என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
    • விவரங்களை பதிவு செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் தங்கள் விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்தால் 14-வது ஊக்கத் தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

    மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பி.எம்.கிசான் (விவசாயிகள் கவுரவ நிதி திட்டம்) திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 14வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விவரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் கே.ஒய்.சி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு தொடங்கி 14வது தவணையை சரியாக பெற்று பயன்பெறாலாம். பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகளுக்கு கே.ஒய்.சி முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் தவணையை பெற ஆதார் விபரங்கள் சரிபார்ப்பது அவசியமாகும். முதல் வழிமுறையாக, ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் வலைதளத்தில் தங்களது ஆதார் எண், விபரங்களை உள்ளீடு செய்து, ஒருமுறை பயன்படுத்தும் கடவு மூலம் சரிபார்க்கலாம். 2 வது வழிமுறையாக ஆதார் எண்ணுடன் கைபேசி எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம். 3வது வழிமுறையாக பி.எம்.கிசான் செயலி மூலம் முக அடையாளம் கொண்டோ அல்லது அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி இ.கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம். வரும் 30-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி கூறியுள்ளார்.

    • 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர்.
    • விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் (வயது 23). இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மகபுல் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் சையத் முபாரக்.

    புவனேஷ், முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் இ.பி அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனையடுத்து புதுவை ஜிப்மருக்கு செல்லும் வழியிலேயே முபாரக் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • புவனேஷ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக அந்தப் பகுதியில் சோதனை செய்தனர்.
    • பல நாட்களாக விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தைமேடு பகுதியில் மான் கறி விற்பனை நடைபெறுவதாக மாவட்ட வன அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திண்டிவனம் வனசரக அலுவலர் புவனேஷ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக அந்தப் பகுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் மான் கறி வாங்க வந்தவர்களும் விற்பனை செய்த நபரும் தப்ப ஓட முயன்றனர். விற்பனை செய்த நபரை மடக்கி பிடித்த வனத்துறை அதிகாரிகள் அவரை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்ததில் அவர் நத்தமேடு பகுதியை சேர்ந்த அஜித் என்பதும் இவர் திருவண்ணாமலை யிலிருந்து மானை வாங்கி அதை அங்கேயே வெட்டி இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்து திண்டிவனம் பகுதியில் பல நாட்களாக விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவரை வன பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மூர்த்தி மகன்களுடன் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    • தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம ்மரக்காணம் அருகே கோமுட்டி சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவருடைய 2 மகன்களான குமரேசன் (23), சுமன் ராஜ் (20) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பைபர் படிகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் கடலில் தத்தளித்தனர். அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் மூர்த்தி பலியானார். 2 மகன்களும் உயிர்பிழைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார்.
    • விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னை தண்டை யார்பேட்டையை சேர்ந்த வர் ரத்தினம் (வயது 65). இவர் சென்னையில் உள்ள பாரில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் விக்கிரவாண்டியில் நடை பெற்ற தனது அண்ணன் மகள் வீட்டு வளைகாப்பு விசேஷத்திற்கு சென்னை யில் இருந்து நேற்று வந்தார். வளைகாப்பு முடித்து மீண்டும் சென்னை செல்ல பஸ் ஏறுவதற்காக விக்கிர வாண்டி சுங்கச்சாவடி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    விக்கிரவாண்டி தெற்கு புறவழிச்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினம் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக புகார் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர்.
    • தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (வயது 38), இவரது தங்கை தமிழ்செல்வி (36). இருவரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளராக பணி செய்து வருகின்றனர். நேற்று மாலை பணி முடித்து பஸ் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே நல்லாவூரைச் சேர்ந்த குணசேகரன் (42) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் லிப்ட் கேட்டு இருவரும் மோட்டார் சைக்களில் ஏறினர்.

    ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் புதுவை - திண்டிவனம் சாலையில் உள்ள புளிச்சபள்ளத்தில் உள்ள வாணிபக் கழக குடோன் அருகில் வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக இறந்தார். மேலும், தமிழ்செல்வி, குணசேகரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வானூர் போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த குணசேகரன், தமிழ்செல்வியை சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ சிகிச்சை முகாமை நடைபெறுகிறது.
    • கால்நடை வளர்ப்போர்தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில், நாளை (27-ந் தேதி) மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை நடத்துகிறது.

    நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை யளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடு தல், செயற்கை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூ சிகள், நெறிநோய் தடுப்பூசிகள், புல்வளர்ப்பு, தாது உப்பு கவவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பவ்வேறு சுகாதார நட வடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தே கங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் கால்நடை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிப்பார்கள். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்தகன்று உரிமையாளர்களுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட வுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் தங்கள் கால்நடைகளை கால்நடை மருத்துவர்களி டம் காண்பித்து உரிய மருத்துவ வசதி பெற்று தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரி வித்துள்ளார் தெரிவித்தார்.

    • கூலிங் பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
    • மது பிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில், மது பிரியர் ஒருவர் பீர் வாங்க சென்றுள்ளார்.

    அப்பொழுது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் 10 ரூபாய் அதிகம் கேட்டதாகவும் அதற்கு கடை ஊழியரிடம் மது பிரியர் கேட்டதற்கு கடைக்கு மின் கட்டணம் எல்லாம் கட்ட வேண்டி உள்ளது. கூலிங் பீர் வாங்க கூடுதலாக 10 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.அப்படித் தான் விற்போம் என கூறியதாக கூறப்படுகிறது.

    அது குறித்து மது பிரியர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் கடையினுள் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களை காட்டிலும் வெளியில் இருந்து வரும் தனி நபர்களும் கடையினுள் நின்று வியாபாரம் செய்வதாகவும் கூறப்படுகிறது. மது பிரியர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

    • விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.
    • ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சியின் ஆணையராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சுரேந்தர் ஷா பொறுப்பேற்றார். அதுமுதல் விழுப்புரம் நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வரி பாக்கிகளை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சியில் ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளில் ஆணையர் சுரேந்தர் ஷா ஈடுபட்டார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து சுரேந்தர் ஷா விழுப்புரம் நகராட்சியில் இருந்து விடைபெற்று, திருவள்ளுவர் நகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    • நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார்.
    • 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் ஓமிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 42). விவசாயி. இவர் கடந்த 22-ந்தேதி தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த வரப்பை சீர் செய்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் செல்வம் (57) மோகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரை யும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வம் நடந்தவைகளை குடும்பத்தா ரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வெண்ணிலா, மகன்கள் ஆனந்து, அரி மற்றும் உறவினர்கள் செல்வத்தை மோகன் வீட்டிற்கு அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் செல்வம் குடும்பத்தார் மோகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோகன் புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது வீட்டிலிருந்த பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

    • தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.
    • டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இன்று பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் 100 இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.  தற்போதய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு அரசின் இரு கண்களாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த கோப்பு கவர்னரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    பல்வேறு பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, கோலியனூர் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம், ஆலந்தூர் ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • கல்பனாசாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட வுள்ளது.
    • சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படவுள்ளது.

    விழுப்புரம்:

    2023 - ஆம் ஆண்டிற்கான கல்பனாசாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட வுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பலசெயல்களை செய்திருக்கவேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படும். சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படவுள்ளது.

    முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 28-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இணையதள த்தில் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்கள்.

    ×