார் (36), கரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் (46), கொல்லத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அங்கிருந்த ஒரு கார், 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பிச்சைக்க னியும் கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com