search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செஞ்சி- வேப்பூர்  வாரச்சந்தையில் ரூ.11 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    செஞ்சி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஆடுகள்.

    செஞ்சி- வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.11 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். செஞ்சி சந்தையில் மிகவும் பிரசதிப் பெற்றது கருவாடு மற்றும் ஆட்டு சந்தை ஆகும்.

    சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களூரு போன்ற மாநிலங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று செஞ்சி வாரசந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களூரு மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய செஞ்சி வார சந்தைக்கு வந்து குவிந்தனர்.

    அதற்கேற்றார் போல் கிராமப்பகுதிகளிருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக ஆடுகள் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மேலும் தனி ஆடு அதிகபட்சமாக ரூ 20 ஆயிரம் வரை விலை போனது. இது விவசாயிகளுக்கு நல்ல விலையாகும். இந்த வார சந்தையில் மட்டும் சுமார் ரூ 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி இருக்கலாம் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அதன் படி இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×