என் மலர்
வேலூர்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. அங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 76 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும்.
வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவாக உள்ள வாக்குகளை எண்ணும் மையத்தில் பணிபுரிய உள்ள 324 மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாக்கு எண்ணும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ரெண்டாம் கட்ட இறுதி பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடந்தது.
வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் நாளை காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும்.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாளரின் சார்பிலும் வாக்குகள் எண்ணும் முகவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இது தவிர உதவி தேர்தல் அலுவலர் மேஜையில் கூடுதலாக ஒரு முகவர் இருப்பார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்றுவாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை காலை 7.30 மணியளவில் வேட்பாளர்கள், முகவர்கள் பொது தேர்தல் பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும். அதன்பின் 8 மணியளவில் தபால் வாக்குகளும் 8.30 மணிக்கு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும்.
வேட்பாளர்களின் வாக்கு எண்ணும் முகவர்கள் காலை 7 மணிக்குள் வரவேண்டும். வாக்கு எண்ணும் மையத்தினுள் தங்களுடைய செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. அப்படி கொண்டு வருபவர்களின் செல்போன் வைத்திட தனி மையம் அமைக்கப்பட்டு அதில் பாதுகாப்பாக வைத்துவிட்டு மையத்திற்கு சென்று பார்வையிடலாம்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரிய உள்ள அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

இங்கு துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் 76 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 320 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் 375க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ராணுவ வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வாக்குகள் மட்டும் தனியாக வைக்கப்பட்டு இருக்கும். அதில் கியூஆர் கோடு இருக்கும். அந்த கோடு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
அதன்பிறகு 8.30 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும்.
இதற்கான ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்கு எண்ணும் அறையில் 14 டேபிள்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மேற்பார்வையாளர், மைக்ரோ அப்சர்வர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றுவார்கள். மொத்தம் 24 சுற்றுகள் ஓட்டு எண்ணப்படுகிறது.
ஒரு அறையில் தேர்தல் நடத்து அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் இல்லாமல் மொத்தம் 55 பேர் தேர்தல் பணியில் இருப்பார்கள்.
கடைசி 2 சுற்றுக்கு முன்பு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படும். அப்போது தபால் வாக்கு பதிவுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதன்பிறகு மீண்டும் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அனைத்தும் முடிந்த பிறகு ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
பின்னர் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் விவிபேட்டில் எந்த சின்னத்துக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது கணக்கிடப்படும்.
காலை 9 மணியில் இருந்தே முன்னணி நிலவரம் தெரியவரும். 11 மணியளவில் ஓரளவுக்கு வெற்றி வேட்பாளர் விவரம் தெரிந்து விடும்.
அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவாரா? அல்லது தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு வெற்றி கிடைக்குமா? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த் உள்பட மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்கு பதிவு மின்னணு எந்திரங்கள் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் 350 போலீசார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆண்கள் 7,01,351, பெண்கள் 7,31,099, மூன்றாம் பாலினத்தவர் 105 பேர் என மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலையொட்டி 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

சட்டசபை தொகுதி வாரியாக வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள 2,45,055 வாக்காளர்களில் 1,63,337 பேரும் (66.65 சதவீதம்), அணைக்கட்டு தொகுதியில் 2,39,045 வாக்காளர்களில் 1,78,723 பேரும் (74.77 சதவீதம்), கே.வி.குப்பம் தொகுதியில் 2,14,826 வாக்காளர்களில் 1,62,413 பேரும் (75.60 சதவீதம்), குடியாத்தம் தொகுதியில் 2,71,855 வாக்காளர்களில் 1,87,743 பேரும் (69.06 சதவீதம்), வாணியம்பாடி தொகுதியில் 2,36,911 வாக்காளர்களில் 1,73,545 பேரும் (73.25 சதவீதம்), ஆம்பூர் தொகுதியில் 2,24,863 வாக்காளர்களில் 1,58,591 பேரும் (70.53 சதவீதம்) வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வாக்குகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் தெரியவரும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. மொத்த 21 சுற்றுகள் எண்ணப்படுகிறது.
குடியாத்தம் மேல்ஆலத்தூர் ரோடு ஜோகிமடம் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 1 ஆண்டாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் தங்கமணி இப்பகுதியில் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது பொதுமக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர். அதை ஏற்ற அமைச்சர் டாஸ்மாக் கடையை அன்றே மூட உத்தரவிட்டார். இதையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க ஊழியர்கள் வந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கடையை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்ட பின்பும் திறக்கப்படுவது ஏன் என ஆவேசமாக கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பனப்பாக்கத்தை அடுத்த பாணாவரத்தில் உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (52), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (49), பாணாவரம் ரெயில் நிலையம் அருகே இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு பிரகாஷ் (25) என்ற மகனும், பிரியா (19) என்ற மகளும் உள்ளனர்.
இவர்களில் பிரகாஷ் பெங்களூருவில் வேலைபார்த்து வருகிறார். பிரியா நாடக நடிகையாக இருந்து வந்தார். கோவில் திருவிழாக்களில் அவரது குழுவுடன் சேர்ந்து நாடகங்களில் நடிப்பார். மற்ற நேரங்களில் தாயார் நடத்தி வரும் இட்லிக்கடையில் அவருக்கு உதவியாக இருப்பார்.
நேற்று முன்தினம் சாந்தா மட்டும் இட்லிக்கடையில் இருந்தார். வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது பிரியா அங்கு இல்லை. அவர் பல நேரங்களில் தாயாரிடம் சொல்லாமல் நாடகத்தில் நடிக்க சென்றிருக்கலாம் என தாயார் சாந்தா நினைத்து விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டின் ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது. கதவை திறக்க முயன்றபோது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படாததால், சாந்தா அருகில் உள்ளவர்களை அழைத்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பிரியா பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய பிரியாவின் உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரியா தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் தேவகுமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டாகிறது. குழந்தை இல்லை.
தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சத்யா கணவனை பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
தேவகுமார் மனைவி சத்யாவை குடும்பம் நடத்த வருமாறு பல முறை அழைத்து உள்ளார். ஆனால் சத்யா அதற்கு சம்மதிக்க வில்லை.
இதனால் மனமுடைந்த தேவகுமார் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருப்த்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே ரத்தினம் நகரை சேர்ந்தவர் சோட்டாபாய் (வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமாக 5 மாடுகள் உள்ளன. அவற்றை வீட்டின் அருகே உள்ள கொட்டைகையில் நேற்று இரவு கட்டிவிட்டு தூங்க சென்றார்.
இன்று அதிகாலை கொட்டகையில் கட்டி இருந்த 3 பசு மாடுகளை மர்ம கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். மாடுகள் வலியால் கத்தியது. சத்தம் கேட்டு ஓடிவந்த சோட்டாபாய் மாடுகள் வெட்டுபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பசு மாடுகளை மீட்டு ஆம்பூர் கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார். அங்கு மாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோட்டாபாய் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பசு மாடுகளை வெட்டியது யார்? முன்விரோத காரணமாக வெட்டினார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள மேட்டுசக்கர குப்பம் வாணியம்பாடி செல்லும் சாலையில் ஆஞ்சநேயர் கோவில், வினாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சென்று வழிபட்டு காணிக்கை செலுத்தி வந்தனர்.
நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






