என் மலர்
திருவள்ளூர்
- திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
எண்ணூரில் 150 குடும்பத்தினர் பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடந்த கழிப்பறை மண்டல குழு தலைவர், அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடந்தன. இதற்கு கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே முக்கிய காரணமாக கூறப்பட்டது. தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவு நீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது. ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.
தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து மாலை மலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை கூட்டம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் கவுன்சி லர்கள் ஜெயராமன், சிவகுமார், தீண்டாமை வன்கொடுமைச் சட்ட அதிகாரிகள், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம், மாநகராட்சி செயற்பொறியாளர் தணிகை வேலன் மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் ஊர் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிலர் குழாய் அமைக்க எதிர்ப்புகள் தெரிவித்தனர். பின்னர் இருதரப்பினர் இடையே சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்ததை தொடர்ந்து 20 மீட்டர் தூரம் குழாய்கள் அமைப்பதற்கு இருதரப்பினர் சம்மதித்தனர். இதற்கான பணி இன்று காலை செயற்பொறியாளர் தணிகை வேலன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் கோதண்டராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
- கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த 2 மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் தற்போது 2082 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இது மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி இதில் 2235 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கன அடியில் 89 மி.கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 2347 மி.கன. அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன. அடியில் 377 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் மொத்தம் 7130 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த தண்ணீர் இருப்பில் 60 சதவீதம் ஆகும்.
- சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர்.
- ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நேற்று இரவு சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சத்தியவேடு சாலை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் சோதனையிட்டனர். ஒரு லாரியில் சோதனை செய்தபோது அதில் வளர்ப்பு மீன் தொட்டிகளுக்கு நடுவே மூட்டை மூட்டையாக மறைத்து கஞ்சா கடத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து லாரியுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிவந்த டிரைவரான கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. கஞ்சா கடத்திலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த மிட்டன மில்லி ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது51).இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கொசம்பாளையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவர் மிட்டன மில்லியில் இருந்து திருநின்றவூர் வழியாக பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பஸ்நிலையம் அருகே பெரியபாளையம் சாலையில் சென்றபோது திடீரென லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சீனிவாசன் சிக்கிக்கொண்டார். இதில் ஹெல்மெட் அணிந்த நிலையிலும் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- கத்திமுனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜனனி, பிளசிகா. திருநங்கைகளான இருவரும் நேற்று இரவு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஜீசஸ் கால்ஸ் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த போதை வாலிபர்கள் 2 பேர் பிளசிகாவை அழைத்து பேச்சுக் கொடுத்தனர்.
பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி அவரை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி உடனடியாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாராஜன் ஆகியோர் விரைந்து வந்தனர் மேலும் கடத்தி செல்லப்பட்ட பிளசிகாவின் செல்போன் "டவர் லொகேஷன்" மூலம் செட்டியார் அகரம் பகுதியில் இருப்பது தெரிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மறைவான பகுதியில் போதை வாலிபர்களின் பிடியில் சிக்கி தவித்து வந்த பிளசிகாவை பத்திரமாகமீட்டனர்.
அப்போது போதை வாலிபர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மகாராஜனை சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் கடித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் இருவரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பிளசிகாவை கடத்தியது ஆவடியை சேர்ந்த ரவுடி ஜெகன் (வயது 30) மற்றும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிந்தது. அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த ஜெகன் மற்றும் தினேஷ் இருவரும் பிளசிகாவிற்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது இதனால் மயங்கிய பிளசிகாவை போலீசார் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசிடம் இருந்த தப்ப முயன்ற ரவுடி ஜெகனுக்கு வலது காலில் அடிபட்டு எலும்பு முறிந்தது குறிப்பிடத்தக்கது. கத்தி முனையில் திருநங்கையை கடத்தி சென்று மாத்திரை கொடுத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- ராணிப்பேட்டை பகுதியில் காருடன் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்தாஸ் (28). இவரது மனைவி அனிதா (23). இருவரும் நேற்று முன்தினம் காரில் சென்னையில் உள்ள அனிதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலை இருவரும் காரில் ஸ்ரீதேவிக்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே வந்த போது பின்னால் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உமேஷ்யாதவ் காரில் இருந்து கீழே இறங்கியபோது மர்ம நபர்கள் அவரது மனைவி அனிதாவை கீழே இறக்கிவிட்டு உமேசை காருடன் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து அனிதா தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசார் அனிதாவிடம் கடத்தல் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உமேஷ் சகோதரர் ராஜேஷ் என்பவர் நிதி நிறுவனங்களில் கூடுதல் பணம் பெற்றுத் தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை ராஜேஷிடம் கொடுத்தவர்கள் உமேஷ் தான் ராஜேஷ் என்று நினைத்து அவரை கடத்தி சென்றதாக தெரிய வருகிறது. இதையடுத்து வெள்ளவேடு தனிப்படை போலீசார் வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் காருடன் கடத்தி செல்லப்பட்ட வாலிபரை 5 மணி நேரத்தில் மீட்டனர்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை காருடன் கடத்தி சென்ற காஞ்சிபுரம் மாவட்டம் உழக்கோல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவளரசன் (36), ராணிப்பேட்டை மாவட்டம் கல்குளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (34) காஞ்சிபுரம் தாமல் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (24), திருவண்ணா மலை மாவட்டம் நெசல்புதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபி (34) ஆகிய 4 பேரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் 6 தலைமுறையாக வசித்து வருகின்றனர். கடந்த ஐந்தாண்டு காலமாக வீட்டுமனைகள் இல்லை எனக்கோரி கடந்த 2020-ம் ஆண்டும் 2022-ம் ஆண்டும் பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் குழு அமைத்து பட்டா தருவதற்கான முகாந்திரம் உள்ளதால் பட்டாதாரர்களுக்கான பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடம் தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளார்.
ஆனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இந்நாள் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் இனிவரும் மழை காலங்களில் தங்குவதற்கான இட வசதி இல்லாத காரணத்தினால் கடந்த 10-7-2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவச பட்டாக்கள் வழங்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதை உடனடியாக செயல்படுத்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஏற்கனவே தயார் செய்த பயனாளிகள் பட்டியல் மற்றும் வரைபடத்தை கொண்டு உடனடியாக பயனாளிகளை தற்காலிக குடிசைகள் அமைக்க அனுமதி வழங்க உத்தரவிடும் படியும் வலியுறுத்தி உள்ளனர்.
- நீர்வளத்துறை உடனடியாக ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்
சோழவரம்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து முதல் முறையாக தண்ணீர் ஆவியாவதை தடுக்க புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சோழவரம் ஏரியில் 1081 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது 95 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இந்த ஏரியில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் தண்ணீர் முழுவதும் வற்றிவிடும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை அதிகமாக பெய்துள்ளதால் அந்த நிலை ஏற்படவில்லை. தற்போது நீர்மட்டம் வேகமாக குறைவதால் ஆவியாவதை தடுக்க ஏரிநீர் புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் இதுகுறித்து இடைநிலை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனகராஜன் கூறியதாவது:-
சோழவரம் ஏரியில் நீர்மட்டம் இவ்வளவு வேகமாக குறைவதற்கு ஏரிக்கு வரும் கால்வாய்கள் அடைபடுவதும் நீர்பிடிப்பு பகுதிகள் சுருங்கியதுமே முக்கிய காரணம். நீர்வளத்துறை உடனடியாக ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பூண்டி ஏரியில் 3231 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 2064 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது 2242 மி.கனஅடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. தற்போது 2361 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 380 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இதை வைத்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை 7 மாதங்களுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மின்கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளது.
- பராமரிப்பு பணி காரணமாக ஏனாதி மேல்பாக்கம், பெரிய சோழியபாக்கம், சின்ன சோழியபாக்கம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது.
கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டம்பேடு சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருந்து வரும் மின்கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளது.
இதனையடுத்து நாளை (புதன்கிழமை) கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம் பேடு சாலை, மேட்டுத்தெரு, தேர்வழி, பாபா நகர், என்.எம்.எஸ்.கார்டன், குருகிருபா நகர் அக்சையா கார்டன், குமரன் நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது.
இது தவிர பராமரிப்பு பணி காரணமாக ஏனாதி மேல்பாக்கம், பெரிய சோழியபாக்கம், சின்ன சோழியபாக்கம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை கும்மிடிப்பூண்டி மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
- புதிய தபால் அலுவலகத்தை தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
- தபால் அலுவலகம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும்.
தாம்பரம் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட திருவள்ளூர், பொன்னேரி தாலுக்காவில் உள்ள உத்தண்டி கண்டிகை கிராமத்தில் வசிக்கும் லட்சுமி நாராயணா கோவில் தெருவில் புதிய தபால் அலுவலகத்தை தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த தபால் அலுவலகம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும். இங்கு சாதாரண தபால், பதிவு தபால், விரைவு தபால் மணியார்டர் சேவை, அஞ்சலக சேமிப்பு காப்பீட்டு சேவை, தொடர் வைப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டங்கள் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த கிளை தபால் அலுவலகம் 601204 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் உத்தன்டிகண்டிகை, ஆத்தேரய மங்கலம், சிங்கிளிமேடு, கோடூர் ஆகிய கிராமங்களுக்கு தபால் பட்டுவாடா செய்ய உள்ளது.
- மர்ம நபர்கள் ராஜனை கத்தியால் கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இந்த பாஸ்ட் புட் கடையில் இளைஞர் இருவர் உணவு சாப்பிட்டு விட்டு உணவு குறைவாக உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜனை கத்தியால் கை மற்றும் தலையில் வெட்டி உள்ளனர்.
மேலும் கையில் வைத்திருந்த இரும்பு ராடால் பின் பக்க தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் ராஜன் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே தப்பி ஓடி உள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- அம்மன் கோவில் ஆடி மாதம் முழுவதும் திரளான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- திருட்டை பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம பெண்ணை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூவர் அடுத்த புட்லூர் ராமாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் (எ) ஸ்ரீ அங்காலபரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாதம் முழுவதும் திரளான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு மகாலட்சுமி நகரைச் சேர்ந்த வள்ளியம்மாள் (42) சாமி தரிசனம் செய்ய புட்லூர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது கோவிலில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி வள்ளியம்மாள் வைத்திருந்த மணி பர்சில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 600 பணம் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தத் திருட்டை பார்த்த பொதுமக்கள் அந்த மர்ம பெண்ணை பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் விசாரணையில் அம்பத்தூர் அய்யத்தூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த தவிதா (45) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






