என் மலர்
வேலூர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த சித்தேரி வழியாக வேனில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அரக்கோணம் மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி போலீசாருடன் சென்று அந்த பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் 3 கேன்களில் சாராயம் இருந்தது. சுமார் 110 லிட்டர் சாராயத்தையும், வேனையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஐப்பேடுவை சேர்ந்த முரளி (37) என்பவரை கைது செய்தனர்.
இதைப்போன்று அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பழனிப்பேட்டை பகுதியில் ஈஸ்வரி மற்றும் அம்பேத்கர் நகரை சேர்ந்த அமுலு என்பவரும் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை நடத்திய சோதனையில் சந்திரன் என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றி அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த மேல்வல்லம், சந்தனக் கொட்டாய், கண்ணமங்கலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 12-ந்தேதி இரவு சுமார் 9 மணியளவில் அடுத்தடுத்து 6 அரசு பஸ்களின் கண்ணாடிகளை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி கடைத்து விட்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பஸ்களின் டிரைவர்கள் அளித்த புகாரின்பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் வேலூர் அடுத்த கொல்லைமேடு, புதூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 21), சித்தேரி தென்றல் நகரை சேர்ந்த சிவராஜ் (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் 2 பேரும் தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், துறைத் தலைவர் மீதுள்ள கோபத்தில் அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சரவணன், வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி (வயது 31). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருணாதேவி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் அருணாதேவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி தகராறு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் மீது அருணாதேவி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.83 லட்சம் கனஅடியில் இருந்து 1.86 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், இன்று அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.95 லட்சம் கன அடியில் இருந்து 2.05 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2005-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதே மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam
ஆந்திர மாநிலம் சீராலா ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று மதியம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
சிறிதுநேரம் கழித்து அந்த ரெயில் ரத்து செய்யப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்ததாக வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரி தெரிவித்தார். ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். மேலும் திடீரென ரத்து செய்தால், நாங்கள் எப்படி செல்வது என்று பயணிகள் வாணியம்பாடி ரெயில் நிலையத்தையும், ரெயில் நிலைய அதிகாரியையும் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பயணிகளிடம் கேரள மாநிலத்தில் அதிகளவு மழை பெய்ததால் ரெயில் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு பயணிகள் கலைந்து சென்றனர்.
ரெயிலில் இருந்த சுமார் 1000 பயணிகளை சென்னை - மங்களூரு நோக்கி செல்லும் ரெயிலில் ஏற்றிவிட்டனர். அதன்பிறகு ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு, ரெயில் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்றது.
மீதமுள்ள 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை - கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும், சென்னை - திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாலக்காடு வரை பாதுகாப்புடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews
வேலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு முகாம் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.
இதில் தேர்வு செய்யப்படுவோர் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யடுவார்கள். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும். இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
டிரைவர் பணியிடத்துக்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம் இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 23 வயதுக்கு மேல் 35 வயதுக்கு மிகாமலும், உயரம்162.5 செ.மீக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
டிரைவிங் லைசென்ஸ், பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு மனிதவள நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகள் சம்பந்தப்பட்ட தேர்வு ஆகியன நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இ.எம்.டி. பிரிவினருக்கு பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பாம், டி.எம்.எல்.டி. அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் பங்கேற்கலாம். வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
இ.எம்.டி. டிரெய்னி பிரிவுக்கு ஓராண்டு டெக்னீசியன் கோர்ஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாணியம்பாடி பெருமாள்பேட்டை சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் அங்கு நடந்த கோவில் திருவிழாவில் ஜவகர் (27) என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஜவகர் கத்தியால் பார்த்திபனை தாக்க முயன்றார். பார்த்திபன் தனது கையால் தடுத்த போது கை துண்டானது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவகர், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். #tamilnews
ஆந்திர மாநிலம், தாலுமன்சென்டர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பிரகாசம்பாபு (வயது 63). இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் ஆபிரகம். இவர் கேரளாவில் பல் மருத்துவராக உள்ளார்.
நேற்று முன்தினம் ஆபிரகமை பார்ப்பதற்காக ஐதராபாத் - திருவனந்தபுரம் நோக்கி செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சீராலாவில் இருந்து கொல்லம் நோக்கி கணவன்-மனைவி இருவரும் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்துவிட்டு, மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கவிதாவின் பையை மர்ம நபர் ஒருவர் பிடித்து இழுத்தார். திடுக்கிட்டு கவிதா முழித்து பார்ப்பதற்குள் அந்த மர்ம நபர் பையை திருடிக் கொண்டு, ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
ரெயிலில் ரோந்து பணியில் இருந்த போலீசார் கவிதாவிடம் விசாரித்ததில், பையில் 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை அடைந்தது.
இதுகுறித்து பிரகாசம்பாபு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலங்கள் திறக்கபடவில்லை, மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது.
திருப்பத்தூரில் வாஜ்வாய் மறைவையொட்டி கடைகளை அடைக்கபட்டன. கிருஷ்ணகிரி மெயின்ரோடு, மெயின் பஜார், பஸ் நிலையங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
ஆம்பூர் பஜார் வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடியது. இதனால் திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் இயல்பு நிலை பதிக்கப்பட்டது.
வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, அண்ணாசாலை, ஆற்காடு ரோடு, காட்பாடி பகுதிகளில் வழக்கம் போல கடைகள் திறந்திருந்தன பஸ் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. #AtalBihariVajpayee #RIPVajpayee
வேலூர் மாவட்டம் வாலாஜா பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணன். செய்யாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அருணாதேவி (வயது 33).
இவர்களுக்கு லோகேஷ் மற்றும் யோகேஷ் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் லோகேஷ் 9-ம் வகுப்பும் மற்றும் யோகேஷ் 7-ம் வகுப்பும் படிக்கின்றனர். சரவணனுக்கும், அவரது மனைவி அருணாதேவிக்கும் கருத்து-வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது அருணாதேவி புகார் அளித்தார். போலீசார், வீட்டு மேல் தளத்தில் சரவணனையும், கீழ் தளத்தில் குழந்தைகளுடன் அருணாதேவியையும் தங்கி வசிக்குமாறு சமசரப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, பள்ளி துணை முதல்வராக பணிபுரிந்து வந்த சரவணனை, பள்ளி நிர்வாகம் திடீரென அப்பொறுப்பில் இருந்து நீக்கி வெளியேற்றியது. சரவணன் வீட்டிலேயே இருந்ததால் மனைவியுடனான தகராறு நீடித்தது.
நேற்று காலை மகன்களை வழக்கம் போல் அருணா தேவி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மாலையில் குழந்தைகள் வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, தாய் அருணா தேவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து குழந்தைகள் 2 பேரும் கதறி அழுதனர்.
தகவலறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சரவணனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் அருணாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜா தென்றல் நகரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 54). இவர், மேடை கலைக்குழுவினருக்கு இசை பயிற்சியாளராகவும், பாடகராகவும் இருந்தார். இவரது மனைவி தனுஜா குமாரி (48). தனியார் பள்ளி இந்தி ஆசிரியை.
இவர்களுக்கு பிரதீஸ்வரன் (25), பிரசாத் (20) என 2 மகன்கள் உள்ளனர். பிரதீஸ்வரன், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். பிரசாத் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், நேற்றிரவு அசோக்குமாருக்கும், மூத்த மகன் பிரதீஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பிரதீஸ்வரன் தந்தை என்ற பாசம் இரக்கமின்றி அசோக் குமாரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்தகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். நள்ளிரவு 1 மணியளவில் இந்த கொலை சம்பவம் குறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து, பிரதீஸ்வரன் மற்றும் அவரது தாய், தம்பியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






