என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பறிமுதல்
- விழுப்புரம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர்.
விழுப்புரம்:
மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாண்டியன் தலைமையிலான போலீசார் முத்தம்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர். காரை நிற்காமல் சென்றது.
காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனையிட்டபோது, புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் பராக், கூல் லீப், விமல், ஆர்.எம்.டி. போன்றவைகள் மூட்டைகளில் இருந்தது. ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த மேல்மருவத்தூர் பண்டாரம் (வயது 28), திண்டிவனர் பாஸ்கரன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.