என் மலர்
வேலூர்
வேலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூரை அடுத்த மலைக்கோடி, விஸ்வநாதன்நகர், அண்ணாநகர், சரஸ்வதிநகரில் பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பல்வேறு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே அந்த பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாநகரம் சார்பில் காத்திருப்பு போராட்டம் வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, புஷ்பராஜ், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. லதா, மாநகர செயலாளர் சிம்புதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் காவேரி உள்பட பலர் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பேசினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பான ஆவணங்களை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தாசில்தார் தெரிவித்தார். அதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
காட்பாடியில் ஒருதலை காதலால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் திருமலைராஜன் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட திருமலை ராஜன் கடந்த 25-ந் தேதி இரவு வீட்டு கழிப்பறையில் இருந்த விஷத்தை (ஹார்பிக்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரணாம்பட்டு அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி சோதனை சாவடியில் வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில், பேரணாம்பட்டில் இருந்து பெங்களூருக்கு 95 மூட்டைகளில் 4 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பேரணாம்பட்டு டவுன் எல்.ஆர்.நகரை சேர்ந்த இர்பான் (வயது 25), தரைக்காடு பகுதியைச் சேர்ந்த முபாரக் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான லாரி உரிமையாளர் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி மேட்டைச் சேர்ந்த ரஹீம் பாஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் நேஷனல் சந்திப்பு அருகே ரூ.1 கோடியே 66 லட்சத்தில் பாலம் அமைப்பது குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர்:
வேலூர் நேஷனல் சந்திப்பில் இருந்து சென்னை-பெங்களூரு அணுகுசாலையில் செல்லும் வழியில் சிறுபாலம் காணப்படுகிறது. இந்த பாலம் பழுதடைந்து காணப்படுவதால் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுபாலத்தை அகற்றி அதே இடத்தில் 20 மீட்டர் அகலத்தில் ரூ.1 கோடியே 66 லட்சத்தில் புதிதாக பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சிறுபாலம் அமைந்துள்ள இடத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிதாக பாலம் அமைப்பது குறித்தும், அந்த பகுதியில் காணப்படும் குடிநீர் குழாய், மின்கம்பங்கள் மாற்றுவது பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவற்றை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாலத்தின் அருகே காணப்படும் அணுகு சாலையின் மழைநீர் கால்வாய்களை அகற்றி, சாலை மட்ட அளவில் புதிதாக கால்வாய் அமைக்கப்படும் என்றும், அதன் மேலே வாகனங்கள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதிகாரிகள், கலெக்டரிடம் விளக்கி கூறினர்.
அதைத்தொடர்ந்து அப்துல்லாபுரம் விமான நிலையத்தையொட்டி ரூ.1 கோடியே 66 லட்சத்தில் மாற்றுச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். சாலை பணிகளை 15 நாட்களுக்கு முடித்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பின்னர் குடியாத்தம் ரெயில்வே சாலை முதல் ராஜா கோவில் சேத்துவாண்டை வரை ரூ.1 கோடியே 47 லட்சத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகள் மற்றும் ரூ.1 கோடியே 17 லட்சத்தில் நடைபெற்று வரும் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள காங்குப்பம்-பெருமாங்குப்பம் சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு கோட்டப் பொறியாளர் சரவணன், உதவி கோட்டப் பொறியாளர்கள் அண்ணாமலை (வேலூர்), சுகந்தி (காட்பாடி), வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன், தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டது. இதற்கு அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு சமூக அமைப்பினரும் இந்த செயலை கண்டித்து வருகிறார்கள்.
