என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 45). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இதனையடுத்து கடந்த 5-ந்தேதி இரவு பேரணியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பேரணி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சித்தணியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அருள்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து செஞ்சியை சேர்ந்த பச்சமுத்து (20), சதீஷ்குமார் (23) ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆட்டோ டிரைவர் அருள்குமார் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்கள் அப்பளம் போல நொறுங்கியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி தனியார் பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் வானூர் அடுத்த மொரட்டாண்டி அருகே வந்த போது, திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்தது. தனியார் பஸ் மாடு மீது மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரும்பை கிராமத்தை சேர்ந்த சத்யா (35), காரில் வந்த சத்தியமூர்த்தி (42), அவரது மனைவி வனிதா (37) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும், விபத்தில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள்கள் அப்பளம் போல நொறுங்கியது. அவ்வழியே சென்றவர்கள், விபத்துக்குள்ளான 3 பேரையும் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி இறந்து போனார். இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி வனிதா, மோட்டார் சைக்கிளில் வந்த சத்யா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக அடுத்தடுத்த அதி வரைவு ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    தாதர் சாளுக்கியா, அனந்தபுரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 4 ரெயில்கள் 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்தடுத்து பொதிகை எக்ஸ்பிரஸ், கம்பன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சிறப்பு ரெயில்களும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.
    • டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. மறைந்தவிஜயகுமார். திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி , அவர் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ,விழுப்புரம் டி.ஜி.பி. ஜியாஉல்ஹக், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. பகலவன். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்க் சாய், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் ,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண்உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த டி.ஐ. ஜி விஜயகுமாருக்குஅஞ்சலி செலுத்தினார்கள். விழுப்புரம் சரகம் மற்றும் காஞ்சிபுரம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    • முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
    • மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    புதுவை அரசு சார்பில் ரூ.2638 கோடி கடன் 1.42 லட்சப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தாகூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை தாங்கினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் புதுவையைச் சுற்றியுள்ள 141 சுய உதவிக் குழுக்களின் 1672 உறுப்பி னர்களுக்கு பவ்டா நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

    இந்த கடிதம் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன், துணை பொது மேலாளர் ஜனதீஸ்வர் காரி, துணை பொது மேலாளர் கல்பனா முதலியார், சேலம், மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில்  வழங்கப்பட்டது.பவ்டா நிதி நிறுவனத்தின் சார்பில் முதுநிலை உதவிப் பொது மேலாளர் சிவராஜ், உதவிப் பொது மேலாளர் மகேஷ்வரி, முதுநிலை உதவிப் பொது மேலாளர் சங்கர், உதவிப் பொது மேலாளர்கள் பிரேம்குமார், கார்திக்கேயன், கிளை மேலாளர்கள் பிரபாவதி, முருகன், முருகேஷ், ஹரி கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது.
    • ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியில் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகா ரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை நடத்தினார். செஞ்சி பேருராட்சி 18- வது வார்டில் சக்கராபுரம் - பொன்பத்தி செல்லும் பிரதான சாலையில் பொன்பத்தி ஏரி உபரி நீர் செல்லும் மேம்பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. இதே போல் செஞ்சி சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது. இந்த 2 இடங்க ளிலும் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் செயல் அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அஞ்சாஞ்சேரி கணேசன், நகர செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் செயல்மணி, கவுன்சிலர் மோகன், தொண்டரணி பாஷா, ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
    • தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும் தகவல்.

    தக்காளி, இஞ்சி, மிளகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், விலைவாசி உயர்வு மக்களை பெரிதாக பாதிக்காது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    இப்போது வருவாய் என்பது பெரிய விஷயமே இல்லை. சாதாரண கூலித்தொழிலாளி தினம் 1000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மக்கள் மத்தியில், ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் தாராளமாக உள்ளன.

    இப்போது விலைவாசி ஏறும் சமயத்தில் மக்கள் பெரிய அளவில் சிரமப்படவில்லை. அதற்கு ஏற்ற வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. வருவாய் கூடுதலாக வருவதால் ஓரளவு சரிசெய்ய முடிகிறது.

    தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும். அதைக்கூட கட்டுப்படுத்தத்தான் ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.
    • கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பூவரங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. தென் அகோபிலம் என்று போற்றப்படும் இக்கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்ப ட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோயிலில், இந்த பூவரசங்குப்பம் கோயில், நடுவில் இருக்கிறது. இக்கோயிலில், மூலவர் லட்சுமி நரசிம்மர், 4 கரங்க ளுடன் காணப்படுகிறார். இந்த கோவிலில், 150 ஆண்டுகளுக்குப் பின், பிரமோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்தில் புதியத் தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா, கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம், கடந்த 6 ஆம் தேதி நடை பெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.

    அதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேர் புறப்பாடானது. விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் தலைமை தாங்கி இத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முன்னால் எம்.எல்.ஏ புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானநந்தம், கண்டமங்கலம் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் முன்பிருந்து தேர் புறப்பட்டு, சிவன் கோயில் தெரு உள்ளிட்ட 4 மாடவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தைக் காண பூவரசங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • மர்ம கும்பல் காமராஜை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்து சாலையிலேயே வீசிவிட்டு சென்றனர்.
    • கொலை நடந்த இடத்தில் இருந்த கத்தி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் போன்ற தடயங்களை போலீசார் கைப்பற்றினர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 55). கேபிள் டி.வி. ஆப்ரேட்டர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சின்ன நெற்குணம் சர்வீஸ் ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    நேற்று இரவு 11 மணியளவில் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். நெடுஞ்சாலை அருகில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மர்ம கும்பல் காமராஜை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்து சாலையிலேயே வீசிவிட்டு சென்றனர்.

    இரவு 11.45 மணியளவில் அவ்வழியே வந்த நபர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து, காமராஜ் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தார். அலறியடித்து வந்த காமராஜ் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது தொடர்பாக மயிலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் கத்தியால் வெட்டியதில் காமராஜின் முகத்தில் அதிகளவில் காயங்கள் இருந்தன. மேலும் கை மற்றும் தோள்பட்டையில் கத்தி வெட்டு காயங்கள் இருந்தன.

    கொலை நடந்த இடத்தில் இருந்த கத்தி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் போன்ற தடயங்களை போலீசார் கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட காமராஜிக்கும், அப்பகுதியில் உள்ள யாருக்கும் முன்விரோதம் இல்லை என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மயிலம் போலீசார், காமராஜை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை அருகே நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • கரிக்கம்பட்டு பகுதியில் வந்த போது, பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடந்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் நோக்கி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தை சேர்ந்த நாகப்பன் (வயது 51), சிவபாலன் (57) ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஒலக்கூர் அடுத்த கரிக்கம்பட்டு பகுதியில் வந்த போது, பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடந்துள்ளார். இவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கார் பின்னால் வந்த அரசு பஸ், காரை மோதியது. அரசு பஸ் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதியது. கண்டெய்னர் பின்னால் வந்த கார், கண்டெயினர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உள்பட கடலூரை சேர்ந்த தையல்நாயகி (47), வடலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (50), விழுப்புரம் பொன்னி (45), பண்ருட்டி பலராமன் (61), திண்டிவனத்தை சேர்ந்த ஜெயபிரதாப் (28), ரமணி (30), பெருமாள் (40) ஆகியோர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • கொலை வழக்கில் 7 பேர் சரணடைந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திண்டிவனம்:

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலையில் 2-வது குற்றவாளியான ரவுடி லோகேசை நேற்று மதியம் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் சரமாரியாக வெட்டிசாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லோகேசை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பாரத் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக தின்டிவணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு தாம்பரம் பகுதியை சேர்ந்த ராகுல், தனசேகரன், பிரவீன்குமார், லோகேஷ், அரவிந்த்குமார், ரூபேஷ், சாம்சன்மோசஸ் உள்ளிட்ட 7 பேர் சரண் அடைந்தனர்.

    இந்த கொலை வழக்கில் 7 பேர் சரணடைந்த நிலையில் நீதிமன்ற வளாகம் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன்.
    • ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன். இவரை நேற்று அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த முரளி என்ற ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கடந்த 35 ஆண்டுகளாக அதிமுக கட்சி பதவியில் வகித்து பல்வேறு கட்சி பணிகளை செய்து வந்தேன். எனது இளைய மகன் திருமணத்திற்கு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதனால் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எந்தவித அறிவிப்பும் இன்றி என்னை நீக்கியுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம் நீங்கள்பாஜக கட்சியில் இணைந்துள்ளீர்களா? என நிருபர்கள் கேட்டபோது இதற்கு பதில் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.

    ×