என் மலர்
திருவள்ளூர்
- மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
- மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
மாதவரம்:
மாதவரம் நடராஜன் நகரை சேர்ந்தவர் அமர்நாத் (27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2-ந்தேதி நள்ளிரவு கம்பெனிக்கு வெளியே நின்ற அவரை ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்து சென்றனர். துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் ஏற்கனவே அமர்நாத்தை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த புஷ்பராஜ், ஸ்ரீநாத், ஹரி, பிரகாஷ், அரவிந்த் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் திருவள்ளூரில் நடைபெற உள்ளது.
- மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் திருவள்ளூரில் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சுனில் குமார், தலைமை தாங்கி மின்நுகர்வோரிடம் மனுக்களை பெற்று தீர்வு காண்கிறார்.
எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்து உள்ளார்.
- மகன் இறந்து சோகத்தில் இருந்த குப்பனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- மகன், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
ஆவடி அருகே உள்ள பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன்(வயது72). இவரது மகன் அசோக் குமார்(49). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இவர் திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மினி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபற்றி வீட்டில் இருந்த அவரது தந்தை குப்பனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.
இதற்கிடையே மகன் இறந்து சோகத்தில் இருந்த குப்பனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மகன், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது.
- தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது.
பொன்னேரி:
மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் உள்ள மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கடையில் இருந்த மரப்பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் செல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது. இதனை வேடிக்கை பார்த்தவர்கள் அந்த நாயை விரட்டிவிட்டனர். ஆனாலும் அந்த நாய் தொடர்ந்து அங்கேயே வந்தது. அப்போதுதான் கடை உரிமையாளர், கடைக்குள் நாய் குட்டி போட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து அந்த நாய்க்கு கடையின் வெளியே நின்றவர்கள் வழிவிட்டனர். உடனே அந்த தாய் நாய், புகை மூட்டத்தில் மோப்பம் பிடித்தபடி உள்ளே சென்று மரப்பலகையின் கீழ் தீயிலும் பாதுகாப்பாக இருந்த 6 குட்டிகளை ஒவ்வொன்றாக பாசத்துடன் வாயில் கவ்வியபடி வெளியே எடுத்து வந்தது. பின்னர் அந்த குட்டிகளை கடையின் அருகில் உள்ள பின்பகுதியில் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக ஒளித்து வைத்தது. இதில் இரண்டு நாய்க்குட்டிகள் இறந்து இருந்தன. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் வருத்தம் அடைந்தனர். பின்னர் இறந்த 2 குட்டிகளையும் தனியாக எடுத்தனர். மீதியிருந்த 4 குட்டிகளுக்கும் தாய் நாய் பாசத்துடன் பாலூட்டியது.
- மோதலில் அவர்கள் பழனியை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
- திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே பழனி (60) என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் பிச்சை எடுத்துவரும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் அவர்கள் பழனியை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் இப்போது முழுமையாக இல்லை.
- புழல் ஏரிப்பகுதிகளில் பட்டப்பகலில காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் அதிகம் வருகை தருகிறார்கள்.
திருவள்ளூர்:
புழல் ஏரி திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய ஏரி ஆகும்.
இந்த ஏரி ஒரு சுற்றுலா தலமாகவும், சென்னைக்கு குடிதண்ணீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாகவும் அமைந்து உள்ளது. 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இது 7 கி. மீட்டர். நீளம் கொண்ட நீர் தேக்கமாகும்.
15 அடி ஆழமிக்க இந்த ஏரி தண்ணீரை அளவிட ஜோன்ஸ் டவர் 1881-ல் கட்டப்பட்டது. கடல் போல் காணப்படும் இந்த தண்ணீரை குடிநீருக்கு எடுப்பதற்காக சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜோன்ஸ் டவரை சுற்றி உள்ள கரையோர பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடைபயிற்சி செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்க காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் இங்கு தினமும் வருகிறார்கள்.
சென்னை மாநகரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி திகழ்ந்து வருகிறது. இந்த புழல் ஏரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற ஏராளமான சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த உபரி நீரை கொண்டு புழல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வந்தது. நெல், பயிறு வகைகள், பழங்கள் இந்த கால்வாயையொட்டி உள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டன. இந்த நிலையில் குடியிருப்புகள் அதிகரித்ததால் வேளாண் நிலம் முற்றிலுமாக அழிந்து போனது. அதேபோல இந்த சிறு ஓடைகளும் முற்றிலுமாக சாக்கடை செல்லும் கால்வாய்களாக மாறிவிட்டன.
