என் மலர்
வேலூர்
குடியாத்தம்:
கே.வி.குப்பம் அருகே உள்ள காவலூர் மோட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கே.வி.குப்பம் போலீசார் நேற்று இரவு ஆறுமுகம் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆறுமுகம் அவரது மகன் பிரேம் (வயது 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முயல் வேட்டைக்காக அவர்கள் நாட்டுத்துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததாக கூறினர். அவர்களுக்கு விற்பனை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்ரோடு, ஈத்கா மைதானம் பகுதியை சேர்ந்த சமிஉல்லா மகன் அஸ்லாம் பாஷா (வயது 30). இவர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அஸ்லாம் பாஷா குடும்பத்தினரோடு பெங்களூருவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகை, மற்றும் ரூ.85 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.
வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அஸ்லாம்பாஷாவிற்கு தகவல் கொடுத்தனர்.
அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து அஸ்லாம்பாஷா உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை மீட்பு பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர்.
மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாநகர இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் 60 ஆண்டுகள் பழமையான கும்மாத்தம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான அன்னதான கூடம், விநாயகர் சிலை, அனுமன் சிலை ஆகியவற்றை ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இடித்து விட்டனர்.
மேலும் கோவிலுக்கு பூட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
வேலூர்:
கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி (வயது45). விவசாயி. இவரது சித்தப்பா மகன் ஜெயராமன் (40). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விராதம் இருந்தது.
நேற்று மாலை தளபதி அங்குள்ள ஏரிக்கரையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஜெயராமனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் தளபதியை அரிவாளால் வெட்டினார். இதில் கழுத்து, முகத்தில் தளபதி படுகாயம் அடைந் தார். கே.வி.குப்பம் போலீசார் தளபதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் சி.எம்.சி.யில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.
வேலூர்:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 4 பேர் இறந்தனர். ஆண் ஒருவர் அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது புகைப்படம் இன்று செய்திதாளில் வெளியாகி இருந்தது. இதனை அவரின் உறவினர்கள் பார்த்து அடையாளம் கண்டு பிடித்தனர்.
அவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மோகன் (வயது65) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் கஸ்பா பகுதி அ.தி.மு.க. துணை செயலாளராக பணியாற்றி வந்தார். அண்ணா காலத்தில் தி.மு.க.வில் இருந்த அவர் எம்.ஜி.ஆர். பிரிந்து சென்ற போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கருணாநிதி இறந்த தகவல் கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.
அவரது மனைவி பார்வதி சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் திராவிட தலைவர்களில் கடைசி தலைவர் இறந்து விட்டார். நான் கட்டாயம் அவர் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தியே ஆகவேண்டும் என்று கூறி ரூ.2 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு சென்னைக்கு ரெயிலில் வந்தார்.
அங்கு வந்த அவர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டார். இறந்த மோகனுக்கு பார்வதி என்ற மனைவி, மகன் பாலாஜி, மகள் இந்துமதி உள்ளனர். #karunanidhideath #dmk
வாலாஜா:
வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தி.மு.க. பிரமுகர். இவர் 20 ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். இவர் கருணாநிதி அடக்கம் செய்யும் காட்சியை பார்த்து விட்டு துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினார்.
திடீரென அறைக்குள் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 8 போலீஸ் உட்கோட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துப் போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூலை மாதம் வரை 7 மாதங்களில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,119 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 35 ஆயிரத்து 665 பேர் மீதும், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய 725 பேர் மீதும், ‘ஷீட் பெல்ட்’ அணியாமல் கார் ஓட்டிய 8 ஆயிரத்து 324 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டிய 14 ஆயிரத்து 310 பேர் மீதும், அதிகபாரம் ஏற்றிய 1,109 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிக உயரத்தில் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்தவர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியவர்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 834 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 1 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்து 192 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
மேலும் கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய மற்றும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றது, சாலையில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 760 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்பேரில் 12 ஆயிரத்து 676 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாலாஜா அருகே உள்ள கரடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 51) விவசாயி. இவர் நேற்று கீழ் கரடி குப்பத்தில் இருந்து மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பூட்டியிருந்த மாடு திடீரென மிரண்டு ஓடியது. ராஜி மாட்டினை கட்டுப்படுத்த முயன்ற போது மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லால் அமைக்கப்பட்ட அந்த சிலையில் வெண்கலம் போல பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பீடத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் படங்கள் வைத்திருந்தனர். கருணாநிதி சிலையை கண்ட பொதுமக்கள் சிலை முன்பு அஞ்சலி செலுத்தி சென்றனர்.
இது பற்றி தகவலறிந்த வருவாய்துறை, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி உடனடியாக சிலையை அகற்றினர். அகற்றப்பட்ட சிலை மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு ஜி.ஆர்.கே. மூர்த்தி பரதராமி அடுத்த சாமிரெட்டி பள்ளி கிராமத்தில் கருணாநிதிக்கு கோவில் கட்ட முயற்சி செய்தார்.
கட்சி தலைமை தலையீட்டால் அதனை கைவிட்டார். தற்போது அவர் கருணாநிதிக்கு முதன் முதலாக சிலை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி மூர்த்தி கூறுகையில்:- அனுமதி பெறாததால் கருணாநிதி சிலையை அகற்றியுள்ளனர். உரிய அனுமதி பெற்று மீண்டும் கருணாநிதி சிலையை திறப்பேன் என்றார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை திருத்த கூடாது, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் தொழில் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டன.
அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு, ஆம்பூர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தன.
இதில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சம்பத், ஆம்பூர் அரசு, பாலகிருஷ்ணன், சுப்பிரமணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், சுங்கச்சாவடி கட்டணத்தை கைவிடக்கோரியும், மோட்டார் வாகன துறைக்கு தனிவாரியம் அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் ராணிப்பேட்டை முத்துக்கடையில் சுற்றுலா வேன், கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டில் பி.டி.ஓ.வாக பணியாற்றியவர் ரவி. இந்த காலகட்டத்தில் கீழ்மொணவூர், அன்பூண்டி, மேல்மொணவூர், பூதூர், கருகம்புத்தூர் ஆகிய 5 கிராமங்களில் ரூ.10 லட்சம் மதிப்பில் 146 எல்.இ.டி. பல்புகள் பொருத்தியதாக போலியான பில் தயாரித்து தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து 2 முறை காசோலை கொடுத்து ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 900 எடுத்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தார்.
அப்போது வேலூர் பி.டி.ஓ.வாக இருந்த ரவி. பின்னர் திருப்பத்தூர் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி சில காரணங்களால் பணிஓய்வு பெறவில்லை.
துணை பி.டி.ஓ.வாக (நிர்வாகம்)இருந்த மோகன் ஆலங்காயம் யூனியனுக்கு மாற்றப்பட்ட இவரும் கடந்த 31-ந்தேதி பணி ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா, அவரது கணவர் ஆனந்தராஜ், ஆற்காடு ரோட்டில் உள்ள பைப் கடை உரிமையாளர் ஆகியோருக்கு 5 பஞ்சாயத்துகளில் 146 எல்.இ.டி. பல்புகளை ஒன்றிய பொது நிதியில் இருந்து வாங்கியதாக போலியான பில் தயாரித்து பணம் கையாடல் செய்துள்ளதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக அரசு அலுவலகங்களில் பணம் கையாடல் செய்யும் போது அரசு அதிகாரிகள் தான் சிக்குவார்கள்.
ஆனால் இப்போது அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர், அவரது கணவர் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






