மாதவரத்தில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 5 பேர் கும்பல் கைது

மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
மாதவரத்தில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 5 பேர் கும்பல் கைது
Published on

மாதவரம்:

மாதவரம் நடராஜன் நகரை சேர்ந்தவர் அமர்நாத் (27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2-ந்தேதி நள்ளிரவு கம்பெனிக்கு வெளியே நின்ற அவரை ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி செல்போனை பறித்து சென்றனர். துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மூலக்கடை சந்திப்பு அருகே வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

அவர்கள் ஏற்கனவே அமர்நாத்தை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த புஷ்பராஜ், ஸ்ரீநாத், ஹரி, பிரகாஷ், அரவிந்த் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com