புழல் ஏரியில் தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுபொருட்கள் தண்ணீரில் மிதக்கின்றன. புழல் ஏரியில் அப்பகுதி மக்கள் துணி துவைத்து குளித்தும் வருகிறார்கள். மேலும் ஏரிக்கரைக்கு தினமும் வரும் பொதுமக்களால் ஏரிகரை பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து உள்ளன. புழல் ஏரி திருமுல்லைவாயல் பகுதியில் தொடங்கி புதூர் வரை 14 இடங்களில் கரைபகுதியை கொண்டிருக்கிறது. இந்த கரைகளை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து ஏரிக்கு கழிவுநீர் விடப்படுகிறது. திருமுல்லைவாயல் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் போன்ற குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய்கள் இந்த ஏரியில் இணைந்து இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் உள்பட ஏராளமான கழிவுகள் ஏரியில் கலக்கின்றன.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் இப்போது முழுமையாக இல்லை. சென்னையில் ஒரே இடத்தில் வேலை, தொழில், முதலீடுகள் குவிந்து உள்ளதால் சென்னையை நோக்கி மக்கள் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமான குடியிருப்புகள் பெருக ஆரம்பித்துவிட்டது. ஏரியில் கழிவுகள் கலக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் கலக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். நீர்நிலை பகுதியோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. எனவே இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் உடனடயாக அகற்றி மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புழல் ஏரிப்பகுதிகளில் பட்டப்பகலில காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் அதிகம் வருகை தருகிறார்கள். பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களில் ஜோடியாக வந்து புழல் ஏரிப்பகுதியை வலம் வருகிறார்கள். இதனால் புழல் ஏரிப்பகுதி காதல் ஜோடிகளின் புகழிடமாக அமைந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமர்ந்து கொண்டு காதல் லீலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
- நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கமோ, இளக்காரமாக மதிப்பீடோ கொண்டவனுமில்லை.
மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
26-வது ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் கடந்த 30-ந்தேதி மேலவளவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா. கைக்கூலிகள் பறையர் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். சாதியின் பெயரை சொல்லி வரும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தலித் சமுதாய பெயரை பயன்படுத்தி சனாதன அரசியல் செய்கிறார்கள். எனக்கு திருமணம் செய்துகொள்ள தெரியாதா, எதற்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் நொண்டியா..., முடமா... என்று திருமாவளவன் பேசினார்.
அவ்வாறு பேசிய அவர் உடனே அப்படி சொல்லக் கூடாது அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது எனவும் வருத்தம் தெரிவித்தார்.
இதுபற்றி சமூகவலை தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் எழுப்பப்பட்டதை அடுத்து திருமாவளவன் டுவிட்டரில் மாற்றுத்திறனாளி குறித்து கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலவளவு போராளிகள் வீர வணக்க நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்து விட்டன. அப்போதே அதற்கு வருத்தம் தெரிவித்தேன்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கமோ, இளக்காரமாக மதிப்பீடோ கொண்டவனுமில்லை.
என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பும் ஒரு சில அற்பர்களை கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக 'நா தவறி வந்து விழுந்தன' இனி அவ்வாறு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள். பொறுத்தருளவும்.
- தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று கூறப்பட்டது.
- தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் இதை வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. தி.மு.க. மூத்த அமைச்சர்கள் சிலர் உதயநிதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் இது தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யும் போது உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை.
தி.மு.க. மூத்த அமைச்சர்கள் விரும்பினாலும் தனக்கு அந்த பொறுப்பை ஏற்க விருப்பம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு அதுபற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் உதயநிதி துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல எழுந்து வருகிறது. தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சிலர் இதை வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
இந்த தடவையும் உதயநிதி இதை எப்படி எதிர் கொள்வார் என்று தெரிய வில்லை. ஆனால் தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ஏற்க வேண்டும் என்று விரும்புவது குறிப்பிடத்தக்கது.
- சத்தம் கேட்டு எழுந்த ராஜ்கண்ணன் வீட்டின் வெளியே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார்.
- வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ் கண்ணன்.தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் 4 பேர் கும்பல் வீட்டின் சுவர் ஏறி குதித்து புகுந்தனர். அவர்கள், வீட்டின் மேல்மாடிக்கு சென்று கொள்ளையில் ஈடுபட கதவை தட்டினர். சத்தம் கேட்டு எழுந்த ராஜ்கண்ணன் வீட்டின் வெளியே கொள்ளையர்கள் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 வாலிபர்களும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. தொழிலாளர்கள் போல் இங்குள்ள நிறுவனங்களில் வேலைபார்க்கும் அவர்கள் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மரக்கடையின் முதல் தளத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது.
- உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதும் தீப்பிடித்தது.
பொன்னேரி:
மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலை மீஞ்சூர் செல்வ மஹால் அருகில் அமைந்துள்ள பிளைவுட் மரக்கடையின் முதல் தளத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது.
தீயானது மெதுவாக கீழே உள்ள மரக்கடைக்குப் பரவியது. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் முழுவதுமாக தீப்பிடித்தது.
தகவலறிந்து அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலைய தீயணைப்பு வாகனம், வல்லூர், பொன்னேரி, எண்ணூர், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் மரங்கள் எரிந்து நாசமாயின.
பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், தாசில்தார் செல்வகுமார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். இதுதொடர்பாக மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கண்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. கிராம தேவதையான ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் கடந்த 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை திருவிழா நடைபெற்றது. புதன்கிழமை இரவு பொன்னியம்மன் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கடந்த 23-ம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை தர்மராஜா கோவிலில் கொடியேற்றும் நிகழ்ச்சியும், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திரெளபதி அம்மன் திருக்கோவிலில் தீமிதி திருவிழா துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை புனித நீர் ஆடி, காப்பு கட்டி விரதம் இருந்த கிராம மக்களை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், கோவிலின் எதிரே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர்,கோவில் வளாகத்தில் வான வேடிக்கையும், அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும், தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், மாகரல் கண்டிகை கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.
ஆவடி:
ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று அதிகாலை நடந்த ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர், கோர்ட்டு வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.






