என் மலர்

  செய்திகள்

  கத்தியால் வெட்டப்பட்ட பசு மாடு.
  X
  கத்தியால் வெட்டப்பட்ட பசு மாடு.

  ஆம்பூரில் 3 பசு மாடுகளை கத்தியால் வெட்டிய மர்ம கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூரில் 3 பசு மாடுகளை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  ஆம்பூர்:

  ஆம்பூர் அருகே ரத்தினம் நகரை சேர்ந்தவர் சோட்டாபாய் (வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமாக 5 மாடுகள் உள்ளன. அவற்றை வீட்டின் அருகே உள்ள கொட்டைகையில் நேற்று இரவு கட்டிவிட்டு தூங்க சென்றார்.

  இன்று அதிகாலை கொட்டகையில் கட்டி இருந்த 3 பசு மாடுகளை மர்ம கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். மாடுகள் வலியால் கத்தியது. சத்தம் கேட்டு ஓடிவந்த சோட்டாபாய் மாடுகள் வெட்டுபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பசு மாடுகளை மீட்டு ஆம்பூர் கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார். அங்கு மாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

  இதுகுறித்து சோட்டாபாய் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பசு மாடுகளை வெட்டியது யார்? முன்விரோத காரணமாக வெட்டினார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Next Story
  ×