சிலை அவமதிப்பு காரணமாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் இடையே மோதல் மற்றும் சாலை மறியல், போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர், பெரியார் சிலைகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகேயுள்ள பெரியார் சிலை, காட்பாடி பகுதியில் 3, குடியாத்தம் பகுதியில் 2 என்று மொத்தம் 6 சிலைகளுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள 78 அம்பேத்கர் சிலைகளுக்கும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பகல் நேரத்தில் ரோந்துப்பணி மற்றும் இரவு நேரத்தில் சிலைகளை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலைகளை அவமதிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்பாடி அருகே அலோபதி முறையில் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். அவரின் கிளினிக்குக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
வேலூர்:
காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று பிரம்மபுரத்தில் உள்ள கிளினிக்குகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பிரம்மபுரம் திருவள்ளுவர் தெருவில் உள்ள கிளினிக்கில் பொதுமக்களுக்கு அலோதிபதி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில், அந்த கிளினிக்கை நடத்தி வருபவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்று தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள், அவரின் மருத்துவ படிப்பு சான்றிதழை சோதனை செய்தனர். அதில், அவர் சித்தா மற்றும் ஹோமியோபதி படித்திருப்பது தெரியவந்தது. விஜயகுமாரி அலோபதி முறையில் சிகிச்சை அளித்ததால் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கிளினிக்கை பூட்டி வருவாய்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விஜயகுமாரியை காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து மருத்துவப்பணிகள் துறை அதிகாரிகள் கூறுகையில், விஜயகுமாரி கொடுத்த சித்தா மற்றும் ஹோமியோபதி சான்றிதழில் கல்லூரியின் முத்திரை இல்லை. எனவே அந்த சான்றிதழ் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. அவரின் மருத்துவ சான்றிதழின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம். விஜயகுமாரி நர்சிங் முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்ததாகவும், அந்த அனுபவத்தின் அடிப்படையில் அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தார் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 3 முறை நடத்திய ஆய்வில் தப்பிய விஜயகுமாரி தற்போது சிக்கியுள்ளார் என்று தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெயில் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால் நளினி-முருகன் நேற்று 10 நிமிடங்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசினர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் தனி ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வந்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜெயில் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல் நேரில் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக கைதிகள் செல்போனில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள்.
அதன்படி, நளினி-முருகன் நேற்று காலை 11 மணி முதல் 11.10 மணி வரை 10 நிமிடங்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசினர். அப்போது நளினியின் பரோல், தந்தையின் அஸ்தியை கடலில் கரைக்க முருகன் பரோலுக்கு விண்ணப்பிப்பது மற்றும் புழல் ஜெயிலுக்கு 2 பேரையும் மாற்றுவது தொடர்பாக அவர்கள் பேசிக் கொண்டனர் என்று ஜெயில் காவலர்கள் தெரிவித்தனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆயுத பூஜையையொட்டி ஒரேநாளில் ரூ.6 கோடியே 61 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகளும் உள்ளன.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகும். ஆயுத பூஜை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பீர் மற்றும் மதுவகைகள் வரவழைக்கப்பட்டன.
ஆயுத பூஜையையொட்டி கடந்த 24-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆயுத பூஜையை நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாட பலர் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர். இதன் காரணமாக வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களைவிட ரூ.1 கோடி மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது.
நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூ.4 கோடியே 11 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.
அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.2½ கோடி மதுபானங்கள் விற்பனையானது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.6 கோடியே 61 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுத பூஜையையொட்டி வேலூர் மார்க்கெட்டில் ரூ.3 கோடிக்கு பூ, பழங்கள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூ, பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. ஆந்திர மாநிலம் கடப்பா, ராயகோட்டா மற்றும் ஓசூர், வேலூர் மாவட்டம் லத்தேரி, புலிமேடு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்த மார்க்கெட்டில் மட்டும் ரூ.80 லட்சம் வரை பூக்கள் விற்பனையாகி உள்ளது.
மாவட்டம் முழுவதும் ரூ.1 கோடிக்கு மேல் பூக்கள் விறபனையாகி உள்ளன. இன்று பூக்கள் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிலோ ரூ.500க்கு விற்பனையான முல்லை, மல்லி ரூ.270, சாதிமல்லி ரூ.220, சம்பங்கி ரூ.130, கனகாம்பரம் ரூ.1000க்கு விற்பனையானது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வந்த சுமார் 6 டன் ஆப்பிள், 10 டன் எலுமிச்சை, 8 டன் கொய்யா, 10 டன் சாத்துக்குடி விற்பனையாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் ரூ.2 கோடிக்கு பழங்கள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.75 லட்சத்துக்கு மேல் பூ, பழங்கள் விற்பனையாகி உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பினால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பூக்கள் மற்றும் பழங்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்து விட்டது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை பூவியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறியதாவது:-
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பூக்கள் விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்து விட்டது. மொத்தம் 10 டன் பூக்கள் மட்டும் விற்பனையாகியுள்ளது . இந்த ஆண்டு பூக்களுக்கு நல்ல விலை இருந்தபோதிலும் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு பூக்கள் ரூ.50 லட்சத்துக்கும் மேல் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையாகியுள்ளன.
இதனால் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
உற்பத்தி குறைந்ததால் விவசாயிகளும் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை என்றார்.
