என் மலர்
திருவள்ளூர்
- மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோட்டாச்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகன்னு (94) இவரது மகன் வாசு (60) கூலிவேலை செய்து வருகின்றனர் இவர்.
தனக்கு சொந்தமான அதாவது கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை மற்றவருடைய ஒப்புதல் இல்லாமலும், கையொப்பம் பெறாமலும், பாகப்பிரிவினை பத்திரம் செய்யாமலும், ஒரு பங்குதாரர் பட்டா வாங்கி அதை விற்பனை செய்து அதில் செல்போன் கோபுரம் அமைத்து வருவதாக கூறி, செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும், முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக் கோரியும், இதுகுறித்து பலமுறை பொன்னேரி கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இது தொடர்பாக சின்ன கண்ணு அவரது மகன் வாசு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரியும், பட்டாவை ரத்து செய்யக்கோரியும், மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அதிகாரியிடம் அழைத்துச் சென்று தெரிவித்தனர்.
இதுகுறித்து துணை வட்டாட்சியர்,தேன்மொழி விசாரணை செய்து வருவாய் ஆய்வாளர் அபிராமி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
- பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.
- முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாக ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது.
பொன்னேரி:
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் கம்பெனி டயர் கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு மீஞ்சூர் அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு 1500 டயர் ஏற்றுமதி செய்ய கடந்த 2-ம் மாதம் 9-ந் தேதி அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் பிரேசில் நாட்டில் ஆர்டர் கொடுத்த கம்பெனி நிறுவனம் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் 1005 டயர்கள் மட்டும் இருப்பது தெரியவந்தது. மீதமுள்ள 495 டயர்கள் காணாமல் இருப்பது குறித்து பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.
அதன் அடிப்படையில் தனியார் டயர் கம்பெனி தலைமை அதிகாரி நாராயணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டு மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாகவும் ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கண்டெய்னர் கதவு சீல் உடைக்காமல் கதவின் போல்ட் மட்டும் கழற்றி 495 டயர்களை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 8.29 லட்சம் ஆகும். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
- அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மேகலா (27) கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கோகிலாவின் 10 வயது சிறுமியை கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமி மாயமாகியுள்ளார். அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர் அந்த சிறுமியை வேலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வேலூர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு சென்று அங்கு இருந்த சிறுமியை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சென்னை குடிநீர் மற்றும் சிப்காட்டிற்கு என தினமும் 177 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கடந்த இரண்டு வாரத்தில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று 20 அடியை எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
பூந்தமல்லி:
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் தற்போது 20.02 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2608 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 455 கன அடியாகவும் உள்ளது.
சென்னை குடிநீர் மற்றும் சிப்காட்டிற்கு என தினமும் 177 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது கோடை காலமான ஜூன் மாதத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வாரத்தில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று 20 அடியை எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- காட்டு விலங்குகளான பன்றி முயல் மற்றும் புறா, கொக்கு ஆகியவற்றை வேட்டையாடி வருவது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருத்தணி:
ஆர்.கே. பேட்டையில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன், ராம்குமார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், சேகர், ரவி என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடம் அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கி கையில் இருப்பது தெரியவந்தது.
இவர்கள் காட்டு விலங்குகளான பன்றி முயல் மற்றும் புறா, கொக்கு ஆகியவற்றை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 5 பேரை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கதன நகரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 53). இவர் திருத்தணி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரிடமிருந்து மினி பஸ் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அதற்கு ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் தகுதி (சால்வன்சி) சான்றிதழ் வாங்கி வரும்படி வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதால் துளசிராமன் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் (62) லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் துளசிராமன் புகார் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார். அவரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கிய தாசில்தார் திலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி வேலரஸ் தீர்ப்பு கூறினார். அதில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் திலகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
- கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் தலைமையில் கடனுதவி வழங்கப்பட்டது.
