திருவள்ளூரில் சிறுமி திடீர் மாயம்- வேலூர் காப்பகத்தில் போலீசார் மீட்டனர்

கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
திருவள்ளூரில் சிறுமி திடீர் மாயம்- வேலூர் காப்பகத்தில் போலீசார் மீட்டனர்
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மேகலா (27) கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கோகிலாவின் 10 வயது சிறுமியை கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமி மாயமாகியுள்ளார். அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர் அந்த சிறுமியை வேலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வேலூர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு சென்று அங்கு இருந்த சிறுமியை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com