search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க  பட்டியல் பழங்குடி மாணவர்கள்  தவிப்பு: வக்கீல் அகத்தியன் குற்றச்சாட்டு
    X

    மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க பட்டியல் பழங்குடி மாணவர்கள் தவிப்பு: வக்கீல் அகத்தியன் குற்றச்சாட்டு

    • பள்ளி படிக்கின்ற மாாணவர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • பெரும்பாலும் பள்ளி மாணவர்களின் தந்தை, தாய்க்கு வழங்க படுவதில்லை

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியல் பழங்குடியினர் மாணவர்கள் ஏரளாமானோர் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்கள்.இதில் பெரும்பாலான பழங்குடி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்கள் செய்ய உள்ளனர்கள்.அப்படி விண்ணப்பம் செய்ய உள்ள மாணவர்களுக்கு சில நிபந்தனைக்கு ஆளாகி உள்ளனர்கள் ஏனேன்றால் பழங்குடி மாணவர்களின் தந்தைக்கு, தாய்க்கு,பழங்குடி சாதிச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பழங்குடி மாணகர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என கூறுகின்றனர்கள்.

    ஆனால் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலும் பள்ளி படிக்கின்ற மாாணவ ர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் தந்தை தாய்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவது மிகவும் மிகவும் குறைவு. ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே வழங்கி இருப்பதாக தெரிகிறது பெரும் பாலும் பள்ளி மாணவர்களின் தந்தை, தாய்க்கு வழங்க படுவதில்லை.இப்படி ஒரு நிலை இருப்பதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பழங்குடி மக்களின் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய முடியாத நெருக்கடிக்கு உள்ளாகிஉள்ளனர்.தமிழகத்தில் நல்லாட்சி புரிந்துவரும் தமிழ்நாடு முதல்- அமைச்சர் பழங்குடி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்ய ஆலோசனைக் குழு ஒன்று அமைத்து மருத்துவ படிப்பிற்கு பழங்குடி மாணகர்கள் விண்ணபித்து மருத்துவம் படிப்பதற்கு வழிவகை செய்து உதவிடுமாறு பழங்குடியினர் செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×