என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
- மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோட்டாச்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகன்னு (94) இவரது மகன் வாசு (60) கூலிவேலை செய்து வருகின்றனர் இவர்.
தனக்கு சொந்தமான அதாவது கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை மற்றவருடைய ஒப்புதல் இல்லாமலும், கையொப்பம் பெறாமலும், பாகப்பிரிவினை பத்திரம் செய்யாமலும், ஒரு பங்குதாரர் பட்டா வாங்கி அதை விற்பனை செய்து அதில் செல்போன் கோபுரம் அமைத்து வருவதாக கூறி, செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும், முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யக் கோரியும், இதுகுறித்து பலமுறை பொன்னேரி கோட்டாட்சியர் வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இது தொடர்பாக சின்ன கண்ணு அவரது மகன் வாசு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரியும், பட்டாவை ரத்து செய்யக்கோரியும், மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அதிகாரியிடம் அழைத்துச் சென்று தெரிவித்தனர்.
இதுகுறித்து துணை வட்டாட்சியர்,தேன்மொழி விசாரணை செய்து வருவாய் ஆய்வாளர் அபிராமி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தினர்.






