என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள்.
    • ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் புகழ்பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்த குத்தகை காலம் முடிந்தும் சிலர் போலியாக டோக்கன் அச்சடித்து வாகனங்களை நிறுத்த பணம் வசூலித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்நிலையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன வரி வசூல் செய்யும் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது போலி ரசீது மூலம் பணம் வாகனங்களை நிறுத்த வந்த பக்தர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டிருந்த தாராட்சி கிராமம் புதிய காலனியைச் சேர்ந்த சூர்யா(28), தாராட்சி கிராமம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகராஜ்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போலி வாகன வரி வசூல் செய்யும் டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவர்களுடன் இருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர். மேலும் பிடிப்பட்ட இருவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை அடையாறில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கமலதாசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருஆயர்பாடியை சேர்ந்தவர் கமலதாசன் (வயது 44). இவர் சென்னை அடை யாறில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணி செய்து வந்தார்.

    நேற்று மாலை கமலதாசன், பொன்னேரியில் இருந்து காட்டாவூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கூடுவாஞ்சேரி சாலை அருகில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளை கமலதாசன் திருப்பினார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளோடு சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.

    இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கமலதாசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கமலதாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்று காலை ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வருகிறது.

    அவ்வகையில், இன்று 27-வது ஆண்டாக திருக்கல்யாண மகோத்சவ விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ வள்ளி மணவாளனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவ மகோத்சவம் நடைபெற்றது.

    மதியம் 11.50 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் 15 பேர் கொண்ட வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதன் பின்னர், மங்கள வாத்தியம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி ஆறுமுறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா,துணை தலைவர் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பெஸ்த வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை காலை கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அன்று முதல் மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை பக்தர்கள் கோவிலுக்கு சாரி வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை விடியற்காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா பக்தர்களும்,பொது மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • அம்பிகா கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தினார்.
    • மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நிலவள வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி அம்பிகா (70). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    அம்பிகா, கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாய் பகுதியில் வசிக்கும் தனது குடும்பத்தினரிடம் சொத்தில் சம உரிமை கேட்டார். இதற்கு அவரது 2 தம்பிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அம்பிகா கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோர்ட்டில் சட்ட போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அவரது 7 வருட போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு 1 ஏக்கர்15 சென்ட் நிலத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த வாரத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து அம்பிகாவுக்கு பட்டா வழங்கினர்.

    இந்த நிலையில் இந்த இடத்திற்கான பட்டாவை அம்பிகா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த வீடிேயா தற்போது வைரலாக பரவிவருகிறது.

    இதுகுறித்து அம்பிகா கூறும்போது, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தார். எனவே அவரது நினைவிடத்தில் எனக்கு சட்டபோராட்டத்தினால் கிடைத்த பட்டாவை வைத்து அஞ்சலி செலுத்தினேன் என்றார்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை குடிநீர் ஏரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி. எம்.சி. தண்ணீரை சேர்த்து வைக்கலாம். கோடை காலங்களில் வெயில் காரணமாக இந்த ஏரி முழுவதுமாக வறண்டு விடும்போது சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று மாலை பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது நீர் தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரை, பிற நீா்த்தாவரங்கள் மற்றும் இதர கழிவுப் பொருள்களை வரும் பருவ மழைக்கு முன்பாக அகற்ற வேண்டும்.

    மேலும், இணைப்பு கால்வாயின் இருபுறமும் சேதம் அடைந்துள்ள சாய்வு தளங்களை பராமரிப்பு செய்து கால்வாயின் இரு புறமும் குடியிருக்கும் மக்கள் கால்வாயில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டாமல் தகவல் பலகைகள் வைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

    மேலும் சென்னையின் மிக முக்கிய குடிநீா் ஆதாரமாக பூண்டி இணைப்பு கால்வாய்களில் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை கலப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

    இந்த ஆண்டு பருவ மழை முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    அப்போது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய நிர்வாக இயக்குனர் கிரிலோஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் தலைமை பொறியாளர் ஜேசுதாஸ், திருவள்ளூர் கொசஸ்தலையாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் இவர்கள் புதிதாக கட்டப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ள கடந்த 2022-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
    • விதிமுறையை மீறி கூவம் ஏரியில் மணல் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    திருவள்ளூர்:

    கடம்பத்துார் ஒன்றியத்தில் கூவம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த ஏரி அருகே கண்ணுார் எல்லை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ள கடந்த 2022-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் விதிமுறையை மீறி கூவம் ஏரியில் மணல் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூவம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விதிமீறல் குறித்து நில அளவை செய்து வருகின்றனர்.

    • 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
    • 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம் உட்பட 21 கிராமங்கள் வழியாக சித்தூர் வரை அமைகிறது.

    இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 276 ஏக்கர் நிலப்பரப்பில் விளை நிலங்கள் கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள், 200க்கும் மேற்பட்ட வீடுகள், 13 ஏரிகள், 3 குளங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். எனினும் சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் பருத்தி மேனிகுப்பத்தில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 வழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் வசந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யபாமா ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.
    • சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை சத்ராஸ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்தில் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்போது வரை 94 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த பணிக்காக நந்தி ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் நீளமுள்ள புதிய பாலமும், திருத்தணி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாலம் கட்டுவதும் இதன் திட்டப் பணியாகும். அதற்காக, 3.2 கி.மீ நீளமுள்ள சாலை கூடுதலாக போடப்பட வேண்டி உள்ளது.

    மேலும் 800 மீட்டர் நீளமுள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான செலவும் அதிகரித்தது.

    எனவே பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.

    இந்த நிலையில் தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.5.9 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இதையடுத்து மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நெடுஞ்சாலைப் பணியின் முழு திட்டமும் அடுத்த ஆண்டு 21-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இந்த பணிகள் முடிந்தால் போக்குவரத்து தொடர்பாக சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும். மேலும் கோவில் நகரமான திருத்தணியில் 70 சதவீதம் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    • பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்கள்.
    • கண்டக்டர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக பார்த்தி (30), கண்டக்டராக கிருஷ்ணன் (29) ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த பஸ் பேரம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுமா விலங்கை பகுதியில் பஸ்சை 4 பேர் வழிமறித்தனர்.

    அவர்கள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தாக்குதலில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்து வகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கண்டக்டர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்று காரணமாக திருவாலங்காடு அடுத்த மணவூர் கிராமத்தில் சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் அந்த பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

    மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்ற னர், இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,

    ×