என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுத்துப்பாக்கி பதுக்கல்"

    கே.வி.குப்பம் அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    குடியாத்தம்:

    கே.வி.குப்பம் அருகே உள்ள காவலூர் மோட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கே.வி.குப்பம் போலீசார் நேற்று இரவு ஆறுமுகம் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ஆறுமுகம் அவரது மகன் பிரேம் (வயது 23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    முயல் வேட்டைக்காக அவர்கள் நாட்டுத்துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததாக கூறினர். அவர்களுக்கு விற்பனை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×