என் மலர்tooltip icon

    வேலூர்

    திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

    திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும். சசிகலா, டிடிவி தினகரன் குறித்து மறைமுக விமர்சனம் செய்தார்.

    அதிமுகவை கைப்பற்றி திமுகவிற்கு மறைமுகமாக உதவ முயற்சிப்பவர்களின் முயற்சி சுக்குநூறாக முறியடிக்கப்படும். சதிவலையை தூள் தூளாக உடைத்து ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பாடுபடுவோம், 10 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். 

    டிடிவி தினகரனை நம்பி சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். அதிமுகவை கைப்பற்ற நினைப்பவர்களை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். 

    ஆக. 25-ஆம் தேதி கிருபானந்த வாரியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார் என்றார்.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துவரும் வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பேரணாம்பட்டு:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிநெடுகிலும் நின்று கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் வேகமாக வந்த ஒரு கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதியது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பொதுமக்கள் மடக்கிப்  பிடித்து அந்த நபரை பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். 

    அவரது காரை சோதனையிட்டபோது, அதில் ஒரு துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    முதலமைச்சர் பிரசாரம் செய்து வரும் வேலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5-ம் கட்ட பயணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    வேலூர்:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று அவர் 5-ம் கட்ட பயணமாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அரக்கோணம் தொகுதி கைனூர் கணபதி நகரில் 10.30 மணிக்கு மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஏராளமான பெண்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    பின்னர் 11.20 மணிக்கு சோளிங்கர் தொகுதி பாண்டிய நெல்லூரில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளையொட்டி அந்த பகுதியில் அ.தி.மு.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பிற்பகல் 4 மணி அளவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கந்தநேரியில் மகளிருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மாலை 5 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதியில் சென்றாயன் பள்ளியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
    அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். வேலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடத்தில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு களைக்கட்டியுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் புறவழிச்சாலையில் 8.30 மணிக்கு மகளிருடன் ஆலோசனைக் கூட்டத்திலும், வாணியம்பாடி தொகுதியில் 9.45 மணிக்கு இஸ்லாமிய கல்லூரி எதிரில் இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    11 மணிக்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் வரவேற்பு பதாகை வைத்து கட்சி கொடிகள் கட்டியுள்ளனர். இதனால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிநெடுகிலும் நின்று கண்காணித்து வருகின்றனர்.
    சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
    வேலூர்:

    பெங்களூரில் இருந்து இன்று காலை சசிகலா சென்னைக்கு புறப்பட்டார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக அவர் சென்னை செல்கிறார்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பும் அவரை வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்க அ.ம.மு.க.வினர் திரண்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட எல்லை தொடக்கம் மற்றும் முடியும் இடங்களிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்ட எல்லையான வெலக்கல்நத்தத்தில் அ.ம.மு.க.வினர் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க குவிந்துள்ளனர். வாணியம்பாடி, ஆம்பூரிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர். ஆம்பூரில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சசிகலாவை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆட்டம், பாட்டத்துடன் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டு களைக்கட்டியுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூட்டுத்தாக்கு, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி, வாலாஜா சுங்கச்சாவடி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பெரும்புலிம்பாக்கத்தில் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    செண்டை மேளம், டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், இசை நிகழ்ச்சிகள் என 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

    இதனையொட்டி வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்டமாக நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 'வெற்றி நடைபோடுகிறது தமிழகம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் 5-ம் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    காலை 10.30 மணிக்கு அரக்கோணம் தொகுதி கைனூர் கணபதி நகரில் மகளிருடன் ஆலோசனைக்கூட்டமும், 11.20 மணிக்கு சோளிங்கர் தொகுதி பாண்டியநெல்லூரில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அதன் பின்னர் மதியம் 1 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

    பின்னர் அவர் வேலூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுகிறார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கந்தனேரியில் மகளிருடன் ஆலோசனைக்கூட்டம், 5 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதியில் சென்ரான்பள்ளியில் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வேலூர் தொகுதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து 10-ந் தேதி (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ்குமார் தலைமையில் டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), மயில்வாகனன் (ராணிப்பேட்டை), விஜயகுமார் (திருப்பத்தூர்), அரவிந்தன் (திருவண்ணாமலை) ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலடீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    குறிப்பாக முதல்-அமைச்சர் காரில் வரும் சென்னை-பெங்களூரு சாலையோரம் வேலூர் மாவட்ட பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மு.க.ஸ்டாலின் கூறியதைதான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

    வேலூர்:

    தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்போன் மூலம் பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தால், அதன்பேரில் குறைகளை நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கிறார். அது சாத்தியம் அல்ல. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியை பார்த்து முதல் அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

    சட்டம், ஒழுங்கையில் வைத்திருக்கும் அரசு, போலீசாரையே கையில் வைத்திருப்பவர் முதல் அமைச்சர். இப்படி இருந்தும் சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று போலீசில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் சிறையில் இருக்க தி.மு.க. தான் காரணம் என முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் நாங்கள் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோதும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். தற்போதும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்ற முதலில் கூறியவர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் விவசாய கடனை தள்ளுபடி செய்து சரித்திரம் படைத்தோம். மு.க.ஸ்டாலின் கூறியதை தான் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார்.

