search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பேரணாம்பட்டு அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

    பேரணாம்பட்டு அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி சோதனை சாவடியில் வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில், பேரணாம்பட்டில் இருந்து பெங்களூருக்கு 95 மூட்டைகளில் 4 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பேரணாம்பட்டு டவுன் எல்.ஆர்.நகரை சேர்ந்த இர்பான் (வயது 25), தரைக்காடு பகுதியைச் சேர்ந்த முபாரக் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான லாரி உரிமையாளர் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி மேட்டைச் சேர்ந்த ரஹீம் பாஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×