search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டு எண்ணிக்கை"

    புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ள 23 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், மகளிர் பாலிடெக்னிக் ஆகிய இரு இடங்களில் எண்ணப்படுகிறது.

    காரைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 தொகுதிகளுக்கான ஓட்டுகளும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் மினி சிவில் ஸ்டே‌ஷனிலுள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதிகளுக்கான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் தனி அறையில் எண்ணப்படுகிறது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் 15 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை அறைகள், டேபிள்கள் அமைப்பது, விளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும் அடுத்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படுகிறது. இதனால் ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு 24 மணி நேரமாகும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடும் வெயிலின் காரணமாகவும், ஓட்டு எண்ணிக்கை கால தாமதத்தை கருத்தில் கொண்டும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் முழுவதுமாக ஏ.சி. வசதி செய்ய தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை அறைகளில் ஏ.சி. பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடவும், முறைகேடுகளை தடுக்கவும் 12 பேர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்து உள்ளது.

    தமிழகத்தில் வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 18-ந்தேதி தேர்தல் நடை பெற்றது. 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அதே நாளில் நடத்தப்பட்டது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

    நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடை பெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.

    மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.

    தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்கிறார்கள்.

    பதட்டமான ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார், சிறப்பு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 18-ந்தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த நாளில் இருந்தே 24 மணி நேரமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சுழற்சி முறையில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8.30 மணி அளவில் தொடங்கும்.

    இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் ஓட்டுகள் எண்ணப்படும்.

     


    ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள்.

    அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். மதியம் 1 மணி அளவில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும். இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் “விவிபேட்” என்கிற ஒப்புகை சீட்டு எந்திரமும் பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த எந்திரத்தில் பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும். இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் 23-ந்தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நாடு முழுவதும் வாக்குப்பதிவுக்கு பின்னர் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்து உள்ளன.

    அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை விட 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஆளும்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெறுமா? இல்லை எதிர்க்கட்சியான தி.மு.க. கூடுதல் இடங்களை கைப்பற்றுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்துக்கும் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

    பொதுமக்கள் இடையிலும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியே அமையுமா? அல்லது மத்தியில் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

    ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதி மாலை முதல் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருவதாக ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை, கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

    எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ந் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதே சமயத்தில், மே 23-ந் தேதி மாலையில், லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலையை உயர்த்த ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #PMModi #HikeFuelPrice #Congress #RandeepSurjewala 
    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. #AssemblyElections #ElectionResults2018
    தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.



    மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #AssemblyElections #ElectionResults2018

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #AssemblyElections
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

    90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.



    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #AssemblyElections
    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. #AssemblyElections
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.

    முதலில் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கடந்த மாதம் 12, 20-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சராசரியாக 74 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது. தெலுங்கானாவில் 73.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

    ஓட்டு எண்ணிக்கையை சுமூகமாக நடத்துவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


    சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவட்டங்களிலும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 306 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தெலுங்கானாவில் 43 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் 13 மையங்களில் உருவாக்கப்பட்டுள்ள 40 மையங்களில் வாக்குகள் எண்ணப்படும். 5 மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணியில் இருந்து மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 10 மணிக்கு ஓரளவு முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    11 மணி அளவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். 5 மாநில தேர்தல் பாராளுமன்ற தேர்தலுக்கான அரை இறுதி போட்டி போல கருதப்படுவதால் தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    5 மாநில தேர்தலுக்கு முன்பும், ஓட்டுப்பதிவுக்கு பிறகும் பல்வேறு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து ஒரு மாதிரியாகவும் பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளன.

    என்றாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளும் ஒருமித்த குரலில் கூறி உள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கு இடையே கடும் இழுபறி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறி உள்ளன.

    மிசோரம் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது.

    5 மாநில தேர்தல் நடந்தாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 3 மாநில தேர்தல் முடிவுகள் தான் மிக ஆவலை ஏற்படுத்தி உள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் சுமார் 65 பாராளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. - காங்கிரசுக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். #AssemblyElections
    பூடான் பாராளுமன்ற தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல் கட்ட தேர்தலில் பிரதமரின் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி வெற்றிபெற்று உள்ளது. #Bhutanparliamentaryelection

    திம்பு:

    இந்தியாவுக்கு அருகே இமயமலை சாரலில் உள்ள நாடு பூடான். இங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஷெரிங் தோபே தலைமையிலான ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிட்டது.

    அதை எதிர்த்து டி.என்.டி. மற்றும் டி.பி.டி. ஆகிய எதிர்க்கட்சிகள் மோதின. அதில் 2 லட்சத்து 91 ஆயிரம் பேர் வாக்களித்தனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

    இதில் டி.என்.டி. கட்சி 92,722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக டி.பி.டி. கட்சி 2-வது இடம் பிடித்துள்ளது. இக்கட்சி 90 ஆயிரத்து 20 ஓட்டுகள் பெற்றுள்ளது.

    இத்தேர்தலில் பிரதமர் தோபேவின் ஆளும் பி.டி.பி. (மக்கள் ஜனநாயக கட்சி) படுதோல்வி அடைந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது. பூடான் அரசியல் சட்டப்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கு இடையே 2-வது சுற்று போட்டி நடைபெறும்.

    அதில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும். அதன்படி வருகிற அக்டோபர் 18-ந் தேதி நடக்கும் 2-வது சுற்று தேர்தலில் டி.என்.டி. மற்றும் டி.பி.டி. கட்சிகள் போட்டியிடுகின்றன. அக்கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பிரதமர் தோபே வாழ்த்து தெரிவித்துள்ளார். #Bhutanparliamentaryelection

    ×