என் மலர்
செய்திகள்

துப்பாக்கி (கோப்பு படம்)
முதல்வர் பிரசாரம் செய்த வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துவரும் வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரணாம்பட்டு:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழிநெடுகிலும் நின்று கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் வேகமாக வந்த ஒரு கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதியது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அந்த நபரை பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது காரை சோதனையிட்டபோது, அதில் ஒரு துப்பாக்கி இருந்தது. அந்த துப்பாக்கி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெறுகிறது.
முதலமைச்சர் பிரசாரம் செய்து வரும் வேலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






