என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரவாயலில் வாலிபர் கொலையில் திருப்பம்- மகனை தாயே அடித்து கொன்றது அம்பலம்
    X

    மதுரவாயலில் வாலிபர் கொலையில் திருப்பம்- மகனை தாயே அடித்து கொன்றது அம்பலம்

    • பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த புளியம்படு பகுதியை சேர்ந்தவர் அரி. டிரைவர் இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் பூவரசன் (வயது23). மணப்பாக்கம் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பூட்டிய வீட்டுக்குள் செல்வி, அவரது மகன் பூவரசன் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மன அழுத்தத்தில்இருந்து செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு தன்னையும் தாக்கி கொண்டது தெரிய வந்தது. செல்வி கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவரது உடல் எடையும் மெல்ல மெல்ல குறைந்து வந்துள்ளது. மேலும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவித்து வந்தாக தெரிகிறது. இதற்காக செல்வி தினசரி தூக்க மாத்திரை எடுத்து வந்துள்ளார்.

    அரி தனது சொந்த ஊரான அரக்கோணம் அருகே உள்ள பள்ளூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரி வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மனஅழுத்தத்தில் இருந்த செல்வி அருகில் தூங்கிக கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு கம்பியால் கொடூரமான முறையில் அடித்தார். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். பின்னர் செல்வி தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×