என் மலர்
திருப்பூர்
- நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது
- 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன
உடுமலை :
உடுமலை நகராட்சிக்கு குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் நகரங்களில் குப்பை அகற்றுவது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உடுமலை நகராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் வாயிலாக வீடுகள் ,வணிகம் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பை சிறிய அளவிலான பேட்டரி வாகனங்கள் வாயிலாக பெரிய வாகனங்கள் மற்றும் நுண் உர குடில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஏற்கனவே நகராட்சியில் 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில்,தற்போது 7வாகனங்கள் வந்துள்ளன. மேலும் 3 வாகனங்கள் வாங்க வேண்டி உள்ளது . விரைவில் தூய்மைப் பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றனர்.இந்த புதிய பேட்டரி வாகனங்களின் வருகையால் நகரின் குப்பை பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- பவித்ரா ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
- இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
பவித்ரா அவரது தாயாருடன் அடிக்கடி பேசி வருவது பிடிக்காமல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் திடீரென வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை துண்டித்து படுகொலை செய்தார்.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 24 விவசாயிகள் கலந்து கொண்டு 13 ஆயிரத்து 767 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.6 லட்சத்து 32ஆயிரத்து 279க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழன் தோறும் சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.
நேற்று வியாழக்கிழமை 24 விவசாயிகள் கலந்து கொண்டு 13 ஆயிரத்து 767 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியை சேர்ந்த 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.49.69க்கும், குறைந்தபட்சம் ரூ.41.49க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.6 லட்சத்து 32ஆயிரத்து 279க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
- 6 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் ஜெகநாதன்(வயது 50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கெடு காலம் முடிந்ததால், பெருமாநல்லூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளார். ஏற்கனவே வாங்கிய சிவலிங்கத்தின் கடனை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன் தொகைக்காக பெருமாநல்லூர் நிதி நிறுவனத்திற்கு கிரைய உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளார். கடன் தொகை செலுத்தாவிடில் நிலம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகி விடும் என்ற ஒப்பந்த அடிப்படையில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் கடன் பெறுவதற்காக, கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்குமாறு நிதி நிறுவனத்தில் ஜெகநாதன் கேட்டுள்ளார்.
இன்று, நாளை என காலம் தாழ்த்திய அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெகநாதன் வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது அதில் அவரது நிலத்தை,போலியான பத்திரங்கள் தயாரித்து கடந்த 2020 ஆண்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவர் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த நிலையில், மனவேதனையில் இருந்த அவர் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அருகே இருந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து ஜெகநாதனின் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற காரியங்களில் இனி ஈடுபடக்கூடாது என பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட்சவுமியா விவசாயி ஜெகநாதனுக்கு அறிவுறுத்தினார். துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவினாசி:
அவினாசி போலீசார் அவினாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டறை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பழனிச்சாமி மகன் ரமேஷ் (வயது 34), ஆனந்த் மகன் தினேஷ் (27) மற்றும் சீனிவாசன் (58) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 450 ,சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 5 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.
- பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
பல்லடம்:
பல்லடம் ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக .,செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
இதன்படி பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியில், வேலம்பாளையம் முதல் வலையபாளையம் வரை சாலை விரிவாக்க பணி, கரைப்புதூர் ஆதிதிராவிடர் காலனி முதல் அறிவொளி நகர் வரை சாலை பலப்படுத்துதல், மாணிக்காபுரம் முதல் அம்மாபாளையம் பிரிவு வரை சாலை விரிவாக்கம் செய்தல், செட்டிபாளையம் ரோடு மின் நகர் பகுதியில் சாலை பலப்படுத்தும் பணி, வடுகபாளையம் புதூர் பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து பொள்ளாச்சி ரோடு வரை சாலை பலப்படுத்தும் பணி, நாசுவம்பாளையம் முதல் பணிக்கம்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணி, காமநாயக்கன்பாளையம் முதல் கிருஷ்ணாபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்தல் பணி, உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதே போல பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்டகவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பி. ஏ.சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடராஜ், நந்தினி சண்முகசுந்தரம், புனிதா சரவணன்,ரோஜாமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் லோகு பிரசாந்த், ஆர்.ஆர்.ரவி, பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக .,நிர்வாகிகள் சாமிநாதன், குமார் ,அன்பரசன், துரைமுருகன், ஆட்டோ குமார், ராஜேஸ்வரன், பாலகுமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், துரைசாமி, சின்னப்பன், ரமேஷ், கோவிந்தராஜ், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, கனகராஜ், சிவாச்சலம், மலைப்பாளையம் சண்முகம், கோபி என்ற கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
உடுமலை:
உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன .அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அமராவதிஆறு, பிரதான கால்வாய் பாசனப்பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பேரில் அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1002.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
ஜூலை 9-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதன் மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்றன. புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் என மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலைஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார்,எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- பெண்களுக்கான குற்ற சம்பவங்களின் போது தொடர்பு கொள்ள வேண்டிய காவல்துறை தொலைபேசி எண்கள் குறித்து பேசினர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் பல்லடம் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு போதை தடுப்பு, போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, கஞ்சா இல்லாத கிராமம், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்லடம் சிறப்பு துணை காவல் ஆய்வாளர்கள் பத்மநாபன், சண்முகம் ஆகியோர் பொதுமக்களிடம் போதையினால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் அளிப்பது, பெண்களுக்கான குற்ற சம்பவங்களின் போது தொடர்பு கொள்ள வேண்டிய காவல்துறை தொலைபேசி எண்கள் போன்றவை குறித்து பொது மக்களிடம் விளக்கி பேசினர். இந்த நிகழ்ச்சியில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிமன்ற உறுப்பினர் முத்துக்குமார்,காவலர் சுரேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது.
- சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
உடுமலை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருணசாமி உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும் ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்
பின்பு செய்தியாளர்களிடம் கூறும் போது,
தினமும் 2000டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர் . ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு உள்ளனர் சர்க்கரை அலையை புனரமைக்க தமிழக அரசு ரூ.250கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
- காய் மற்றும் பழங்கள், விதைகள் போன்ற விவசாய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்துள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது43) .இவரது மனைவி சகிலாபானு (38) . இவர்களின் 15 வயது மகள் தாராபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த 2 தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து செல்லாமல், காளிபாளையத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் உடல் நிலை சரி இல்லை என்று கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி மாணவிக்கு கொடுத்துள்ளனர்.
அதை சாப்பிட்ட மாணவி சுமார் 1 மணி நேரத்தில் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் உடனடியாக 108-ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி உட்கொண்ட மருந்து பெட்டியை கண்ட மருத்துவர்கள் இது ஏற்கனவே 2020-ல் காலாவதியான மருந்து எனக் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தாராபுரம் பகுதியில் காலாவதியான மாத்திரை சாப்பிட்ட மாணவி பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நெல்லையிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.
- இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ெரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ெரயில் நெல்லை சென்றடையும்.
உடுமலை:
நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 3மாதங்களாக இயக்கப்பட்ட iயில் நெல்லையில் வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி வந்து மேட்டுப்பாளையம் வரை இயக்கப்பட்டது.
அதன்பின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக மீண்டும் நெல்லைக்கு சனிக்கிழமை சென்றடைந்தது.தற்போது ஜூலை 2-ந் தேதி முதல் செப்டம்பர் 25-ந் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லையில் புறப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை காலை 4:45 மணிக்கு பொள்ளாச்சி அடையும். அதன்பின் 4:47 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும்.மறு மார்க்கத்தில் திங்கட்கிழமை இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 10:03 மணிக்கு வந்து 10:05க்கு புறப்படும். செவ்வாய்க்கிழமை காலை 7:45 மணிக்கு இந்த ரயில் நெல்லை சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ரெயில்நிலையங்களில் நிறுத்தப்படும். இத்தகவலை தெற்கு ெரயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், பொள்ளாச்சிக்கு அடுத்ததாக போத்தனூர் ரயில்வே சந்திப்பில் வாராந்திர ரயில் நிற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த முறை கிணத்துக்கடவில் நிறுத்தப்பட்ட இந்த ரயில், தற்போது அங்கு நிறுத்தம் செய்ய அறிவிப்பு இல்லை.கிணத்துக்கடவில் ரயில் நிற்காமல் செல்வதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இங்கும் ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும் என கிணத்துக்கடவு ரயில் பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.
- ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
- பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை எழுதி தருகின்றனர். இந்த மனுவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களிடம் கட்டணம் வாங்குகின்றனர். சிலர் பொதுமக்களுடைய பணி வேலைகளை செய்து தருவதாக கூறி அதிக பணம் பெற்று விடுகின்றனர்.
இவர்கள் மத்தியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 76) என்பவர் திருப்பூரில் தங்கி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தனக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையினர் மனு எழுத பேப்பர்களை இலவசமாக தருவதாகவும் மனு எழுத வருபவர்கள் தேநீர் அருந்த ரூ.10, ரூ.20 வலுக்கட்டாயமாக தருவதாக கூறுகிறார். இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சண்முகவேலின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






