என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer curry"

    • புவனேஷ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக அந்தப் பகுதியில் சோதனை செய்தனர்.
    • பல நாட்களாக விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தைமேடு பகுதியில் மான் கறி விற்பனை நடைபெறுவதாக மாவட்ட வன அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திண்டிவனம் வனசரக அலுவலர் புவனேஷ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக அந்தப் பகுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் மான் கறி வாங்க வந்தவர்களும் விற்பனை செய்த நபரும் தப்ப ஓட முயன்றனர். விற்பனை செய்த நபரை மடக்கி பிடித்த வனத்துறை அதிகாரிகள் அவரை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்ததில் அவர் நத்தமேடு பகுதியை சேர்ந்த அஜித் என்பதும் இவர் திருவண்ணாமலை யிலிருந்து மானை வாங்கி அதை அங்கேயே வெட்டி இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்து திண்டிவனம் பகுதியில் பல நாட்களாக விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவரை வன பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×