என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசு பொது இடங்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். மேலும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணியாவிட்டாலோ, சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டாலோ அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்பினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
வேலூர் பழைய பஸ் நிலையம், மண்டித்தெருவில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் முக கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் பலர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தனர். அதனால் தொற்று பாதித்த நபர்கள் மூலம் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் காணப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாத அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேலூர் மண்டித்தெரு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் வேலூர் பழைய மீன்மார்க்கெட் அருகே வருவாய்த்துறை, போலீசார் அடங்கிய குழுவினர் முக கவசம் அணியும்படி வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

வேலூரில் வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துரைமுருகன் உள்பட 2000 தி.மு.க.வினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமது சகி, கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தயாநிதி, சாமிக்கண்ணு மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், திராவிடர் கழக தமிழர் இயக்க பேரவை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், அணைக்கட்டு, திருவலம் உள்பட 27 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் உள்பட 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியது, போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டம் செய்தது, கொரோனா பரவல் இருப்பது தெரிந்தும் அதிகளவில் கூட்டத்தை கூட்டியது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, பேரிடர் கால விதிமீறல் என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வாணியம்பாடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கதிர்ஆனந்த் எம்.பி. பங்கேற்றார். அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓச்சேரி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிபாக்கம்:
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்தவர் வாசன் (18). இவர்கள் இருவரும் உறவினர்கள். நேற்று ஆனந்தராஜின் சகோதரி மகள் சுபநிகழ்ச்சிக்காக திருவேற்காட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அவளூர் அருகே முன்னே சென்ற கன்டெய்னர் லாரியை முந்திசெல்ல முயன்றபோது லாரியில் உரசியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் லாரி மோதி ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாசன் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த அவளூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சிக்குட்பட்ட கடாம்பூர் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலும், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்டவை அமைந்திருக்கும் அருகில் டாஸ்மாக் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடை மூடப்பட்டது.
இந்த நிலையில் திடீரென அதே இடத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன் மற்றும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கடையை மூடினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து டாஸ்மாக் கடையை முற்றிலுமாக அகற்ற மனு அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஒடுகத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் ஆம்பூர் தாலுகா மாதனூரை அடுத்த பாலாஜி நகரை சேர்ந்த ஆனந்தன் (வயது 39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.500 மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அ.தி.மு.க.வுக்கு சசிகலா தேவையில்லை. அவரை எதிர்த்து தான் ஆட்சியும், கட்சியும் நடந்து கொண்டிருக்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் தாங்கள் வசிக்கும் கிராமங்களுக்கு ரேஷன் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்பேரில் 60 குடும்ப அட்டைகள் இருக்கும் சிறிய கிராமங்களுக்கு கூட நகரும் ரேஷன் கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்திர பதிவுத்துறை நடைமுறையை எளிமையாக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்து விட்டு அங்கே சென்று பத்திரங்கள் பதிவு செய்யலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரங்கள் பதிவு செய்ய சில நாட்கள் ஆனது. ஆனால் தற்போது அவ்வவ்போது பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் பத்திரப்பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தும் திட்டங்கள் இருந்தால் அதனையும் ஆலோசித்து நடைமுறைப்படுத்துவோம்.
சசிகலாவை எதிர்த்து தான் கட்சியும், ஆட்சியும் நடந்து கொண்டு இருக்கிறது. சசிகலா தேவை இல்லாதவர். மக்களால் வெறுக்கப்பட கூடியவர். சசிகலா அ.தி.மு.க.விற்கு தேவையில்லை என்ற நிலையில் ஆட்சி நடந்து வருகிறது. அ.தி.மு.க.வினரை பொறுத்தவரையில் சசிகலா விஷயத்தில் தெளிவாக உள்ளனர். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளருக்கு போட்டி, சர்ச்சை எதுவும் இல்லை. எல்லாம் சுபிட்சமாக நடந்து வருகிறது.