திருவண்ணாமலையில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு தேங்காய், பழம், பொரி மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு பழங்களின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
இதனால் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் லாபம் ஈட்ட முடியவில்லை. இதுதொடர்பாக பழ வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்கு பழங்கள் விற்பனை சொல்லும்படியாக இல்லை. பொதுமக்கள் பணத்தை பார்த்து பார்த்து செலவு செய்கின்றனர்.
எனவே குறைந்த அளவிலேயே பழங்களை வாங்கி சென்றனர். இதனால் கடந்த ஆண்டு விற்பனையானதில் 3-ல் ஒரு பங்குதான் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.75 லட்சம் வரை பழங்கள் விற்பனையானது இந்த ஆண்டு ரூ.25 லட்சம் வரைதான் விற்பனையாகி உள்ளது என்றனர்.

பேரறிவாளனுக்கு மூட்டு நரம்பு வலி ஏற்பட்டதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே அவர் 2 முறை பரோலில் வந்திருந்தார்.
இந்த நிலையில் 3-வது முறையாக பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 9-ந்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளனை சந்திக்க வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் வீட்டிலேயே போலீசார் பேரறிவாளனிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு மூட்டு நரம்பு வலி ஏற்பட்டது. அவர் அனுமதி கேட்டதை தொடர்ந்து நேற்று காலை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு மீண்டும் பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தமுறை வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது, என கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர்:
குடியாத்தம் பகுதியில் ஆய்வுப்பணிக்கு சென்ற கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் முக்கியமான ஆறுகளான பாலாறு, மலட்டாறு, குண்டாறு, பொன்னையாறு மற்றும் கவுண்டன்யமகாநதி ஆகிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆந்திராவில் உள்ளது. ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அங்குள்ள ஏரிகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அவை நிரம்பி மோர்தானா அணைக்கு 984 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தண்ணீர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்தானா அணை 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வரத்தைத் தாங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளது. மோர்தானா அணை தண்ணீர் கவுண்டன்யமகாநதி ஆற்றிலும், வலது மற்றும் இடது புற கால்வாய்கள் மூலம் 38 கிலோ மீட்டர் தூரம் ஓடி 19 ஏரிகளை சென்றடைகிறது.
வேலூர் சதுப்பேரி ஏரி வரை மோர்தானா அணை தண்ணீர் கால்வாய் செல்கிறது. இம்முறை வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 102 ஏரிகள், 421 சிறு பாசன ஏரிகள், குட்டைகள் உள்ளன. அதில் 14 பொதுப்பணித்துறை ஏரிகள் நிரம்பி உள்ளன.
இந்த ஆண்டு குடிநீர் மற்றும் விவசாயிகளின் பல்வேறு பயிர் பாசனத்துக்கு தண்ணீர் பிரச்சினை வராது. மோர்தானா அணை பகுதியை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குளிக்கவும், செல்பி எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பல இடங்களில் ஆறு மற்றும் குளத்தில் பெரும் பள்ளங்கள் உள்ளதால், இந்தப் பள்ளங்களை அறியாத சிறுவர்கள், வாலிபர்கள் தண்ணீரில் இறங்கி சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், பெற்றோர் எச்சரிக்கையோடு தங்கள் பிள்ளைகளை தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மோர்தானா அணை மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார், நீர்வள ஆதாரத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகியவை இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மோர்தானா அணை பகுதியில் வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
வேலூரில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று பொதுமக்கள் திரண்டனர். பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
வேலூர்:
ஆயுத பூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்றுகள் கட்டியும் பூமாலை அணிவித்தும், பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். இதற்காக பொதுமக்கள் ஆயுத பூஜைக்கு தேவையான பூ, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நேற்று பஜாருக்கு வந்திருந்தனர்.
வேலூர் மண்டித்தெருவில் ஆயுத பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
ஆயுத பூஜையையொட்டி வேலூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பூக்களில் விலை கிலோவில் வருமாறு:-
ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி ரூ.200-க்கும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி 100-க்கும், 180-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா 220-க்கும், 60-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கொண்டை 80-க்கும், 300-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மல்லி, முல்லை ஆகியவை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மாற்றம் இல்லை என்றும் மழையின் காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றும் பூ வியாபாரி ரமேஷ்பாபு தெரிவித்தார்.
மேலும் பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும் வாழை மரக்கன்றுகள் ஜோடி ரூ.50 முதல் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பொரி விற்பனையும் களைகட்டியது. ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, கொய்யா போன்ற பழங்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் நேற்று பூஜை செய்தனர். மேலும் அரசு வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.