search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrition worker"

    • காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,
    • 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெரும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருள் அரசி, தனஜெயன், லட்சுமி, குமாரி, பவானி, வடிவுக்கரசி, முத்துலட்சுமி, சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலர் வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலக சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார், தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ராகவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக சங்கத்தின் மாநில துணைத்த லைவர் அபராஜிதன் உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகள் குறித்த கோஷங்கள் எழுப்பினர்.

    ×