என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
    • போலீசார் விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர்.

    விழுப்புரம்:

    நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்று 27 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு வந்தது. இந்த பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த நடராஜ் (வயது 40) ஓட்டி வந்தார். இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் தாழ ங்காடு அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் உடனடியாக சம்ப இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பயணி களை பொதுமக்களின் உதவியுடன் பத்திரமாக பஸ்சில் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் ஸ்ரீராம் (57) மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த சந்தியா (29) வேதாரணியம் பகுதியை சேர்ந்த பாபா செல்வம் (35) நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கார்த்திக (25) சாதிக் (40)ராஜேந்திரன் (50) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடை ந்தவர்களை போலீசார் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக தொடர்ந்து பஸ் விபத்துக்காளவது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மத்தில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    • ரவி ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார்.
    • திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் தெற்குவீதியியை சேர்ந்தவர் ரவி (வயது 55). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி சென்னையில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இவரது மகன் கார்த்திக் (35) வீட்டில் இவரது மனைவி தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்ற ரவி, அருகில் இருந்த ஊரணி கிணற்றில் கால் கழுவ சென்றுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர், கிணற்று நீரில் விழுந்து மூச்சுத் திணறி இறந்தார். சிறிது நேரத்தில் தற்செயலாக அங்கு சென்ற கிராம மக்கள் இதனைக் கண்டனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோ த்ராஜ் தலைமையிலான போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர்.

    விழுப்புரம்:

    மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாண்டியன் தலைமையிலான போலீசார் முத்தம்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர். காரை நிற்காமல் சென்றது.

    காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனையிட்டபோது, புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் பராக், கூல் லீப், விமல், ஆர்.எம்.டி. போன்றவைகள் மூட்டைகளில் இருந்தது. ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த மேல்மருவத்தூர் பண்டாரம் (வயது 28), திண்டிவனர் பாஸ்கரன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர்.
    • அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இவர்கள் மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட கடந்த 10-ந் தேதி வந்தனர். இவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த மர்மகும்பல், வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை யில், சரணடைந்த முகிலன் உள்ளிட்ட குற்றவாளிகளை 3 நாள் காவலில் விசாரிக்க அம்பத்தூர் கோர்ட் வானூர் போலீசாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை அழைத்து வந்த வானூர் போலீசார் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனின் தம்பி முரளியை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமார் கொலை செய்தார். இதற்கு பழிக்குப்பழி வாங்கவே அருண்குமாரை கொலை திட்டம் தீட்டி வானூர் அருகே கொலை செய்ததாக முகிலன் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. மேலும், அருண்கு மாருடன், அன்பரசனும் வந்ததால் அவரையும் சேர்த்து கொலை செய்ததாக முகிலன் போலீ சாரின் விசா ரணையில் கூறியுள்ளார். 3 நாள் காவல் இன்றுடன் முடிவதால் இன்று மாலை முகிலன் மற்றும் கூட்டாளிகளை சென்னை கோர்ட்டில் வானூர் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.

    • கார் டிரைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தனர்.
    • 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள், 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகேலாரி மற்றும் கார் டிரைவர்களை குறி வைத்து ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

    அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அருகே இருந்த வண்டியில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள், 50 ஆயிரம் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் சாரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 49,) என்பதும் இவர் பல மாதங்களாக சாரம் லேபைக்கு வரும் லாரி டிரைவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனு ப்பப்படும் என தெரிவித்ததாகவும் அதை அனுப்பாமல் பலரை ஏமாற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    • வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் மிகவும் பிரசதிப் பெற்றது கருவாடு மற்றும் ஆட்டு சந்தை ஆகும்.

    சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களூரு போன்ற மாநிலங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று செஞ்சி வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களூரு மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

    அதற்கேற்றார் போல் கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக ஆடுகள் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மேலும் தனி ஆடு அதிகபட்சமாக ரூ 20 ஆயிரம் வரை விலை போனது. இது விவசாயிகளுக்கு நல்ல விலையாகும். இந்த வார சந்தையில் மட்டும் சுமார் ரூ 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி இருக்கலாம் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அதன் படி இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக் கட்டி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • சிறப்பு நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம் மன் கோவில் 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக் கட்டி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரர் நிகழ்ச்சி செய்து வந்தனர். இதில் அம்மன் வீதி உலா, மேடை நாடகம் நடந்து வந்தது. ேமலும் முத்தாலம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம் ஆகியன கொண்டு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் அருகில் வான வேடிக்கை மேள தாளங்களுடன் நடந்தது. பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை ஏராள மான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடு ஆலப்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்த னர்.

    • மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    உலக யோகா தினம் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ் யோகா குறித்து விளக்கம் அளித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    • மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வட மாநில இளைஞர் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றாததால் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட ரொட்டிக்கார் தெருவில் கடந்த ஒரு மாதக் காலமாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியான முறையில் மூடப்படாததால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.இதனால் தற்போது பெய்து வரும் மழையினால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பல்வேறு பணிகளுக்காக செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும், சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி திண்டிவனம் நகராட்சியில் பலமுறை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் இன்று சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி சாலையிலுள்ள பள்ளங்களிலும், சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளிலும் நாற்று நடவு செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வட மாநில இளைஞர் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது.
    • திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் லேசான மழை பெய்தது. அப்போது நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மின்னலுடன் கூடிய இடி இடித்தது. இதில் மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இருந்த போதும் கீழ் மயிலம், ராஜீவ்காந்தி நகருக்கு மின்சாரம் வரவில்லை. இது தொடர்பாக இன்று காலை மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பலத்த இடி, மின்ன லால் கீழ் மயிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனை சரிசெய்ய நடவடி க்கைகள் எடுக்க ப்பட்டு வருகிறது. இன்று மாலை 3 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என கூறினர். திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாயினர்.

    • புதுவையில் இருந்து 1800 லிட்டர் டீசல் கடத்திய மினி லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் பிரம்மதேசம் அருகே சொக்கநாததாங்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை தடுப்பு காவல் துறை ஐ.ஜி. காமினி ஆணைக்கிணங்க, சூப்பிரண்டு கீதா உத்தரவிக்கிணங்க, துணை சூப்பிரண்டு மனோகர் மேற்பா ர்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே சொக்கநாததாங்கல் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 11 பேரல்களில் 1800 லிட்டர் டீசல் இருந்தததை கண்டனர். மேலும், இது புதுவை மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    இதனையடுத்து மினி லாரி டிரைவர் ராஜேஷை (வயது 28) கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த டீசல் கல்குவாரிக்கு வாங்கிச் சென்றதும், இந்த மினி லாரியும் கல்குவாரிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து டீசலையும், மினி லாரியையும் பறிமுதல் சய்த போலீசார் கல்குவாரி உரிமையாளர் பிரேமசிவம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • செல்வக்குமார் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார்.
    • கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூற தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகன் செல்வக்குமார் (வயது 23), விவசாயத்தில் டிப்ளமோ முடித்து காஞ்சிபுரத்தில் பணி செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான கடந்த 18-ந் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது கோதண்ட பாணி, நீ வேலைக்கு செல்லவேண்டாம், கிராமத்தில் இருந்து விவசாயத்தை கவனித்துக் கொள் என செல்வக்குமாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தந்தை மகனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மறுநாள் காலை செல்வ க்குமாரை காணவி ல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்ய ப்பட்டி ருந்தது. காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அங்கும் அவர் பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து கோத ண்டபாணி திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போல செல்வக்குமாரை தேடி வருகின்றனர்.

    ×