என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி
- பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
- மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை சார்பில் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், பேரணியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெபதாஸ், ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு உறுதி மொழியையும், பேரணியும் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். பள்ளி வளாகத்தில் துவங்கிய இப்பேரணி மேம்பாலம், பஸ் நிலையம் வழியாக வடமதுரை கூட்டுச்சாலை வரையில் சென்று மீண்டும் பள்ளி வாளாகத்தை அடைந்தது.
மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பத் வரவேற்றார். முடிவில், கமலக்கண்ணன் நன்றி கூறினார்.








