என் மலர்
நீங்கள் தேடியது "Kala tree"
- 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக் கட்டி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- சிறப்பு நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம் மன் கோவில் 27-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி காப்புக் கட்டி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயதாரர் நிகழ்ச்சி செய்து வந்தனர். இதில் அம்மன் வீதி உலா, மேடை நாடகம் நடந்து வந்தது. ேமலும் முத்தாலம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம் ஆகியன கொண்டு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் அருகில் வான வேடிக்கை மேள தாளங்களுடன் நடந்தது. பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனை ஏராள மான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடு ஆலப்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்த னர்.






