என் மலர்
விழுப்புரம்
- 27-ந் தேதி காலை மங்கள இசை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது.
விழுப்புரம்:
செஞ்சியை அடுத்த பரதன் தாங்கல் கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் மற்றும் கோவில் பரிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், முருகர், தாட்சாயினி, துர்க்கை அம்மன், நவக்கிரகம், கங்கை அம்மன், காத்தவராயன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு 27-ந் தேதி காலை மங்கள இசை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மதியம் சுவாமிகள் கரி கோலம் வருதல் மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இரண்டாவது நாள் நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
3-வது நாளான நேற்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடந்து தொடர்ந்து கடம் புறப்பாடு ராஜ கோபுரம் மற்றும் அனைத்து சாமிகள் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் ,தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சதீஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
- பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவர் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை ஜனார்த்தனன் ஆகியோர் இருவேல்பட்டில் வசித்து வருகின்றனர். சதீஷ்குமாரின் தந்தை ஜனார்த்தனன் விபத்தில் சிக்கி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரைக் காண வீட்டை பூட்டிவிட்டு சதீஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் சென்னைக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று மாலை இருவேல்பட்டு கிராமத்திற்கு திரும்பினர்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடை ந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, தட்டு, பஞ்சபாத்திரம், மணி போன்ற வெள்ளி பாத்திரங்கள் காணாமல் போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. திருடுப்போன வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருடு போன வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களின் பணத்தை இழந்த பல கூலித் தொழிலாளிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி சீட்டு விற்பனை செய்த முகவர்களை கைது செய்தனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் இவர்களுக்கு லாட்டரி சீட்டு வழங்கும் மொத்த வியாபாரி சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த முருகநாதன் (வயது 50) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் சென்னைக்கு விரைந்த விழுப்புரம் தனிப்படை போலீசார், தாம்பரத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற முருகநாதனை நேற்று மடக்கிப் பிடித்தனர். அவரை விழுப்புரம் அழைத்து வந்து தாலுக்கா போலீசாரிடம் ஓப்படைத்தனர். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகவர்கள் யார்? யார்? என்பதும், இதில் போலீசார் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா? யார், யார் லஞ்சம் கொடுத்து லாட்டரி விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் வந்தது.
- வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பாலம் கீழ்பகுதியில் ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசனுக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதைக் கண்டு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றார். அப்பொழுது அவரை மடக்கி பிடித்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் 1000 ரூபாய் ,பணம், 20 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள்,மற்றும்2 மோட்டார் சைக்கிள்கள், கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது.
தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள் ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 30,)அதே பகுதியை சேர்ந்த ரசாக் பாஷா (வயது 35,) என்பதும் இவர்கள் கூலி தொழிலாளர்களிடம் குலுக்கல் முறையில் பணம் விழுவதாக கூறி அவர்களிடம் சில நம்பர்களை கையால் எழுதி தந்து அவர்களிடம் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி பணம் விழுந்தால் உங்களுக்கு உடனடியாக கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணம் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 3.5 லட்சம் மதிப்பிலான 2 ேமாட்டார் சைக்கிள், 2 செல்போன்கள்,மற்றும் ரூ.1000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- மின் ஒயர் தெரியாமல் அவர் கையின் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
- சப் இன்ஸ்பெக்டர் புனித வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி ஆலம்மாள் (வயது60) என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இன்று காலை அந்தப் பகுதியில் உள்ள ஆளியம்மன் கோவிலின் பின்புறத்தில் ஆட்டிற்கு தழை வெட்டுவதற்காக சென்று உள்ளார். அறுந்து கிடந்த மின் ஒயர் தெரியாமல் அவர் கையின் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவலின் பெயரில் திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி சம்பவ இடத்திற்கு சென்று பிரோதத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் புனித வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
- பள்ளி படிக்கின்ற மாாணவர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- பெரும்பாலும் பள்ளி மாணவர்களின் தந்தை, தாய்க்கு வழங்க படுவதில்லை
விழுப்புரம்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியல் பழங்குடியினர் மாணவர்கள் ஏரளாமானோர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்கள்.இதில் பெரும்பாலான பழங்குடி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்கள் செய்ய உள்ளனர்கள்.அப்படி விண்ணப்பம் செய்ய உள்ள மாணவர்களுக்கு சில நிபந்தனைக்கு ஆளாகி உள்ளனர்கள் ஏனேன்றால் பழங்குடி மாணவர்களின் தந்தைக்கு, தாய்க்கு,பழங்குடி சாதிச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பழங்குடி மாணகர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என கூறுகின்றனர்கள்.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் பள்ளி படிக்கின்ற மாாணவ ர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் தந்தை தாய்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவது மிகவும் மிகவும் குறைவு. ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே வழங்கி இருப்பதாக தெரிகிறது பெரும் பாலும் பள்ளி மாணவர்களின் தந்தை, தாய்க்கு வழங்க படுவதில்லை.இப்படி ஒரு நிலை இருப்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பழங்குடி மக்களின் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய முடியாத நெருக்கடிக்கு உள்ளாகிஉள்ளனர்.தமிழகத்தில் நல்லாட்சி புரிந்துவரும் தமிழ்நாடு முதல்- அமைச்சர் பழங்குடி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய ஆலோசனைக் குழு ஒன்று அமைத்து மருத்துவ படிப்பிற்கு பழங்குடி மாணகர்கள் விண்ணபித்து மருத்துவம் படிப்பதற்கு வழிவகை செய்து உதவிடுமாறு பழங்குடியினர் செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 197 மாணவ, மாணவியர்களும் உள்ளனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ், "உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர்பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் எனவும், உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திட வேண்டும் என்பதற்காகவே "நான் முதல்வன்" திட்டத்தினை செயல்படுத்தினார்கள். தற்பொழுது, இத்திட்டத்தின்கீழ், மாவட்டந்தோறும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திடும் பொருட்டு "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியினை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத 550 மாணவ, மாணவியர்களும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 197 மாணவ, மாணவியர்களும் உள்ளனர் பள்ளிக்கல்வித்துறை யினால் கண்டறியப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு "உயர்வுக்கு படி மற்றும் கல்லூரிக்கனவு" நிகழ்ச்சியின் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, வருகிற 3-ந்தேதி முதற்கட்டமாக விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியிலும், 4-ந்தேதி 2-ம் கட்டமாக திண்டிவனம் அரசு பொறியியல் உறுப்பு பல்கலைக்கழகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி சேராத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வியில் சேருதல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், விடுதியில் தங்கி படித்தல் போன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலருடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, துணை கலெக்டர் (பயிற்சி) லாவண்யா, உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) சிவநடராஜன், மகாத்மா காந்தி தேசிய உறுப்பினர் ஓம் பிரகாஷ் உட்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சண்முகம் லட்சுமி இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர்.
- சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
விழுப்புரம்:
வானூர் அருகே அருவாப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவரது மனைவி லட்சுமி (55). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுவையை நோக்கி நேற்று சென்றனர். அப்போது கிளியனூர் சாலையில் சென்ற போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் சண்முகம், லட்சுமி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது சாலையில் தடுப்புக்கட்டையில் மீது விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் லட்சுமி, சண்முகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சண்முகம் உயிர் தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
- இரவு 7 மணிக்கு பொன்னேரி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சிக்கு எடு கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு உள்ள பொன்னேரி அம்மன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி காலை 9 மணிக்கு மகா கணபதி ஹோமம். 6 மணிக்கு வாஸ்து சாந்தி பிறவேமும், இரவு 9 மணி அளவில் அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல், விமான கலசம் பிரதி 24-ந்தேதி மகா பூர்ண ஹிதி பிரசாதம், 25-ம் தேதி 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். இரவு 7 மணிக்கு பொன்னேரி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சிக்கு எடு கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- அரசு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- கஞ்சா, குட்கா ,மது, புகையிலை பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அரசு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விக்கிரவாண்டி காவல்துறை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமை தாங்கினார். மாணவர்களிடையே போதை பொருள்களான கஞ்சா, குட்கா ,மது, புகையிலை பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். சப் -இன்ஸ்பெக்டர் காத்தமுத்து போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எதிர்காலம் வீணாவது குறித்தும் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை ராதா, தனிப்பிரிவு ஏட்டு சிவக்குமார், முருகன், மாணவர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். முடிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மன்மதவேல் நன்றி கூறினார்.
- பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன.
- பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
விழுப்புரம்:
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கவரை ஊராட்சியில் ரூ38 லட்சம் மதிப்பில் செயல்படுத்த உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கவரை ஊராட்சிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் விளக்க உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில் பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
அதன்படி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜா ராம் ஊராட்சி உறுப்பி னர்கள் சதீஷ், தாட்சாயினி, சங்கர், தினேஷ், கலைவாணி, சிவகாமி, பூங்காவனம், பச்சையம்மாள் ஊராட்சி செயலாளர் கனகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
- லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ராஜலிங்கம் ஓட்டி வந்தார்.
- டிரைவர் ராஜலிங்கம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொரட்டாண்டியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம். அதுபோல நாமக்கலில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வானூர் பகுதிக்கு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் ராஜலிங்கம் (வயது 56) ஓட்டி வந்தார். நாமக்கலை சேர்ந்த பிரகாஷ் (25) கிளினராக லாரியில் வந்தார். பொருட்களை இறக்கிவிட்டு தனியார் கம்பெனிைய விட்டு வெளியே வருவதற்கு நள்ளிரவாகி விட்டது. இதனால் லாரியை மொரட்டாண்டியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளினர் ஓய்வு எடுத்துள்ளனர்.
அதிகாலை 3 மணியளவில் லாரி அருகே 2 மர்மநபர்கள் வந்தனர். லாரியில் உறங்கி கொண்டிருந்த ராஜலிங்கம், பிரகாஷை எழுப்பி, கையில் உள்ள பணத்தை கொடுங்கள், இல்லையெனில் கத்தியால் குத்திவிடுவோம் என கத்தியை காட்டி மிரட்டினர். இதில் பயந்து போன டிரைவர் ராஜலிங்கம், தன்னிடம் இருந்த ரூ.4,500 பணத்தை கொடுத்துவிட்டார். கிளினர் பிரகாஷ், தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் பிரகாஷின் கையில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து டிரைவர் ராஜலிங்கம் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கத்தியால் வெட்டியதில் கையில் காயத்துடன் வந்த கிளினர் பிரகாஷை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வானூர் போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.






