என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • போலீஸ் வாகனம் மேரி மீது மோதியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையை அடுத்த அம்பத்தூர் கிளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மேரி. மூதாட்டியான இவர் இன்று காலை அண்ணா சதுக்கம் அருகே ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் மேரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது22). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    நேற்று இரவு அவர் மண்ணூர்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் பாலச்சந்திரன் அருகில் இருந்த கடையில் பிரியாணி வாங்க நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அதேகடைக்கு 3 வாலிபர்கள் மது போதையில் வந்தனர். அவர்கள் கடையில் பிரியாணி வாங்க நின்றபோது பாலச்சந்திரனை இடித்ததாக தெரிகிறது. இதனால் பாலச்சந்திரனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது.

    இந்தமோதலில் பாலசந்திரன் தனது கையில் இருந்த ஹெல்மெட்டால் அந்த வாலிபர்களை தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலச்சந்திரனை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியாணி கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மர்ம வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாலசந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பாலச்சந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    கொலையாளிகள் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையில் பிரியாணி வாங்கும் தகராறில் வாலிபர் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யாக சாலையில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகும்.இந்த கோவிலின் உபகோவிலான ஸ்ரீ லட்சுமி வராஹன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஹிருதாபநாசினி குளக்கரை அருகே அமைந்து உள்ளது. சிதிலமடைந்து இருந்த இந்த கோவிலின் மூலவர் விமானம், ராஜகோபுரம் உள்பட கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து பகுதியும் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 17-ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாக சாலையில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை 6.45 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனிதநீர் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    பின்னர் கோவில் மூலஸ்தானம் மற்றும் ராஜகோபுரம் விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

    தொட்ந்து ஸ்ரீ லட்சுமி வராஹன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. உற்சவர் வீரராகவ பெருமாள், லட்சுமி வராஹன் சன்னதியில் எழுந்தருள சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த புளியம்படு பகுதியை சேர்ந்தவர் அரி. டிரைவர் இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் பூவரசன் (வயது23). மணப்பாக்கம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பூட்டிய வீட்டுக்குள் செல்வி, அவரது மகன் பூவரசன் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மன அழுத்தத்தில்இருந்து செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தன்னையும் தாக்கி கொண்டது தெரிய வந்தது. செல்வி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவரது உடல் எடையும் மெல்ல மெல்ல குறைந்து வந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவித்து வந்தாக தெரிகிறது. இதற்காக செல்வி தினசரி தூக்க மாத்திரை எடுத்து வந்துள்ளார்.

    அரி தனது சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள பள்ளூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரி வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மனஅழுத்தத்தில் இருந்த செல்வி அருகில் தூங்கிக கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் அடித்தார். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். பின்னர் செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குறுகலான இடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளி வகுப்பறைகளுக்கு இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் மலம் பூசியும் குடிநீர் தொட்டி உடைத்த சம்பவம் மாணவர்கள் மற்றும் கிராமமக்களிடையை பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் மேலும் அடிக்கடி மர்மநபர்கள் பள்ளியில் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்பாக பலமுறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    தமிழ்நாடு அரசு உடனடியாக பள்ளிக்கு உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வகுப்பறைகளுக்கு மலம் தடவிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் இரவு தங்குவதற்கு அறைகள் கேட்டுள்ளனர்.
    • பக்தர்கள் விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் குறைந்த விலையில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் தணிகை, கார்த்திகேயன் மற்றும் சரவணப்பொய்கை குடில்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கே.ஜி.எப்., பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். முன்னதாக கோவிலுக்கு சொந்தமான தணிகை இல்லத்தில் இரவு தங்குவதற்கு அறைகள் கேட்டுள்ளனர். ஆனால் கோவில் ஊழியர்கள் அறைகள் காலியாக இருந்தும் அறைகள் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அறைகள் ஒதுக்க முடியாது என கோவில் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தணிகை குடில்களில் அறைகள் காலியாக இருந்தும் வெளி மாநிலத்தவருக்கு அறை ஒதுக்க முடியாது என கூறி 3 மணி நேரம் குழந்தைகள் மற்றும் பெண்களை தரையில் அமர வைத்த கோவில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில பக்தர்கள் திருத்தணி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கோவில் உயர் அதிகாரிகள் உடனடியாக பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கி உள்ளனர்.

    குடில்களில் பணிபுரியும் ஊழியர்கள் முகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்களில் அறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
    • ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழபுரம் பகுதியில் தாழங்குளம் என்ற இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தாழங்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் மழைக்காலத்திற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழங்குளத்தில் அப்பகுதி மழை நீரை கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக உடனடியாக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று திருவேற்காடு போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா தலைமையில் பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி முன்னிலையில் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் உள்பட 75 பேர் கொண்ட குழுவினர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.பின்னர் அங்கிருந்த 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழவரம்:

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் இரும்புகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 3 மணிநேரம் போராடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர்.
    • வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி சிப்காட் அருகே காயலார்மேடு பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் பெரிய பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் "தப்பு நடக்கக்கூடாது என்று அடிக்கவில்லை, தப்பு நடக்கனும், அதை நாங்க மட்டும் தான் செய்யனும்'' என்ற பஞ்ச் வசனத்துடன் பட்டாக்கத்தியை எடுத்து காண்பிக்கிறார்கள். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் சமூகவலைதளத்தில் லைக்கிற்கு ஆசைப்பட்டு பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் செய்து சிக்கி உள்ளனர்.

    அவர்கள் மீது ஏற்கனவே எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். இந்த வீடியோவில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் இருப்பதாக தெரிகிறது. அவரை தேடிவருகிறார்கள்.

    • சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர்.

    பொன்னேரி:

    பள்ளிகளில் காலை உணவு திட்டம் மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, செயலாளர் லதா, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வு ஊதியம் ரூ.8,750 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

    இதற்காக நர்சு ஒருவர் வந்து இருந்தார். அவர் சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்தார். பின்னர் சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கூறும்போது, இந்த ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க உள்ளோம். அவர் வாங்க மறுத்தால் முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.

    • மீன்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பழவேற்காடு மீன் ஏலக்கூடம் முக்கிய மையமாக உள்ளது.
    • மீன் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பழவேற்காடு மீன் ஏலக்கூடம் முக்கிய மையமாக உள்ளது.

    இந்த ஏல கூடம் அருகில் மீன் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. அவை அகற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் அதனை வாங்க வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், மீன் பிரியர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மீன் ஏலக்கூடம் அருகே அகற்றப்படாமல் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விக்டர்ராஜ் என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 937 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு தங்கி இருந்த விக்டர்ராஜ்(24) என்பவர் கடந்த 13-ந்தேதி வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து கியூபிரிவு போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×