search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    செஞ்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • 27-ந் தேதி காலை மங்கள இசை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த பரதன் தாங்கல் கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் மற்றும் கோவில் பரிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், முருகர், தாட்சாயினி, துர்க்கை அம்மன், நவக்கிரகம், கங்கை அம்மன், காத்தவராயன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு 27-ந் தேதி காலை மங்கள இசை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மதியம் சுவாமிகள் கரி கோலம் வருதல் மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இரண்டாவது நாள் நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    3-வது நாளான நேற்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடந்து தொடர்ந்து கடம் புறப்பாடு ராஜ கோபுரம் மற்றும் அனைத்து சாமிகள் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் ,தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×