என் மலர்
செய்திகள்

வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பத்தூர், ஆம்பூரில் கடைகள் அடைப்பு- பஸ்கள் வழக்கம் போல ஓடின
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி திருப்பத்தூர், ஆம்பூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடின. #AtalBihariVajpayee #RIPVajpayee
திருப்பத்தூர்:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலங்கள் திறக்கபடவில்லை, மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடியது.
திருப்பத்தூரில் வாஜ்வாய் மறைவையொட்டி கடைகளை அடைக்கபட்டன. கிருஷ்ணகிரி மெயின்ரோடு, மெயின் பஜார், பஸ் நிலையங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
ஆம்பூர் பஜார் வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடியது. இதனால் திருப்பத்தூர், ஆம்பூர் பகுதியில் இயல்பு நிலை பதிக்கப்பட்டது.
வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, அண்ணாசாலை, ஆற்காடு ரோடு, காட்பாடி பகுதிகளில் வழக்கம் போல கடைகள் திறந்திருந்தன பஸ் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. #AtalBihariVajpayee #RIPVajpayee

Next Story