கொரோனா தொற்று காலத்தில் வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் வரை பத்திரப்பதிவு துறையின் வருமானம் குறைந்து காணப்பட்டது. தற்போது அதைவிட 10 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வேலூர் அருகே அ.தி.மு.க. பிரமுகரை தாக்கி, அவருடைய மனைவியிடம் செயினை பறித்துச்சென்ற முகமூடி கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த பொய்கை, சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 3 பேர் கொண்ட முகமூடி கும்பல், வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூரை அடுத்த மேல்மொணவூர் பகுதியில் முகமூடி கும்பல் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64). அ.தி.மு.க. பிரமுகர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டும் சத்தம்கேட்டு மனோகரன் கதவை திறக்க சென்றார். அப்போது 3 பேர் கொண்ட முகமூடி கும்பல் மனோகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருடைய மனைவி ராஜாமணி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நகையை பறித்துச் சென்ற முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.
இந்தப்பகுதியில் தொடர்ந்து நகைபறிப்பு சம்பவம் நடப்பதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதம மந்திரியின் விவசாயிகள் உதவி திட்டத்தில் முறைகேடு செய்ததாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
தமிழகத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ரூ.120 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாத நபர்கள் இந்த திட்டத்தில் போலியாக சேர்ந்து உதவித்தொகை பெற்றது தெரியவந்தது. போலியாக சேர்ந்தவர்களிடமிருந்து பணம் திரும்ப வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 3,242 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்பதும், ரூ.1 கோடியே 23 லட்சம் முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் வங்கி கணக்கில் இருந்து இதுவரை ரூ.70 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வேளாண்மை துறையில் தற்காலிக கணினி ஆபரேட்டர்களாக பணியாற்றிய 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 20 பேர் பெயர் கொண்ட பட்டியலை வேளாண்மைத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வழங்கி உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக சோளிங்கர் வேளாண்மை அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த தற்காலிக கணினி ஆபரேட்டர் சுப்பிரமணி என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அதேபோன்று காட்பாடியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்த சந்தோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஆற்காடு வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்துவந்த ராஜசேகர் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதுசெய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர் அந்தப்பகுதி விவசாயிகளின் பெயரில் போலியாக வங்கி கணக்குகளை சேர்ந்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இவருக்கு உதவியாக 2 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர்.

தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கதிர்ஆனந்த் எம்பி கூறியுள்ளார்.
வேலூர்:
தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது தொடர்பாக கதிர் ஆனந்த் எம்.பி.யிடம் கேட்டபோது எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது விசாரணைக்கு தேவையான சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். விரைவில் விசாரணைக்கு அழைப்போம் அப்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,172 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 14,015 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,172 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 12,870 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மலை கிராமத்தில் யானை மிதித்து பிளஸ்-2 மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே மலையனூர் மலை கிராமத்தையொட்டி ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் சோனியா (வயது17). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.
இங்கு காட்டுப்பன்றிகள் அதிகளவு வந்து தொல்லை கொடுத்தது. மேலும் அந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிகிறது.
நேற்று விவசாய நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்தனர். இரவு காட்டுப்பன்றி காவலுக்காக முருகனின் மனைவி மற்றும் மகள் சோனியா ஆகியோர் விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்தனர்.
நள்ளிரவில் அயர்ந்து தூங்கிவிட்டனர். அப்போது ஒற்றை காட்டு யானை நிலத்திற்குள் புகுந்தது. இதனைக் கண்ட முருகனின் மனைவி யானையை விரட்ட முயற்சி செய்து கத்திக் கூச்சலிட்டார்.
அப்போது தூங்கிக்கொண்டிருந்த சோனியாவை ஒற்றை யானை மிதித்தது. இதில் உடல் நசுங்கிய மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சிறிது நேரம் அங்கேயே இருந்த காட்டுயானை காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
தனது கண் முன்னே யானை மகளை மிதித்துக் கொன்றதைக் கண்ட முருகனின் மனைவி அழுது துடித்தார்.
மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சித்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து ஒற்றை காட்டு யானை நாட்டறம்பள்ளி ஒட்டியுள்ள தமிழக ஆந்திர எல்லை வனப்பகுதியில் சுற்றி திரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொருளாளர் சஜீன்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் அனைத்து சாலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதனை இதுவரை சரிசெய்யாத காரணத்தால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள்.
இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சத்துவாச்சாரி பகுதியில் உடனடியாக சாலைகளை சீரமைக்காவிட்டால் 2-வது மண்டல அலுவலகத்துக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.