என் மலர்
விருதுநகர்
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆளுமைத்திறனின் அவசியம் குறித்த விளக்கப்பட்டது.
- துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் (நிறுமச் செயலரியல்) துறை சார்பில் ஆளுமைத்திறனின் அவசியம் பற்றி விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலாண்மைத்துறை இணைப்பேராசிரியர் சந்திரபோஸ் பங்கேற்றார். அவர் பேசுகையில், மாணவர்கள் நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு தங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும், சிறந்த ஆடை முறைகள் நேர்காணலின் போது மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது என்றும் கூறினார்.
நேர்காணல் அறைக்குச் செல்லும் முறை, நேர்காணலின்போது கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முறை, நேர்காணலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.
துறைத்தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சூரியா நன்றி கூறினார். உதவிப்பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா ஏற்பாடு செய்தார்.
- புதிதாக எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதே தி.மு.க. அரசின் சாதனை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.
- 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் கிராமத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம், விருதுநகர் சட்டமன்ற தொகுதி சிவகாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில் 500 பேருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் அவர் ேபசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் மூடுவிழா கண்டதுதான் தி.மு.க.வின் சாதனை ஆகும். தி.மு.க. ஆட்சியில் புதியதாக எந்ததிட்டமும் கொண்டு வரவில்லை. எழுதாத பேனாவுக்கு சிலை வைக்க முடிவு செய்ததும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதும்தான் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை ஆகும்.
ஈரோட்டில் தி.மு.க. வெற்றி பெற்றது தனிக்கதை. அங்கு அ.தி.மு.க. 44 ஆயிரம் வாக்குகள் பெற்றதுதான் உண்மையான வெற்றி. வாக்காளர்களையே அடைத்து வைத்து வாக்கு செலுத்த முடியாமல் செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி னார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், வரதராஜன், வேண்டு ராயபுரம் சுப்பிரமணி, அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமரன், முகம்மது நைனார், கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், கருப்பசாமி, டாக்டர் விஜயஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி செய்திருந்தார்.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
- www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளைமறுநாள்(17-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாற்றுத்திறனா ளிகளுக்கென சிவகாசி மற்றும் விருதுநகரில் உள்ள CIEL Services Pvt Ltd., Lovely Offset மற்றும் Pentagon போன்ற நிறுவனங்களும், சாய்ராம் அறக்கட்டளை போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.
தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலி மருந்து சீட்டை பயன்படுத்தி போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சமூக விரோத கும்பல் வாங்கி விற்கின்றனர்.
- போதை மருந்து விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தற்காலத்தில் புதிய, புதிய வகைகளில் போதை பொருட்கள் பயன்படுத்த ப்பட்டு வருகிறது. நோயாளி களுக்கு வலி நிவாரண த்திற்காக தரப்படும் மாத்தி ரைகளும் போதைக்காக பயன்படுத்துவது அதிகரி த்துள்ளது. இந்த மாத்திரை களை தொடர்ந்து போதை க்காக உட்கொள்வதால் பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரையில்லாமல் குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகளை வழங்க கூடாது என போலீசார் கண்டிப்புடன் தெரிவித்து ள்ளனர். ஆனால் தற்போது ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலி மருந்து சீட்டை பயன்படுத்தி சமூக விரோத கும்பல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதனை அதிக விலைக்கு இளைஞர்களை குறிவைத்து விற்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
இதற்காக சமூக விரோத கும்பல் போலியான மருந்து சீட்டுகளை தயாரித்து அதில் வலி நிவாரண மாத்திரை, ஆண்மைக்குறைவு மாத்திரை, சந்தேகம் ஏற்படாமல் இருப்பதாக வயிற்று வலி மாத்திரைகளை எழுதி அதனை மருந்து கடைகளில் கொடுத்து வாங்குகின்றனர். குறைந்த விலைக்கு மாத்திரைகளை வாங்கும் அந்த கும்பல் பின்னர் அதிக விலைக்கு இளைஞர்களிடம் விற்கின்றனர்.
போதை மாத்திரைக்கு அடிமையாகும் இளை ஞர்கள் தங்களது வாழ்வை தொலைக்கி ன்றனர். எனவே இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தி போதை மருந்து விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தி.மு.க. சார்பில் 2 இடங்களில் கோடைகால குடிநீர் பந்தலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 10-வது நிகழ்ச்சியாக தி.மு.க. சார்பில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் ராஜபாளையம் சாந்தி தியேட்டர் அருகிலும், அரசு மகப்பேறு மருத்துவமனை அருகிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கோடைகால குடிநீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்,
நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் ஆகியோர் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்களையும், குடிநீரையும் வழங்கினர். மேலும் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் நிழற்குடையையும் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் மற்றும் கவுன்சி லர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தை மேம்ப டுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பஸ்நிலையம் மூடப்பட்டு சிரமப்பட்டு வந்த சுற்று வட்டார கிராம பகுதி பயணிகளுக்கு அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே நிழற்குடையும், கோடைகால குடிநீர் பந்தலும் அமைத்து கொடுத்த தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.வை பொது மக்கள் பாராட்டினர்.
- குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் வெட்டிார்.
- கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மலைச்செல்வன். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(வயது21) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சூர்யபிரகாஷ் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தாய் கல்யாணியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மலைச்செல்வனுக்கு, அவர் போனில் தகவல் தெரிவித்தார்.
