என் மலர்
விழுப்புரம்
- காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,
- 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெரும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருள் அரசி, தனஜெயன், லட்சுமி, குமாரி, பவானி, வடிவுக்கரசி, முத்துலட்சுமி, சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலர் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலக சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ராகவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சங்கத்தின் மாநில துணைத்த லைவர் அபராஜிதன் உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகள் குறித்த கோஷங்கள் எழுப்பினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
- பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அடசல் பகுதியை சேர்ந்தவர் செந்தாமரை என்கிர ஏகாம்பரம் (வயது 35). இவர் புதுவையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் உள்ள காலிமனையில் பள்ளம் தோண்டி பூமிக்கு அடியில் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதில் ஏகாம்பரம் வீட்டின் பின்புறம் உள்ள காலி மனையில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே போலீசார் பள்ளம் தோண்டி மறைத்து வைத்து விற்பனை செய்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இதற்கு காரணமான ஏகாம்பரத்தை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஏகாம்பரத்தை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது.
- பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், முத்து. முத்துவின் உறவினர் அந்தமானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மதுரை வருகிறார். அவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர டிரைவர் முத்துவை அழைத்துக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சித்தர் கோவில் அருகே கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முத்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் மணி, கிருஷ்ணன் ஆகியோர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் பலியான முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
- கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி.
- மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்லக்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்சினைக்குள்ளான திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந்தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதனை தொடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந்தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தினார்.
இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிடமும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
அப்போது வருகிற 31-ந்தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் மேல்பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அதன் பிறகும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் மதமாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்தனர்.
இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- வள்ளலார் அருள் மாளிகை தனிநபர் ஒருவரின் கைவசம் இருந்து வந்தது.
- வள்ளலார் மாளிகை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் - புதுவை சாலையில் வள்ளலார் அருள் மாளிகை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டது. அதுமுதல் இங்கு அன்னதானமும், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் இங்கு ஜோதி வழிபாடும், தைப்பூச தினத்தில் சிறப்பு ஜோதி தரிசனமும் நடைபெறும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வள்ளலார் அருள் மாளிகை தனிநபர் ஒருவரின் கைவசம் வந்தது. பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் அருள் மாளிகை தொடர்பாக பல்வேறு புகார்கள் இந்து அறநிலையத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்றது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் சிவகரன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வள்ளலார் அருள் மாளிகைக்கு இன்று காலையில் வந்தனர். அப்போது முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது.
தொடர்ந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வள்ளலார் மாளிகையின் பின்பக்கமாக சென்ற அறநிலைய த் துறை ஊழியர்கள் அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த பிரதான கதவை திறந்தனர். தொடர்ந்து வாயிலில் இருந்த கேட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் கணக்கெடுத்தனர். பின்னர் பரிக்கல் லட்சுமி நரசிம்மன் கோவில் செயல் அலுவலர் வரவழைக்கப்பட்டார். இந்த வள்ளலார் மாளிகையை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.
இது குறித்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், தனியார் வசம் இருந்த விழுப்புரம் வள்ளலார் மாளிகை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வழக்கம் போல அன்னதானமும், வழிபாடுகளும், ஜோதி தரிசனமும் நடைபெறும். இதனால் சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினர். வள்ளலார் அருள் மாளிகையை இந்து அறநிலையத் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்த சம்பவம் ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
- ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மற்றும் குரூப் 2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்வருகிற 15-ந் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள்14-ந் தேதி –க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்அணுகி முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும்இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் பறிமுதல் செய்தனர் .
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் கிழக்கு மடத் தெருவில் வசித்து வருபவர் குமாரி (வயது 50). இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் சாராயம் விற்பனை செய்து வருவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப் மற்றும் போலீசார் முத்து, பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆலத்தூர் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குமாரியை கையும்- களவுமாக பிடித்து இவர் வைத்திருந்த புதுவை சாராய பாக்கெட் 5 எண்ணிக்கை கொண்டவை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து திண்டிவனம் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து பின்பு சிறையில் அடைத்தனர்.
- இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
- ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள மேல் பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல க்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன் படுத்தி பிரச்சினைக்குள்ளாாள திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந் தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வரு வாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதனை ெதாடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந் தேதி விழுப் புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கி யஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தி னார். இேதபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிட மும் வருவாய் கோட்டாட்சி யர் விசாரணை நடத்தி னார். அப்போது வருகிற 31-ந் தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கா விட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் மேல் பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பிறகும் கோவி லுக்குள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்த னர். இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது.
- மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கேவிஏ மின் திறன் கொண்ட 2 மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகள் மூலம் விவசாய பயிர்களுக்கு மின்சாரம் செல்கின்றது. மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் செல்கின்றது.
இந்த 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது. இன்று வரை இந்த மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யாத தால் விவசாயிகள், பொது மக்கள் மின்சாரம் பற்றாக் குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விளக்கு, மின்விசிறி, வீட்டு உப யோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றி யை சரி செய்வ தற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீகாந்த் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- 3 பேருக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணை அய்யனாரப்பன் கோயில் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(23) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் ரஜினி, நவீன் மற்றும் நாகந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பெரிய தச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 4 பேரும் மது அருந்தி இருந்ததும் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்தில் பலியான ஸ்ரீ காந்த்திற்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. ஸ்ரீகாந்தின் குழந்தைக்கு வருகிற 28-ந் தேதி முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிவா, சுரேஷ் வீட்டிற்கு வந்து பரமேஸ்வரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
- சிவாவை அசிங்கமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றால் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (29). கடந்த 7-ந்தேதி சுரேஷ் வேலைக்கு சென்றவுடன் பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவா, சுரேஷ் வீட்டிற்கு வந்து பரமேஸ்வரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
தண்ணீர் எடுத்து வர பரமேஸ்வரி சென்றார். அவரை பின்தொடர்ந்த சிவா, பரமேஸ்வரியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது பரமேஸ்வரி கூச்சலிடவே, சிவா தப்பியோடியதாக தெரிகிறது. இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசில் பரமேஸ்வரி புகார் அளித்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சையது முகமது அலி வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவாவை தேடி வந்தார்.
இந்நிலையில் நேற்று சிவாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து கொண்டு இருந்தனர். இத்தகவல் அறிந்த பரமேஸ்வரியின் கணவர் சுரேஷ் டாஸ்மாக்கிற்கு சென்று மது அருந்தினார். குடிபோதையில் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சிவாவை அசிங்கமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலைய எழுத்தர் புவனேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்
- பல ஆண்டுகளாக இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடியது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபையில் மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து டீசல் திருடுவதாக ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் அனந்தராசனுக்கு தகவல் வந்தது .இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் பெட்ரோலை திருடிவிட்டு போலீசாரை கண்டவுடன் லாரியில் வேகமாக சென்று விட்டார். போலீசார் அவரை சினிமா பாணியில் சேசிங் செய்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாக சென்று அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பன் (56) என்பது தெரிய வந்தது. இவரை கைது செய்து டீசல் மற்றும் கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் இவர் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