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும்போது தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால் தற்போது ரூ.7 லட்சம் கோடி கடன் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. அரசின் வருமானம் அனைத்தும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கு தான் செல்லும். அ.தி.மு.க. ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூரில் விதியை மீறி அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
    வேலூர்:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டம் -ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அரசு. காவல் துறையையே கையில் வைத்திருப்பவர் முதல்-அமைச்சர். இப்படி இருந்தும் சசிகலா வருகையால் சட்டம் ஒழுங்கு கெடும் என்று காவல் துறையில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி விதியை மீறி வேலூரில் அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். பேனர் வைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையே அ.தி.மு.க.வினர் மதிக்கவில்லை. மனித உரிமை ஆணையம் குறித்த உத்தரவையா மதிக்க போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூரில் வருகின்ற 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் பா.ஜனதா மகளிரணி மாநாடு, பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவின் ஒரு அங்கமாக தமிழகத்தை மத்திய அரசு நினைப்பதால் தான் இங்கு பா.ஜனதா ஆட்சியில் இல்லாத போதும், ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை, அம்ருத் திட்டங்கள் உள்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழகத்தில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களிடம் விளக்குவதற்கு 100 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    மேலும் மத்திய, மாநில அரசுகள் மீது தி.மு.க. தொடர்ந்து குறை சொல்லி வருகிறது. அ.தி.மு.க. அரசு கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. அதையும் தி.மு.க.வினர் குறை சொல்கிறார்கள்.

    தி.மு.க.வினர் 7 பேர் விடுதலை பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பங்களின் நிலை பற்றி அவர்கள் இதுவரை பேசவில்லை.

    தமிழின மக்களின் துரோகி தி.மு.க. தான். அவர்கள் ஆட்சி காலத்தில் தான் அறிவிக்கப்பட்ட ஏராளமான திட்டங்கள் ஏட்டளவிலே உள்ளன.

    ஆனால் எங்களின் தேர்தல் அறிக்கைகள் புனிதமாக கருதுகிறோம். அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

    பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரிகளே காரணம். பெட்ரொலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்தாலும், அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றது.

    சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார். வருகிற 23-ந்தேதி வேலூரில் நடைபெறும் மகளிரணி மாநாடு மற்றும் 24-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.

    சட்டசபை தேர்தலில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து நகர, கிராம மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் செய்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ஜோலார்பேட்டை அருகே உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் நாய் உயிரிழந்த சம்பவம் குறித்து டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. சின்னமண்டலவாடி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் 1½ வயதுடைய ஜான்சி என்ற நாயை வளர்த்து வந்தார்.

    திடீரென நாய்க்கு நேற்று அதிகாலை முதல் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் செல்வம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அங்கு இருந்த கால்நடை பெண் உதவியாளர், டாக்டர் 9 மணிக்கு வந்துவிடுவார் என்று கூறி அமர வைத்துள்ளார். ஆனால் நாய்க்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. காலை 11 மணி வரை டாக்டர் வராததால் செல்வம் திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகர்ப்பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் நாய்க்கு குளுகோஸ் போட்டனர்.

    பின்னர் நாயை வீட்டிற்கு அழைத்து சென்றபோது சிறிது நேரத்திலேயே நாய் உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது உரிய நேரத்தில் டாக்டர் இல்லாததாலும் முறையாக விரைந்து சிகிச்சை அளிக்கப்படாததாலும் நாய் இறந்து விட்டதாக வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.

    மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனுவை பதிவு அஞ்சலில் நேற்று அனுப்பினார்.

    மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

    குடியாத்தம் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கீழ் செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னன் மகன் சுரேந்தர் (வயது 22). குடியாத்தத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் குடியாத்தத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 31-ந் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. 

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் மேற்பார்வையில், குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் மாணவியை சுரேந்தர் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று ஆலங்காயம் பகுதியில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று உள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்த சுரேந்தர் மற்றும் மாணவி இருவரையும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக சுரேந்தர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    சசிகலா வருகையால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார தேதியில் மாற்றம் செய்து 8-ந்தேதிக்கு பதிலாக வரும் 9-ந்தேதி என இறுதி செய்யப்பட்டு அ.தி.மு.க.வினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, வருகிற 8-ந்தேதி வேலூர் மாவட்டம் வழியாக சென்னை திரும்பவுள்ளார். வழிநெடுகிலும் அவரை வரவேற்க அ.ம.மு.க. நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சசிகலாவால் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, முதலில் பிப்.7-ந்தேதி சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    ராணிப்பேட்டை, வேலூரில் 8-ந்தேதி பிரசாரம் செய்கிறார் என்று அ.தி.மு.க.வினர் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல்வர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என்பதால், அவரை வரவேற்கவும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வந்தனர்.

    ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரசாரம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்தனர். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் வேக வேகமாக இறுதி செய்தனர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சசிகலாவின் வருகை 7-ந் தேதிக்கு பதிலாக 8-ந்தேதி என மாற்றப்பட்டதால் அ.ம.மு.க.வினர் மட்டுமில்லாது அ.தி.மு.க.வினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டது.

    வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா வருகையும், வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரசாரமும் ஒரே நாளில் நடைபெறுகிறது என்ற தகவல் 2 கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் ஒரே நாளில் முதல்வரின் பிரசாரமும், சசிகலா வருகையும் காவல்துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் முதல்வரின் பிரசார தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது.

    இந்நிலையில் எதிர்பார்த்தபடி முதல்வரின் பிரசார தேதியில் மாற்றம் செய்து 8-ந்தேதிக்கு பதிலாக வரும் 9-ந்தேதி என இறுதி செய்யப்பட்டு அ.தி.மு.க.வினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல்வரை வரவேற்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

    “வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் பிரச்சாரம் 8-ந்தேதி என தெரிந்தும் சசிகலா வருகைக்கான தேதி திட்டமிட்டு மாற்றப்பட்டது. 2 கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பும் சர்ச்சையும் ஏற்படக்கூடாது என்பதை முதல்வரும் விரும்புகிறார்.

    இதற்காக, சசிகலா வருகைக்கு முதல்வர் வழிவிட்டுள்ளார். இதற்கு, மேலும் அவர்கள் தேதி மாற்றாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    8-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் வரும் 9-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரல்களில் எந்த மாற்றமும் இல்லை” என்றனர்.

    ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    7 பேர் விடுதலையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூரில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு வக்கீலும், உச்ச நீதிமன்றமும், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை கவர்னர் விடுவிக்க அதிகாரம் உண்டு என கூறிய பிறகும் அந்த அதிகாரம் எனக்கு இல்லை என தமிழக கவர்னர் கூறுவது ஏற்புடையது அல்ல.

    மாநில அரசு அமைச்சரவையை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதை கவர்னர் 100 சதவீதம் அல்லது 99 சதவீதம் நிறைவேற்றுவதுதான் வழக்கம். ஆனால் இந்த கவர்னர் வித்தியாசமானவராக உள்ளார். அ.தி.மு.க. அமைச்சர்களை மதிப்பது போன்றும், மதிக்காதது போன்றும் உள்ளார்.

    2 நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர், கவர்னரை சந்தித்தபோது 7 பேர் விடுதலை குறித்து பார்க்கலாம் என கூறியிருக்கிறார். கவர்னர் தற்போதைய முடிவை முதல் -அமைச்சரிடம் கூறியிருக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் பலமாக கவர்னரையே கண்டிக்க வேண்டும். முதல்- அமைச்சரிடத்திலேயே மறைத்து பேசுவது அவருக்கு சரியல்ல.

    கோர்ட்டு கூறியதற்கு பிறகும் நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் சூத்திரதாரி யார்? என மக்கள் அறிய வேண்டும். மத்திய அரசு நாடகம் ஆடுகிறது. ஆனால் தி.மு.க. நாடகம் ஆடுவதாக இப்போது கூறுபவர் ஏன்? இத்தனை நாட்களாக கூறவில்லை.

    இப்போதாவது ஜனாதிபதி வாயை திறந்து எனக்கு தான் அதிகாரம் உள்ளது அல்லது, கவர்னருக்கு தான் அதிகாரம் உள்ளது என பதில் கூற வேண்டும். பல நேரங்களில் மவுனம் காத்து பிரச்சினைகளுக்கு மோசடி வேலை செய்கிறார்கள்.

    இதில் சுப்ரீம் கோர்ட்டு என்ன நினைக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே முதல்-அமைச்சர், அவர்களது கட்சி விவகாரத்தில் கலங்கிபோய் உள்ளார்.

    மத்திய பட்ஜெட்டை பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாளில் ஜனநாயகம் இருக்காது, கட்சிகள், சட்டமன்றம், நாடாளுமன்றம் இருக்காது. ஆக ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே இந்தியா என்ற அசோகர் கால, அரசர் கால ஆட்சியை உருவாக்க பார்க்கிறார்கள். பட்ஜெட்டில் நிதியை ஒதுக்குகிறார்களே தவிர கொடுத்ததாக தெரியவில்லை.

    இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் ஏன்? கருத்து சொல்லக்கூடாது. இன்றைக்கு உலகம் சுருங்கிப்போய் உள்ளது. உலக நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் விவசாயிகள் பிரச்சினையில் ஏன்? வெளி நாட்டினர் கருத்து தெரிவிக்க கூடாது. கருத்து தெரிவிப்பது தவறில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×