search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தை மீட்டு தரக்கோரி  பல்லடம் டி.எஸ்.பி.,அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
    X

    தீக்குளிக்க முயன்ற விவசாயி.

    நிலத்தை மீட்டு தரக்கோரி பல்லடம் டி.எஸ்.பி.,அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

    • வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
    • 6 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் ஜெகநாதன்(வயது 50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கெடு காலம் முடிந்ததால், பெருமாநல்லூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளார். ஏற்கனவே வாங்கிய சிவலிங்கத்தின் கடனை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடன் தொகைக்காக பெருமாநல்லூர் நிதி நிறுவனத்திற்கு கிரைய உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளார். கடன் தொகை செலுத்தாவிடில் நிலம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகி விடும் என்ற ஒப்பந்த அடிப்படையில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் கடன் பெறுவதற்காக, கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்குமாறு நிதி நிறுவனத்தில் ஜெகநாதன் கேட்டுள்ளார்.

    இன்று, நாளை என காலம் தாழ்த்திய அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெகநாதன் வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது அதில் அவரது நிலத்தை,போலியான பத்திரங்கள் தயாரித்து கடந்த 2020 ஆண்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவர் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த நிலையில், மனவேதனையில் இருந்த அவர் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    அருகே இருந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து ஜெகநாதனின் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற காரியங்களில் இனி ஈடுபடக்கூடாது என பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட்சவுமியா விவசாயி ஜெகநாதனுக்கு அறிவுறுத்தினார். துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×