search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் ஓப்புதல் கிடைத்தவுடன் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேச்சு
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

    கவர்னர் ஓப்புதல் கிடைத்தவுடன் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

    • தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.
    • டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இன்று பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் 100 இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன. தற்போதய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு அரசின் இரு கண்களாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த கோப்பு கவர்னரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    பல்வேறு பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, கோலியனூர் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம், ஆலந்தூர் ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×