search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Self Help"

    • மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவி- ரூ.3¼ கோடி மதிப்பில் 24 திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் நேரடியாக அனைத்து பகுதி கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும் பொது மக்களின் கோரிக்கை களை நிறை வேற்ற வலியுறுத்தினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி 24 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

    காலை 7 மணி அளவில் மாங்குளம் கிராமத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம சாவடியை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் சின்ன மாங்குளம் கிராமத்தில் முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை போடுவதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    மாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டத்தை திறந்து வைத்தார்.

    வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உணவு தானியங்கி சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

    அதே போன்று அரும்பனூர் ஊராட்சியில் அழகர் கோவில் சாலை சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60ஆயிரம் மதிப்பீட்டில் தாமரைப் பட்டி, காயம்பட்டி கிரா மத்தில் புதிய நாடக மேடையை திறந்து வைத்தார்.

    பின்னர் இதேபோன்று கொடிக்குளம், திருமோகூர், ராஜாக்கூர், வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்தூர், சக்குடி, கார்சேரி, சக்சி மங்கலம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மாவட்ட ஊராட்சி நிதி ஒன்றிய பொது நிதி, ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி போன்ற திட்டத்தின் கீழ் நீர் தேக்க தொட்டி கிராம சாவடி அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கடை, உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பயணிகள் நிழற்குடை என மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 24 திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் தலைவர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரிய கலா கலாநிதி, ஒன்றிய சேர்மங்கள் வீரராகவன், மணி மேகலை, தி.மு.க. நிர்வாகிகள் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி, பால சுப்ரமணியன், திருப்பாலை சசிகுமார், மருதுபாண்டி, வழக்கறிஞர் கலாநிதி, நேருபாண்டி உள்பட ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணறு, ஆர்.ஆர்.நகர், சிவகாசி ஆகிய இடங்களில் கூட்டுற வுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கே ற்று 1,108 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 11 ஆயிரத்து 197 பயனா ளிகளுக்கு ரூ.18.24கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 67 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 876 பயனாளிகளுக்கு ரூ.4.215 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட த்தில் மகளிர் சுய உதவிக்குழு இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புற ங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றினார்.

    தற்போது முதல்-அமைச்சர் செயல்படுத்திய மகளிருக்கான இலவச பஸ் பயணம் திட்டம் மூலம் கல்வி, பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக செல்லக்கூடிய பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்த இலவச பயணம் மூலம் பெண்கள் செலவிடும் கட்டணம் பொருளா தாரத்தில் ஒரு பங்காக சேமிக்கப்படுகிறது.

    கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து கடன் திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 1,195 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 19 ஆயிரத்து 132 பயனாளிகளுக்கு ரூ.32.77 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய திட்டங்களுடன், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களின் உரிமைக்காகவும், மேம்பா ட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகு மார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுச்சாமி, விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர்ம ன்றத்தலைவர் மாதவன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை த்தலைவர் விவேகன்ராஜ், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு ஊரக வாழ் வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவி லான கூட்ட மைப்பு களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திருச்சியில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா வில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு கடனு தவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்க ளுக்கு வங்கி கடன் ரூ.12.20 கோடி மதிப்பீட்டிலும், 87 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.82.06 கோடி மதிப்பீட்டில் என 416 மகளிர் சுய உதவிக்குழுக்க ளுக்கு ரூ.94.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணண், மாவட்ட ஊராட்சி குழுதலைவர் புவனேஸ்வரி பெருமாள், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கக திட்ட இயக்கு னர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, இந்தி யன் வங்கி துணை பொது மேலாளர் (கடலூர்) கவுரி சங்கர்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    ×