- கூட்டுறவு சங்கத் தலைவர் நாகமுத்து, செயலாளர் கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கிசான் கடன் அட்டை திட்டம் சார்பில் கால்நடை பராமரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் விற்பனை மகளிர் குழு சுழல் நிதியாக 13 குழுவிற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் தலைமையில் கடனுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் நாகமுத்து, செயலாளர் கணபதி, ஒன்றிய கவுன்சிலர் வெற்றி, திமுக ஒன்றிய செயலாளர், சுகுமார் மற்றும் மகளிர் குழுவினர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார்.
- மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருவொற்றியூர்:
மணலியை சேர்ந்தவர் திருமலை (45). சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமலையின் மனைவி அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருமலை தனது மனைவியிடம் அவரது டெய்லர் கடைக்கு அடிக்கடி வரும் இளம்பெண்களை தனது உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இதே போல் கேட்டு திருமலை மனைவியிடம் ரகளைசெய்து அடித்து துன்புறுத்தினார்.
இதனை வீட்டில் இருந்த அவரது மூத்த மகன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை தனது மனைவி மற்றும் மகனை சரமாரியாக கட்டையால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இது குறித்து திருமலையின் மனைவி மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன.
- 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊத்துக்கோட்டையில் 6 இடங்களில் போக்குவரத்து போலீஸ் சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. பராமரிப்பு இல்லாத காரணத்தால் இவை பழுதடைந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன. சிக்னல்கள் செயல்படாததால் ஊத்துக்கோட்டை பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற கணேஷ்குமார், புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டார். அதன்படி தற்போது 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
- சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரிடம் நிறுத்தி விசாரித்தனர்.
- 3 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆரணி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற அதே பகுதியை சேர்ந்த சூர்யா(23) என்பவரிடம் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் ஏற்கனவே 3 மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை சார்பில் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், பேரணியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெபதாஸ், ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு உறுதி மொழியையும், பேரணியும் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். பள்ளி வளாகத்தில் துவங்கிய இப்பேரணி மேம்பாலம், பஸ் நிலையம் வழியாக வடமதுரை கூட்டுச்சாலை வரையில் சென்று மீண்டும் பள்ளி வாளாகத்தை அடைந்தது.
மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பத் வரவேற்றார். முடிவில், கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
- காரில் வந்த மர்ம கும்பல் திடீரென தேவ் ஆனந்தை சுற்றி வளைத்தனர்.
- பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் சிரஞ்சீவியை தேடி வந்து உள்ளனர்.
பூந்தமல்லி:
மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த்(வயது29). ராப் இசைக்கலைஞர். இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார்.
நேற்று இரவு அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தினார். பின்னர் அவர் தனது குழுவுடன் வந்து கொண்டு இருந்தார். அவர்களில் 2 பேர் திருவேற்காட்டில் தங்கி இருப்பதால் அவர்களை அங்கு இறக்கிவிட்டார். பின்னர் தேவ் ஆனந்த் கல்பாக்கம் செல்வதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் காரில் சென்றார்.
திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் தேவ் ஆனந்த் காரை நிறுத்தி விட்டு சேதம் ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்று கீழே இறங்கி பார்த்தார்.
அப்போது எதிரே காரில் வந்த மர்ம கும்பல் திடீரென தேவ் ஆனந்தை சுற்றி வளைத்தனர். அவர்கள் உனது அண்ணன் பணம் தரவேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டி தேவ்ஆனந்தை தங்களது காரில் ஏற்றினர். பின்னர் கடத்தல் கும்பல் தேவ்ஆனந்தை கடத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனை கண்டு உடன் வந்த இசைக்குழுவை சேர்ந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடத்தல் குறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பலை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சினிமா பாணியில் காரின் மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு தேவ்ஆனந்தை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு நடத்தி பல பேருக்கு பணம் கொடுக்காமல் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது.
இதனால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் சிரஞ்சீவியை தேடி வந்து உள்ளனர். ஆனால் அவர் சிக்காததால் அவரது தம்பி தேவ் ஆனந்த் சென்னைக்கு இசைக்கச்சேரிக்கு வந்திருப்பதை அறிந்து கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.
கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தேவ் ஆனந்தை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடத்தல் கும்பல் எங்கு உள்ளனர்? என்று தெரியவில்லை. இச்சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






