என் மலர்
நீங்கள் தேடியது "வாலாஜா அருகே விவசாயி பலி"
வாலாஜா அருகே மாட்டு வண்டியில் இருந்து விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள கரடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 51) விவசாயி. இவர் நேற்று கீழ் கரடி குப்பத்தில் இருந்து மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பூட்டியிருந்த மாடு திடீரென மிரண்டு ஓடியது. ராஜி மாட்டினை கட்டுப்படுத்த முயன்ற போது மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.