search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலம்பூண்டி கிராமத்தில்  மாெபரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்:  கலெக்டர் பழனி தகவல்
    X

    ஆலம்பூண்டி கிராமத்தில் மாெபரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்: கலெக்டர் பழனி தகவல்

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ சிகிச்சை முகாமை நடைபெறுகிறது.
    • கால்நடை வளர்ப்போர்தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    விழுப்புரம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில், நாளை (27-ந் தேதி) மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமை நடத்துகிறது.

    நோய் வாய்ப்பட்ட கால் நடைகளுக்கு சிகிச்சை யளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடு தல், செயற்கை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூ சிகள், நெறிநோய் தடுப்பூசிகள், புல்வளர்ப்பு, தாது உப்பு கவவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பவ்வேறு சுகாதார நட வடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தே கங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் கால்நடை மருத்துவர்கள் உரிய விளக்கம் அளிப்பார்கள். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்தகன்று உரிமையாளர்களுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட வுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் இம்முகாமில் தங்கள் கால்நடைகளை கால்நடை மருத்துவர்களி டம் காண்பித்து உரிய மருத்துவ வசதி பெற்று தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரி வித்துள்ளார் தெரிவித்தார்.

    Next Story
    ×