என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பராமரிப்பு காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் நாளை மின்தடை
    X

    பராமரிப்பு காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் நாளை மின்தடை

    • மின்கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளது.
    • பராமரிப்பு பணி காரணமாக ஏனாதி மேல்பாக்கம், பெரிய சோழியபாக்கம், சின்ன சோழியபாக்கம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது.

    கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டம்பேடு சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் மழைநீர் கால்வாய் கட்டுவதற்கு இடையூறாக இருந்து வரும் மின்கம்பங்களை அகற்றி மாற்று இடத்தில் அமைக்கும் பணி நாளை நடைபெற உள்ளது.

    இதனையடுத்து நாளை (புதன்கிழமை) கும்மிடிப்பூண்டியில் உள்ள ரெட்டம் பேடு சாலை, மேட்டுத்தெரு, தேர்வழி, பாபா நகர், என்.எம்.எஸ்.கார்டன், குருகிருபா நகர் அக்சையா கார்டன், குமரன் நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இது தவிர பராமரிப்பு பணி காரணமாக ஏனாதி மேல்பாக்கம், பெரிய சோழியபாக்கம், சின்ன சோழியபாக்கம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின்சாரம் இருக்காது.

    இத்தகவலை கும்மிடிப்பூண்டி மின்துறை உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×