இந்தநிலையில் இரவு மலைச்செல்வன் வீட்டிற்கு வந்தபோது சூர்யபிரகாஷ் வாசலில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து மலைச்செல்வன் அவரை கண்டித்தார். ஆனால் தந்தையுடனும் சூர்யபிரகாஷ் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்செல்வன், சூர்யபிரகாஷ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை கை, கால்களில் வெட்டினார். சூர்யபிரகாஷின் நண்பர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கல்யாணி கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேதியியல் துறை சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
- தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வேதியியல் துறையின் சார்பில் "வேதியியல் துறையில் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் பாலமுருகன், வேதியியல் துறை மூத்த பேராசிரியர் எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பற்றியும், அதற்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்தி கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் எடுத்துரைத்தார். போட்டித் தேர்வு பற்றிய செய்திகளை தொலைத் தொடர்பு ஊடகம், செய்திதாள் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்றும் எடுத்து கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வேதியியல் துறை வேலைவாய்ப்பு பற்றியும் விளக்கினார்.
முதுநிலை முதலாமாண்டு மாணவி ஷர்மிளா நன்றி கூறினார்.
- தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
- அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர், சிவகாசி ஆகிய இடங்களில் கூட்டுற வுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கே ற்று 1,108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11 ஆயிரத்து 197 பயனா ளிகளுக்கு ரூ.18.24கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட த்தில் மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புற ங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினார்.
தற்போது முதல்-அமைச்சர் செயல்படுத்திய மகளிருக்கான இலவச பஸ் பயணம் திட்டம் மூலம் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லக்கூடிய பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த இலவச பயணம் மூலம் பெண்கள் செலவிடும் கட்டணம் பொருளா தாரத்தில் ஒரு பங்காக சேமிக்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து கடன் திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 1,195 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு ரூ.32.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய திட்டங்களுடன், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களின் உரிமைக்காகவும், மேம்பா ட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகு மார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுச்சாமி, விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர்ம ன்றத்தலைவர் மாதவன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை த்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- வத்திராயிருப்பு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
சிவகாசி
வத்திராயிருப்பு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளரும், வத்திராயிருப்பு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான அழகர்சாமி, மாவட்ட அ.ம.மு.க. துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி முருகேசன், தி.மு.க.வை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்து விலகினர்.
அவர்கள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜ வர்மன், வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு பேரூர் செயலாளர் வைகுண்ட மூர்த்தி, பேரூர் பொருளாளர் கனகராஜ், வத்திராயிருப்பு முன்னாள் பேரூர் செயலாளர் நெல்லை யப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சக்தி நடேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
- இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
- தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் உள்ள சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி வரலாறு ஆசிரியர் செல்வத்திடம், இளந்திரை கொண்டான் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு பழமையான செப்புக்காசை கொடுத்துள்ளார். அக்காசு பற்றி எதுவும் தெரியாததால் செல்வம் அதை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.
ஆசிரியர் செல்வம்
இந்த நிலையில் கடந்த 6-ந்ம் தேதி ஆசிரியர்க ளுக்கான தொல்லியல் பயிற்சியின் முதல் சுற்று மதுரையில் நடைபெற்றது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன் வகுப்பெடுத்தார். இதன்பின் தன்னிடம் இருந்த இந்த காசு முதலாம் ராஜராஜ சோழனால் வெளி யிடப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.
இதுபற்றி ஆசிரியர் செல்வம் கூறியதாவது:-

ஆசிரியர் செல்வம்
12 ஆண்டுகளாக என்னிடம் இருந்தும் அதன் முழுப்பெருமையும் தெரியவில்லை. மதுரையில், நடந்த தொல்லியல் பயிற்சியால் அக்காசின் சிறப்பை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு வழங்கிய இந்தப் பயிற்சி எனக்குள் தொல்லியல் தேடலை விதைத்துள்ளது. இதை என் மாணவர்களுக்கும் கற்றுத்தருவேன். பயிற்சி வழங்கிய அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்ச ருக்கும், ஆணை யருக்கும் நன்றியை தெரிவி த்துக் கொள்கிறேன் என்றார்.இந்த காசு குறித்து பயிற்சியை ஒருங்கிணைத்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜ குரு கூறியதாவது:-
வரலாற்றைத் அறிய நாணயங்கள் உதவுகின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் தன் பெயர் பொறித்த ஈழக்கா சுகளை வெளி யிடப்பட்டுள்ளார். இவை முதலாம் ராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்து ங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்து ள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இந்த காசுகள் வெளியிடப்ப ட்டுள்ளன. செம்பால் ஆன காசு ஈழக்கருங்காசு எனப்படுகி றது.இந்த காசுகளின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்களும், சங்கும் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்தி ருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
- தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம்.
விருதுநகர் :
விருதுநகர் மாவட்டம மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
இதில் 179 மகளிர் குழுக்களை சேர்ந்த 1777 பேருக்கான கடன்தொகை ரூ.3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை சுயஉதவி குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இதே போன்று, இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் மூன்றே மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- அமைச்சர் பெரியசாமி, துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பெரியசாமி துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களி லும் கான்கிரீட் சாலை, தெருவிளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து தொடர்ச்சியான பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை அனைத்து அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிடோர் ஒருங்கிணைந்து செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் விழுப்பனூர் ஊராட்சி, கிருஷ்ணன் கோவில் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சி என்.சண் முகசுந்தராபுரம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை மற்றும் மியா வாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும், ராம கிருஷ்ணாபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.9.78லட்சம் மதிப்பில் கிழக்கு ஊரணியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடை பெற்று வருவதையும் அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமியை கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். இந்தகூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, செயற்பொறியாளர் இந்துமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன், யூனியன் தலைவர் ஆறுமுகம், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்துமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






