ஆவடி பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது

ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.
ஆவடி பகுதிகளில் ஒரே நாளில் 89 ரவுடிகள் கைது
Published on

ஆவடி:

ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று அதிகாலை நடந்த ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர், கோர்ட்டு வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com