என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரிக்கனவு"
- திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 197 மாணவ, மாணவியர்களும் உள்ளனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், "நான் முதல்வன்" திட்டத்தின்கீழ், "உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர்பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் எனவும், உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திட வேண்டும் என்பதற்காகவே "நான் முதல்வன்" திட்டத்தினை செயல்படுத்தினார்கள். தற்பொழுது, இத்திட்டத்தின்கீழ், மாவட்டந்தோறும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்திடும் பொருட்டு "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியினை நடத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத 550 மாணவ, மாணவியர்களும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 197 மாணவ, மாணவியர்களும் உள்ளனர் பள்ளிக்கல்வித்துறை யினால் கண்டறியப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கு "உயர்வுக்கு படி மற்றும் கல்லூரிக்கனவு" நிகழ்ச்சியின் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, வருகிற 3-ந்தேதி முதற்கட்டமாக விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியிலும், 4-ந்தேதி 2-ம் கட்டமாக திண்டிவனம் அரசு பொறியியல் உறுப்பு பல்கலைக்கழகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி சேராத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வியில் சேருதல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், விடுதியில் தங்கி படித்தல் போன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலருடன் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, துணை கலெக்டர் (பயிற்சி) லாவண்யா, உதவி இயக்குநர் (திறன் மேம்பாடு) சிவநடராஜன், மகாத்மா காந்தி தேசிய உறுப்பினர் ஓம் பிரகாஷ் உட்பட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






